வெள்ளி 07 2019

அதிகாலை கனவு-26
















நண்பரின் நிகழ்வுகளே...கனவாக...










நண்பர் கணத்த உருவாமாய் இருந்தார்... எந்தக் கடையில் அரிசி வாங்கி சாப்பிடுகிறார் என்று கேட்க நினைவு வந்தாலும் அதை கேட்கவில்லை... அவர்தான் தன் வகுப்பு நண்பரிடம் ஆச்சரியமாய் கேட்டார்..

“ எப்படி  நீ அன்று மாதிரியே அச்சு கொளையாமல் இருக்கிறாய்..   இந்தப் பக்கமாய் வண்டியில் போகும்போது எதார்த்தமாய் பார்த்தேன்.  உடனே உன் பெயரும்  நாம் இருவரும் தென்கரை கண்மாயில் குளித்ததும். மறுநாள் பிரையரில் தென்கரை கண்மாயில் குளித்தவர்களை கண்டுபிடிப்பதற்க்காக 
ஹெட்மாஸ்டர் பரிசு வழங்குவதாக அறிவித்தபோது..  மகிழ்ச்சியில் உன்னை பார்த்து  “ சொல்லவடா என்று கேட்டபோது...  பொய்யிடா வேண்டாம்டா ..நம்மள உதைக்க போறாங்கடா என்று நீ சொன்னதை மறுத்த போது என் குண்டியில   ஊக்கால் குத்தியதுதாண்டா  ஞாபத்திற்கு வந்தது.

அதிலிருந்து நீ இந்த வழி எப்படா வருவேன்னு வழிமேல் விழி வைத்து.. உன் மொழியில் சொல்வதென்றால் ஒரு வாரமாய்  கண்ணக்கோல் வைத்து.   பிடித்து விட்டேன்டா...என்று நண்பர் சொன்னதும்  அவருக்கு வாழ்த்துச் சொன்னேன்.

எதுக்குடா வாழ்த்து என்றார்..

என்னை மறக்காமல்..பார்த்தும் விடாமல் என்னை பிடித்து ..பழைய நினைவுகளை பகிர்ந்தமைக்கு என்றபோது... இன்னும்சில நிகழ்வுகள் இருக்கு சொல்கிறேன்... முதலில் உன்னைப் பற்றி சொல்... என்றார். என்ன தொழில் செய்கிறாய், பிள்ளை குட்டி  ,எல்லா விபரத்தையும் சொல் என்றபோது... முதலில் உன்னைப்பற்றி  சொல்.... பிறகு என்னைப் பற்றி சொல்கிறேன்.

முதலில் முக்கியமானவற்றை  சொல்கிறேன்.. மற்றவைகளை பிறகு சொல்கிறேன்...  சுற்றி நின்றிருந்தவர்களை ஒரு முறை பார்த்துவிட்டு..  வா..நடந்துகொண்டே பேசலாம் என்று சொல்ல... புரிந்து கொண்ட நான்  சரி என்று அவருடன் சேர்ந்து .. சிறிது தூரம் நடப்பதும் பின் ஒதுக்குப்புறமாக நின்று பேசுவதுமாக இருந்தோம்..

“ கௌசு  தெரியுமில்ல...”  என்ன  தெரியலையா.... கௌசல்யா...நம்ம பள்ளிக்கு அடுத்த கேல்ஸ் ஸ்கூல்ல படித்த கௌசல்யா..... சர்ச்சுக்கு போறப்ப...சைட் அடிப்போம்ல....

நான் எப்ப சைட் அடிச்சேன்    .....

ஓ..... நீயில்ல....சரி..பொரு.. உனக்கு ஞாபகத்துடுறேன்....சயின்ஸ் வாத்தியாரு வீட்டுக்கு போவேம்ல..... அங்க ஒரு அம்மா வீட்டு வேல பாத்துச்சுல....அந்த அம்மாவோட பொன்னு கௌசல்யா....இப்ப தெரிஞ்சுருச்சா....

ஆமா....ஆமா.... அது  பேரு கௌசல்யாவா.......???

பேரு என்னவாக இருந்தட்டு போகட்டும் ஞாபகம் வந்திருச்சுல......விடு..

கௌசல்யா என் லவ்வர்.....தெரிஞ்சுக்கோ...?

அப்படின்னா..அவுங்கதான் உன் மனைவியா...?

என் மனைவியா அமைவதற்கு எனக்கு கொடுத்து வைக்கல..... ஆனா  இன்னவரைக்கும்  ......என் லவ்வர்....எனக்கு ரெண்டு பசங்க..ஒரு பொண்ணு... கௌசுக்கு ரெண்டு பசங்க..ஒரு பொண்ணு....எல்லோரும் நல்ல நிலைமயில இருக்கோம்....நம்ம குருப்புல.. நீ ஒருத்தன்தான் இப்படி  கல்யாணம் செய்யாமல்....எதையும் அனுபவிக்காமல்....மறதி மன்னனாட்டம்.....

சரி...வா.. அந்த முதியவரிடம் சென்று  உன்னை சோதிப்போம்.. என்ன சொல்கிறார் என்று கேட்போம்.

அந்த முதியவர் நண்பரைக் கண்டதும் வணக்கம் சொன்னார்... வந்த விசயம் என்னவென்று கேட்காமல் நண்பரின் முகத்தையே பார்த்தார்.

நண்பர்  சொன்னார்....இவர் என்னுடைன் பள்ளியில் படித்த நண்பர்... திருமணம் முடிக்காமல் பல செட்டப்புடன் இருக்கிறார்..... ஏகப்பட்ட கெட்ட பழக்கத்துடன் குடியும் கூத்தியுமாக இருக்கிறார்.... இவரை திருத்துவதற்கு அதிலிருந்து விடுபடுவதற்கு என்ன செய்யலாம்...நோய் நோக்காடு.....என்று மெதுவாக இழுத்தார்...

அந்த முதியவர் என்னை ஏற இறங்க பார்த்தார் இரு கால்களை நீட்டச் சொல்லி பாரத்தார் .பின் இரண்டு உள்ளங்  கைகளையும் பார்த்தவர் . நண்பரிடம் சொன்னார்

 உங்க நண்பர் திருமணம் ஆகாதவர்,... அவரிடம் எந்த கெட்ட பழக்கமும் இல்லை. எந்த கோளாறும் இல்லை.....இதுநாள்வரை அவருக்கு கால் பழக்கமும் இல்லை  ..கைப்பழக்கமும் இல்லை... கடும் உழைப்பாளி.... என்றவரிடம் நண்பர் எதோ மெதுவாக சொல்ல அந்த முதியவர் சிரித்து கொண்டே.. இல்லையில்லை என்று. நண்பரிடம் மெதுவாக எனக்கு கேட்காதவாறு எதோ சொன்னார்...


என்னப்பா... நான் சொன்னதை நம்பாமல் அந்த முதியவர் சொல்வதை நம்புறயப்பா......என்றபோது...


நம்ப முடியாமல்தானப்பா  நான் அவரிடம் கேட்டேன்... எப்படி உன்னால் இருக்க முடிந்தது... உடல் கோளாறா....ஆண்மையின்மையா என்று தெரிஞ்சுக்கதானப்பா கேட்டேன்...ஆஸ்பத்திரியல் டெஸ்ட் எடுத்து தெரிஞ்சுக்கிறத விட...  நாடி,சுத்தி வைத்தியர்களிடம் காட்டினால் என்னவென்று தெரிஞ்க்கிறலாம்ப்பா....அந்த முதியவர் லேசுபட்டவர் இல்ல.....ரெம்ப அனுபவம் உள்ளவர்.... என்றார்.

இனி..  நீ எதைச் சொன்னாலும் நம்புறேன்பா.......  ஆமா...எப்படியப்பா.. அந்தக்காலத்த கடத்தின என்று வியப்பாய் கேட்டார்..

எனக்கும்தான் வியப்பாக இருந்தது .. அந்த காலத்தை கடத்தியது...

 ஒன்பதாம் வகுப்பில் இரண்டு வருடம் பத்தாம் வகுப்பில் ஒரு வருடம் ஆக மூன்று வருடங்கள் ஒரே வகுப்பில்  அடுத்தடுத்த இருக்கையில் இணைபிரியாமல்  சேர்ந்திருந் படித்த நண்பர்.. முப்பதைந்து வருடத்துக்கு பின் என்னை அடையாளம் கண்டு தன் வேலை ஆட்களுடன் என்னை வழி மறிக்க...அவர் யாரென்று தெரியாமல்  நிற்க!...அவரே நட்பின் சம்பவத்தை விவரிக்க பின் அவனை தெரிந்து  ஆச்சரியமாய. நான் வாய் பிளக்க...  பின் என்னைப்பற்றி கேட்டபோது   என் கதையை அவர்க்கு சொல்ல... அவர் கதையை எனக்கு சொல்ல....... இந்த சம்பவமே எனக்கு கனவாக வந்தது... .

8 கருத்துகள்:

  1. பல நினைவுகளே நமக்கு கனவுகளாக வருகின்றன.

    பதிலளிநீக்கு
  2. நனவின் பலன்களே கனவுகள் என்பார்கள்,
    மற்றபடி அப்படியெல்லாம் இருக்க வாய்ப்பது பெரும் தவமே,
    அப்படி வாய்க்கப்பெற்றவர்கள் ஒருவகையில் பார்த்தால் பாக்கியசாலிகள்தான்,,/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால..நண்பர்களும் மற்றவர்களும் என்னை துர்பாக்கியசாலி என்கிறார்களே!!அதை என்னவென்று சொல்வது....

      நீக்கு
  3. நினைவுகள் உருளும் உள்ளம் மனிதருக்கே

    பதிலளிநீக்கு
  4. மனிதர்களுக்கு மட்டும்தானா நினைவுகள்..???

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...