பகத்சிங்கை தூக்கில் போட நாள் குறித்த நல்லவரைப் பற்றி......
மக்களை சுட்டுப்பொசுக்கு அது தான் உனது கடமை எனவே கடமையை செய் என்று வெள்ளைக்கார துரையை போல சிப்பாய்களுக்கு கட்டளையிட்ட இந்த அகிம்சா மூர்த்தி தான் பகத் சிங்கைத் தூக்கிலிட இர்வின் பிரபுவுக்கு நாள் குறித்துக் கொடுத்தார். அதாவது பகத் சிங்கைத் தூக்கிலிடுவதாக இருந்தால் லாகூர் மாநாட்டிற்கு முன்பே தூக்கிலிட்டு விடுமாறு இர்வினுக்கு கடிதம் எழுதியவர் தான் இந்த பாபுஜி. இந்த சம்பவத்தை காந்தியின் முதல் வாழ்க்கை வரலாறு நூலை எழுதிய பட்டாபி சீதாராமையா (காங்கிரஸ்) (காந்தியால் நேதாஜியை எதிர்த்து காங்கிரஸ் தலைமைக்கு களமிறக்கப்பட்டவர்) தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். இந்த செய்தியை அறிந்த பஞ்சாப் மக்கள் காந்தியை எதிர்த்து பல ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். காந்திக்கெதிராக நடந்த இந்த ஒவ்வொரு ஆர்ப்பாட்டங்களிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து இர்வின் கீழ்கண்டவாறு கூறினார்
” மக்கள் காந்தியை உடனடியாக ஒழித்துக்கட்ட,பலாத்காரமாக நசுக்க ஆயத்தமாயிருந்தனர்” . (ஆதாரம்: Earl Of Birhenhead P. 305).
நன்றி!! செங்கொடி,புமா.இமு.
காந்தியின் கொலை வெறி குணம் பற்றிய செய்திகள் பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குநிற்க.
சாதி கொலை வெறி காந்திக்கு 'அவர் இவர்', இர்வினுக்கு 'அவன் இவனா'? இந்திய அரசியல்வாதிகளைவிட ஒழுக்கத்தில் சிறந்தவர்கள். உடன் கட்டை ஏறுதல் உட்பட பல இந்து மத மூட நம்பிக்கை பழக்க வழக்கங்களுக்கு ஆங்கிலேயர்கள் சட்டங்கள் இயற்றி எளிய மக்களை பிராமணீய பூதங்களின் அழிவிலிருந்து காப்பாற்றினர். ஆங்கிலேய ஆட்சியில் சமத்துவம் இருந்தது. இதற்காகத்தான் சுதந்திர தினத்தை கறுப்பு தினமாக பெரியார் அறிவித்தார்.
தவறை திருத்தி விட்டேன்.தவறை சுட்டிகாட்டியதற்கும் பெரியார் பற்றிய தகவலுக்கும் நன்றி! திரு.மாசிலா அவர்களே!!!
பதிலளிநீக்கு