வெள்ளி 09 2019

அதிகாலை கனவு-48.













சிவப்பு கலர் எனக்கு பிடித்தமான கலர். அந்தக் கலரில் கார் அமைந்துவிட்டதில்  மகிழ்ச்சி, அதிலும் அந்தக் காரில் கியர் இல்லாதது பெரு மகிழ்ச்சி.... முன் பணம் கூட வாங்காமல் காரை எடுத்துச் செல்ல அனுமதித்துவிட்டது  இன்ப அதிர்ச்சி.. மாதாமாதம்  பணத்தை செலுத்தினால் போதும் என்றார்கள்.

கம்பெனி மைதானத்தில் வண்டியை ஓட்டி பார்த்தில் அளவிலா ஆனந்தம். பரம திருப்தி... சும்மா பஸ்ட் கியர் செகண்ட கியர். டாப் கியர் போட வேண்டிய வேலையே இல்லை... ஆக்சிலேட்டரை மிதிக்க மிதிக்க வண்டி தீயாய் பறக்குது... இனி என்ன ? ட்ரெயின். பிளைட்டுன்னு அலைய வேண்டியதில்லை.. வண்டியிலே  எங்கு வேண்டுமானாலும் சென்று வரலாம்..
எங்கு செல்லலாம் என்று பட்டியல் போட்டதில் ஏழு அதிசியங்களின் ஒன்றான ஈகில் டவர் முன்னால் வந்தது.

அடுத்த நொடியில் வண்டி பறந்தது. பாரீசை நோக்கி......ஈாகிள் டவர் முன்னால் வண்டியை நிறுத்தி அருகில் விற்றுக் கொண்டிருந்த  பாரின் குச்சி மிட்டாயை வாங்கி டவரை அண்ணாந்து பார்த்தபடி சப்பிக் கொண்டே பார்த்தது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.....   

அங்கிருந்து இனி எங்கு போகலாம் என்று யோசித்தபோது...  செல் போன் மணி அடித்தது.... கிழக்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் ராசு  அங்கு வரும்படி பேசினார்.

மறு வினாடியில் கிழக்கு ஆப்பிரிக்காவை நோக்கி நாலு டயரும் விரைந்தது



 கிழக்கு ஆப்பிரிக்காவை நோக்கி செல்லும் வழியில்  எனக்குமுன்னால் பல கார்கள் நின்று கொண்டிருந்தன என்னவென்று விசாரித்தபோது ஐந்தாறு சிங்கங்கள் சாலையை மறித்து மறியல் போராட்டம் நடத்திக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்கள்..  பல மணி நேரம் ஆகியும் சிங்கங்களின் அமைதி வழி மறியல் போராட்டம் முடிவதாக இல்லை ..

தமிழ்நாட்டு போலீஸ் மட்டும் அங்கு இருந்திருந்தால்.. குண்டுகட்டாக கட்டியோ, அல்லது லத்தியால் ஓட ஓட விரட்டி அடித்தோ....அல்லது  வண்டி மீது ஏறி நின்று அத்தனை மறியல் செய்யும் சிங்கங்களையும் டூமில் ..டூமில் டூடுமில் என்று தூத்துக்குடி மக்களை சுட்ட மாதிரி சுட்டு  வழியை ஏற்படுத்தி இருப்பார்கள்..... சே  என்ற போது.. சாலையை மறித்து படுத்துகிடந்த சிங்கம் ஒன்று எழுந்து என்னை நோக்கி வந்தது.

பயத்தால் திடுக்கிட்டு விழித்த பின் ....அட அடடா... கிழக்கு ஆப்பரிக்காவில் இருக்கும் ராசுவை பார்க்க முடியாம செய்துவிட்டதே இந்த சிங்கங்கள் என்று   நிணைக்காமலில்லை..

6 கருத்துகள்:

  1. அடடே இதுவும் நல்லாத்தான் இருக்கு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுக்கு பேரு..பேராசை கனவு ன்னு ஒரு நண்பரு சொன்னாரு...!!

      நீக்கு
  2. பதில்கள்
    1. பக்கத்தில் இருக்கிற திருமலை மகாலை் வழியாகத்தான் பலமுறை ஒருதடவைகூட அந்த மகாலை இதுவரைக்கும் பார்க்க முடியவில்லை..இந்த லட்சணத்தில் ஈகிள் டவரை பார்த்தாக கனவு வருகிறது.. இதுக்கு பேருதான் ஆதங்கக்கனவு...

      நீக்கு
  3. பதில்கள்
    1. நடக்காத..நடக்கமுடியாதவைகள் எல்லாம் கனவுல வந்தால் அது நல்ல கனவுதான்.........

      நீக்கு

தங்களின் கருத்துரை

எது அகிம்சை.!....எது தீவிரவாதம்.!!

  சுரண்டுபவன் ஆயுதம் ஏந்தினால் அது அகிம்சை.. சுரண்டுபவனால் பாதிக்கப்பட்டவர் நகம் வளர்த்தாலும் அவை தீவிரவாதம் ---நன்றி! கீழடி பதிப்பகம்