சனி 06 2019

அதிகாலை கனவு-37

கேள்வி கேட்டது குத்தமாய்யா.........



நந்தினி ஆனந்தன் க்கான பட முடிவு









உங்க பெயர் ...?.

நந்தினி

அப்பா பெயர்...??

ஆனந்தன்.

இருப்பிடம்...???

புதுார். மதுரை.

உங்க மேல் என்ன வழக்கு என்று தெரியுமா..????

தெரியும்...பொய் வழக்கு...


அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும்  .அரசு ஊழியரை தாக்கியதாகவும் வழக்கு

(நடப்பு  என்னவென்றால்....டாஸ்மாககை எதிர்த்து தனிநபராக எந்தவொரு கட்சி, அமைப்பு எதுவும் ஆதரவின்றி தனியாக தந்தையும் மகளுமாக    தொடர்ந்து டாஸ்மாக்கை எதிர்த்து போராடி வருகிறார்கள். இவர்கள் மேல் நூற்றுக்கும் குறையாத வழக்குகள் உள்ளன. அதில் ஒரு வழக்குதான் திருப்பத்தூர் பஸ் நிலையத்தில்  டாஸ்மாக்கு எதிராக துண்டு பிரசுரம் கொடுத்து கொண்டு இருப்பதை தடுத்து கைது செய்யப்பட்டடு வழக்கு பதியபட்டது அந்த வழக்கில்தான் விசாரணை நடைபெற்றுக் கொண்டு இருந்தபோது..  வழக்கின் சாட்சியான வரை பார்த்தும் விசாரணை நீதிபதியிடம் கேட்ட கேள்வி  )

 இபிகோ செக்சன் 328ன்படி போதை பொருள் விற்பது கடுமையான குற்றம். அப்படி இருக்கும்போது...  அரசே மதுபானம் விற்கிறது. அந்த மதுபானம் உணவு பொருளா..? அல்லது வேறு பொருளா? அல்லது மபோதை பொருளா..??



இந்தா...? இப்படியெல்லாம்.. கேள்வி கேட்க உரிமை இல்லை.. இப்படி கேள்வி கேட்பது நீதிமன்ற அவதிப்பாகும்...!!!

இல்லை இது என் வழக்கு.. பொய் வழக்கில் குற்றசாட்டப்பட்டுள்ளேன்..இதில் கேள்விகேட்டு வழக்காட எனக்கு உரிமை உள்ளது...

கத்தி பேசினாலும் நீதிமன்ற அவமதிப்புதான்  இவர்களை சிறை வைக்க உத்தரவிடுகிறேன்.

இது அநியாயம்... இது என் கருத்துரிமையை பறிக்கும் செயல்....


மகளும் தந்தையும் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்படுகிறார்கள்....


முகநூல், வாட்ச்சாப், டிவிட்டர் அணைத்திலும் நந்தினிக்கு ஆதரவாகவும் கருத்துகள் பகிரப்படுகின்றன..


நந்தினி சார்பாக இருவருக்கும் விடுதலை  செய்யகோருகிறோம்.-சமூக ஆர்வலரான-வக்கில்கள்.


நல்லது...அவர்களை கேள்வி கேட்டது தவறு, சத்தமிட்டது, தவறு என்று மன்னிப்பு கடிதம் எழுதிதரச் சொல்லுங்கள்..! விடுதலை செய்கிறேன்

நந்தினியும் அவர் தந்தையும்   மன்னிப்பு கடிதம் எழுதி கொடுக்க மாட்டோம். மன்னிப்பு கடிதம் கொடுத்து விடுதலை ஆக வேண்டிய அவசியம் இல்லை. எப்போது விடுதலை செய்கிறார்களோ.. அப்போது சட்ட விரோத கைதால் நின்று போன  நந்தினியின் திருமணத்தை நடத்திக் கொள்கிறோம்...


  தந்தையையும் சகோதரியையும் சட்ட விரோதமாக சிறையில் வைத்ததைக் கண்டித்து சட்டக்கல்லூரியில்  ஐந்தாம் ஆண்டில் படிக்கும் நந்தினியின் தங்கை சட்டக் கல்லூரியின் முன்  திங்கள் கிழமை காலையில் உண்ணாவிரதம் இருக்கிறார்...


திடுக்கிட்டு விழித்தபோது....மேல நெடந்தவைகள் எல்லாம் நிணைத்து கொண்டு மீண்டும் படுத்தக் கொண்டேன்... அதிகாரமில்லாதவர்கள் அதிகாரத்தை எடுத்துக் கொண்டார்கள்.. அதிகாரம் செலுத்து வேண்டியவர்கள் எல்லாம் அடி உதையிலும் பொதையிலும் மிதந்து கொண்டு இருப்பதுதான் கனவில் தெரிந்தது..

4 கருத்துகள்:

  1. நடப்பு நீதி கனவிலும் வருகிறதே...
    அதிலாவது நியாயமான நீதி'பாதி வரவில்லையே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாதியிலே விழித்துவிட்டதால் பாதி வரவில்லை நண்பரே!!

      நீக்கு
  2. மதுபானம் உணவு பொருளா அல்லது வேறு பொருளா? அல்லது போதை பொருளா என்று கேள்வி கேட்டதை நீதிமன்றத்தை அவமதிப்பது என்று நீதிபதி சொல்லி சிறை வைக்க உத்தரவிட்டது அநீதியானது. மதுபானத்தை நந்தினி இப்படியெல்லாம் அவமானபடுத்திவிட்டாரே என்றே நீதிபதி கோபமடைந்துள்ளார் போல் தெரிகிறது.
    நந்தினியின் சகோதரியும் கைது செய்யபட்டுள்ளார் என்று செய்தி கண்டேன்.
    இவர்கள் தமிழக மக்கள் மது அருந்தி நாசமாக போக கூடாது என்பதிற்காக தங்களது எதிர்காலத்தை வீணாக்குவதில் எனக்கு சிறிதும் உடன்பாடில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் உடன்பாடில்லைதான்.. ஆனால் தமிழ்மக்கள் நாசமாவதை தடுக்க முடியாது என்று ஒரு சதி இருக்கிறதே!!

      நீக்கு

தங்களின் கருத்துரை

எது அகிம்சை.!....எது தீவிரவாதம்.!!

  சுரண்டுபவன் ஆயுதம் ஏந்தினால் அது அகிம்சை.. சுரண்டுபவனால் பாதிக்கப்பட்டவர் நகம் வளர்த்தாலும் அவை தீவிரவாதம் ---நன்றி! கீழடி பதிப்பகம்