ஞாயிறு 27 2026
வாசாந்தியும் தேவசாதி படைப்பும்
திங்கள் 14 2026
தோற்றுப் போனவன்.........
வெற்றி அடைந்தவர்களை
விட தோற்றுப் போனவர்கள்தான்
அதிகம். அந்த அதிகத்தில்
நானும் ஒரு துளி....
அறிவே இல்லாதவர்கள்
அறிவாய் பேசுவதை
பார்த்து நானும்
அறிவை வளர்க்க
படாத பாடு பட்டேன்
பாடு பட்டதுக்கு பலன்
கிடைக்கவே இல்லை
அறிவாளி ஒருவரிடம்
கேட்டேன் அறிவு
வளர்வதற்கு ஒரு
வழி சொல்லுங்கள்
என்று...............
அவர் சொன்னார்
அடிமைகளுக்கு அறிவு
வளர வாய்ப்பே இல்லை
என்று..அய்யோ அறிவு
வளா்ப்பதற்கு வாய்ப்பே
இல்லையா...? முட்டி மோதி
சுவரில் அல்ல...யோசித்தேன்
எனக்கும் ஒரு ஞானயோதம்
உருவாகியது.. அறிவுக்கு
பதிலா மயிர் வளர்ப்போம்
அந்த மயிர் வளர்வதற்கு
தேங்காய் எண்ணெய்
மட்டும் போதும்
வளர்த்தேன் பல
காலமாய் பெண்களே!
பொறாமை பட்டார்கள்
நான் ஆணா, பெண்ணா
என்று.. இன்று அந்த
மயிர்க்கும் பங்கம்
வந்துவிட்டது. அடிக்கிற
வெயிலில் தாக்கு
பிடிக்க முடியாமல்
பொடுகு வைத்து
நோட்டு கட்டு போல்
கத்தை கத்தையாக
பட்டை பட்டையாக
செதில் செதிலாக
நெட்டையும் குட்டையமாக
உரியத் தொடங்கிவிட்டது
பேன் என்ற விலங்கினம்
இல்லாமல் அரிக்கவும்
செய்தது. கண்ட
இடங்களில் சொரிந்து
விடுவதை தடுக்க
இதுதான் வழி
என்று புலப்பட்டது.
அறிவும் வேண்டாம்
மயிரும் வேண்டாம்
பல தோல்வியுடன்
பாண்டியனின் சலூன்
கடைக்கு சென்று
வரிசையில் உட்காரமல்
மொட்டை பெயரோடு
வெளியே வந்தேன்....
ஞாயிறு 06 2026
அதிகார திமிரும் சாதி வெறியும் ஒரு உயிரை பறித்தது.
உசிலம்பட்டிக்கு அருகிலுள்ள தொட்டப்பநாயக்கனூரில் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள மாணவி நிஷாந்தினி - தற்கொலை.
வெள்ளி 14 2026
இந்தீ யாவில் கோலோச்சும் ஆரியவர்த்தம்
முன்பு ஜெகஜீவன்ராம் சனவரி 24ந்தேதி 1978ம் வருடம் வாரணாசியில் முதல்வராக இருந்த சம்பூரணாந்தா சிலையை திறந்து வைத்தபோது நடந்த நிகழ்வே தற்போது மல்லிகார் கார்கேவுக்கும் நடந்திருக்கிறது
ஜெகஜீவன் அப்போது இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சராக. இருந்தாலும் சிலை தீட்டாகிவிட்டது என்று பிணங்கள் மிதக்கும் கங்கை நீரைக் கொண்டு சிலையை கழுவினார்கள் ஆரிய சனாதனிகள்..
8.08.2026- உத்தரகாண்ட் இராம்லீலா மைதானத்தில் நடத்த பொதுக்கூட்டத்தில் கார்கே பேசியதற்க்காக ராம்லீலா மைதானத்தின் மேடை தீட்டாகி விட்ட தென்று சொல்லி அதே பிணங்கள் மிதக்கும் கங்கை நீரைக் கொண்டு கழுவி, யாகம் வளர்த்து தீட்டை கழித்தாக மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்.. சிறி ராம் தர்மார்த் சேனா வினர்.
சுதந்திரம் பெற்றதாக சொல்லபட்ட என்பது ஆண்டுகள் ஆனாலும் ஆர்யத்தின் கொடுரங்கள் மேலும் வளர்ந்திருக்கின்றன..
தமிழ்நாட்டில்..
1946-ல் திருவையாறு தியாக பிரம்ம உற்ற் சவம்! நிகழ்ச்சியில் தண்டபாணி தேசிகர் ” சித்தி விநாயகனே” என்று தமிழில் பாடியதால் .. மேடை தீட்டாகி விட்டது என்று அடுத்து வந்த ஆரியக்குடி ராமானுசம் பாட மறுத்துவிட்டார்
இசை நிகழ்வில் தண்டபாணி தேசிகர் "சித்தி விநாயகனே" எனப்பாடினார்!
அடுத்து வந்த அரியக்குடி இராமானுஜம் அய்யங்கார் தண்டபாணிதேசிகர் தமிழில் பாடியதால் மேடை தீட்டாயிடுத்து என்று சொல்லி பெருங்கலவரம் செய்து பாட மறுத்துவிட்டார்!
மேடையை தீட்டு கழித்த பின்தான் பாடினான் ஆரியக்குடி
இந்தீ யாவில மனிதர்கள் சிலையை தொட்டாலே தீட்டு!‘ தமிழில் பாடினால் தீட்டு!! மேடையில் பேசினால் தீட்டு!!! நடந்தால் தீட்டு!!!! பார்த்தால் தீட்டு!!!! பாடினால் தீட்டு !!!!!!!!!!! என்கிற சனாதனா கொடூரங்களில் கோலோச்சுகிறது ஆரியவர்த்தம் .
வியாழன் 13 2026
உங்களால் நம்ப முடியுமா...
துயரங்கள் நிறைந்த
இந்த உலகத்தை
எல்லாம் வல்ல
எல்லாவித நண்மை
செய்யும் கடவுளால்
வேண்டுமென்றே படைத்தார்
என்று உங்களால்
நம்ப முடியமா.............???????
வெள்ளி 31 2026
இங்கிலாந்து மண்ணில் புதைக்கப்பட்ட இந்திய தியாகச் சிங்கம்
"என்னை தூக்கில் போட்டவுடன் இங்கிலாந்து மண்ணிலேயே என் உடலை புதைத்துவிடுங்கள்.
இத்தனை ஆண்டுகள் இந்திய மண்ணை இங்கிலாந்து ஆண்டது போல், இங்கிலாந்தின் ஆறடி மண்ணை ஓர் இந்தியன் நிரந்தரமாக அபகரித்துக்கொண்டான் என்பது ஒரு மாறாத அவமானமாக உங்களுக்கு அமையட்டும்"
ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்த்தியவர்களை
21 ஆண்டுகள் காத்திருந்து தன் மூச்சு,செயல்,வாழ்வு அனைத்தையும் இதற்க்கு மட்டுமே அர்பணித்து பழி வாங்கிய இந்திய சுதந்திர போராட்ட போராளி
உத்தம்சிங். தன்னை தூக்கிலிடும் முன்பு கூறிய வரிகள் இவை.
அந்த மாவீரன் உத்தம்சிங் நினைவு தினம் இன்று!
இந்திய வரலாற்றின் மறக்க முடியாத ஜாலியன் வாலாபாக் கோரச் சம்பவம், 15 நிமிடங்களுக்குள் நடந்தேறியது.
1000 பேருக்கும் மேலான மக்கள் ஜெனரல் டயர் என்பவனால், கொன்று குவிக்கப்பட்டனர்.
2,000 பேருக்கும் அதிகமானோர் குற்றுயிரும் குலைஉயிருமாகத் துடித்துக்கொண்டு இருந்தனர்.
ஒவ்வொரு துப்பாக்கி வீரனும் 33 ரவுண்ட் சுட்டு இருந்தான். மொத்தம் 1,650 ரவுண்ட் சுடப்பட்டது. செத்து விழுந்த உடல்கள் ரத்த வெள்ளத்தில் மிதந்தன. தப்பிப் பிழைத்தவர்கள், நடக்க முடியாமல் வீதியில் விழுந்து கிடந்தனர்.
"என்னை மதிக்காத இந்தியர்களுக்கு நான் அளித்த தண்டனை இது.
ஒரு ராணுவ அதிகாரியாக இந்தச் செயலுக்காக நான் சந்தோஷம் அடைகிறேன்.
என்னிடம் இன்னும் அதிக ஆயுதங்கள் இருந்திருந்தால், அதிக நேரம் சுட்டிருப்பேன்’ என்று வெளிப்படையாகத் தெரிவித்தான் ஜெனரல் டயர்.
.இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் 'மார்னிங் போஸ்ட்’ என்ற பத்திரிகை ஜெனரல் டயரை 'வெற்றி நாயகன்’ என்று பாராட்டி எழுதியது..
ஜாலியன் வாலாபாக் படுகொலை, இந்தியாவை உலுக்கியது. அந்தப் பாதகச் செயலுக்கு காரணமாக விளங்கிய பஞ்சாப் கவர்னர் மிக்கேல் ஓ டயர் மற்றும் ஜெனரல் டயர் ஆகியோரைப் பழிவாங்குவேன் என்று, உத்தம்சிங் என்ற பஞ்சாப் இளைஞன் சபதம் செய்தான்...
சொன்னபடியே சரியாக 21 ஆண்டுகள் காத்திருந்து இங்கிலாந்தில் எச்சில் தட்டு கழுவி, கூலி வேலை செய்து கிடைத்த பணத்தில் துப்பாக்கி வாங்கி 1940-ம் ஆண்டு மார்ச் 13-ம் தேதி கவர்னர் ஓ டயரைச் சுட்டுத் தள்ளினார் உத்தம் சிங்.
உத்தம் சிங்கின் செயல் இந்திய மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
ஓ டயரை கொலை வழக்கில், உத்தம் சிங்குக்கு தூக்குத் தண்டனை விதித்தது இங்கிலாந்து நீதிமன்றம்.
"தூக்கில் போட்டவுடன் இங்கிலாந்து மண்ணிலேயே என்னைப் புதைத்துவிடுங்கள்.
இத்தனை ஆண்டுகள் இந்திய மண்ணை இங்கிலாந்து ஆண்டது போல், இங்கிலாந்தின் ஆறடி மண்ணை ஓர் இந்தியன் நிரந்தரமாக அபகரித்துக்கொண்டான் என்பது ஒரு மாறாத அவமானமாக உங்களுக்கு அமையட்டும்"
எனறு, முழங்கினர் உத்தம் சிங்.
“தியாகச்சிங்கம்” என அழைக்கப்பட்ட அவரது உடல் சீக்கிய மதச்சடங்குகளுக்கு தடைவிதிக்கப்பட்டு சிறைச்சாலையில் புதைக்கப்பட்டது
அந்த மாவீரனின் நினைவு தினம் இன்று,
திங்கள் 27 2026
நிலை மாறும் தொழில்கள்....
கோடாக் கேமரா நிறுவனம் நினைவிருக்கிறதா? 1997 ஆம் ஆண்டில், கோடாக்கில் சுமார் 1,60,000 பணியாளர்கள் இருந்தனர். உலகின் 85% புகைப்படம் எடுத்தல் கோடாக் கேமராக்கள் மூலம் செய்யப்பட்டன. கடந்த சில ஆண்டுகளாக மொபைல் கேமராக்கள் அதிகரித்து வருவதால், கோடாக் கேமரா நிறுவனம் சந்தையை விட்டே போய்விட்டது. கோடாக் நிறுவனம் முற்றிலும் திவாலானது மற்றும் அதன் ஊழியர்கள் அனைவரும் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
அதே நேரத்தில் மேலும் பல பிரபல நிறுவனங்கள் தங்களை நிலை நிறுத்திக்கொள்ள போராட வேண்டியதாயிற்று.
எச்எம்டி (கடிகாரம்) பஜாஜ் (ஸ்கூட்டர்) டயனோரா (டிவி) மர்பி (ரேடியோ) நோக்கியா (மொபைல்) ராஜ்தூத் (பைக் ) அம்பாசிடர் (கார்)
போன்ற எந்த நிறுவனமும் மோசமான தரத்தைக் கொண்டிருக்க வில்லை. இந்த நிறுவனங்கள் ஏன் தாக்குப் பிடிக்க முடியவில்லை? ஏனென்றால் காலப்போக்கில் அவர்களால் தங்களை எதிர் காலத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்ள முடியவில்லை.
தற்போதைய தருணத்தில் அடுத்த 10 ஆண்டுகளில் உலகம் எவ்வளவு மாறக்கூடும் என்று நீங்கள் கனவில்கூட நினைத்திருக்க மாட்டீர்கள்! இன்றைய 70%-90% வேலை வாய்ப்புகள் அடுத்த 10 ஆண்டுகளில் முழுமையாக போய் விடும். மெதுவாக "நான்காவது தொழில் புரட்சி" யுகத்தில் நுழைகிறது
இன்றைய பிரபலமான நிறுவனங்களைப் பாருங்கள்-
UBER என்பது ஒரு மென்பொருள் பெயர். அவர்களிடம் சொந்தமாக கார்கள் இல்லை. இன்று உலகின் மிகப்பெரிய வாடகை டாக்ஸி நிறுவனம் UBER ஆகும்.
Airbnb இன்று உலகின் மிகப்பெரிய ஹோட்டல் நிறுவனமாகும். ஆனால் வேடிக்கை என்னவென்றால், அவர்களுக்கு உலகில் சொந்தமாக ஒரு ஹோட்டல் கூட இல்லை.
இதேபோல், Paytm, Ola Cab, Oyo போன்ற எண்ணற்ற நிறுவனங்களின் உதாரணங்களைக் கொடுக்கலாம்.
இன்று அமெரிக்காவில் புதிய வழக்கறிஞர்களுக்கு வேலை இல்லை, ஏனென்றால் IBM Watson என்ற சட்ட மென்பொருள் மூலம் எந்தப் புதிய வழக்கறிஞரையும் விட மிகச் சிறப்பாக வாதிட முடியும். இதனால், கிட்டத்தட்ட 90% அமெரிக்க வழக்கறிஞர்களுக்கு அடுத்த 10 ஆண்டுகளில் எந்த வேலையும் இருக்காது. மீதமுள்ளது 10% நிபுணர்கள் மட்டுமே இருப்பார்கள்.
புதிய டாக்டர்களுக்கும் வேலை இல்லாமல் போகும். வாட்சன் மென்பொருள் மூலம் புற்று நோய் மற்றும் பிற நோய்களை மருத்துவர்களை விட 4 மடங்கு துல்லியமாக கண்டறிய முடியும். கணினி நுண்ணறிவு 2030 க்குள் மனித நுண்ணறிவை மிஞ்சும்.
இன்றைய கார்களில் 90% அடுத்த 20 ஆண்டுகளில் சாலைகளில் காணாமல் போய் விடும். மீதமுள்ளவைகள் மின்சாரம் அல்லது ஹைபிரிட் கார்கள் மூலம் இயங்கும். சாலைகள் மெதுவாக காலியாகிவிடும். பெட்ரோல் நுகர்வு குறைந்து, எண்ணெய் உற்பத்தி செய்யும் அரபு நாடுகள் மெல்ல மெல்ல திவாலாகிவிடும்.
கார் வேண்டும் என்றால் உபெர் போன்ற மென்பொருளிடம் தான் கேட்க வேண்டும். மேலும் நீங்கள் கார் கேட்டவுடனேயே முற்றிலும் டிரைவர் இல்லாத கார் வந்து உங்கள் வீட்டு வாசலில் நிற்கும். நீங்கள் ஒரே காரில் பலருடன் பயணம் செய்தால், ஒரு நபருக்கு ஒரு காரின் வாடகை பைக்கை விட குறைவாக இருக்கும்.
ஓட்டுநர் இல்லாமல் வாகனம் ஓட்டினால் விபத்துகளின் எண்ணிக்கை 99% குறையும். இதனால்தான் கார் இன்சூரன்ஸ் நிறுத்தப்படும் மற்றும் கார் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு வேலை இல்லாமல் போகும்.
உலகில் கார் ஓட்டுனர்கள் இனி பிழைக்க வழி இருக்காது. 90% வாகனங்கள் சாலையில் காணாமல் போகும் போது, போக்குவரத்து போலீசார் மற்றும் பார்க்கிங் பணியாளர்கள் தேவைப்பட மாட்டார்கள்.
யோசித்துப் பார்த்தால்.., 10 ஆண்டுகளுக்கு முன்பு கூட தெருக்களில் STD பூத்கள் இருந்தன. நாட்டில் மொபைல் புரட்சி வந்த பிறகு இந்த STD பூத்கள் அனைத்தும் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டன. பிழைத்தவர்கள் மொபைல் ரீசார்ஜ் கடைகளுக்கு மாறிவிட்டனர். மொபைல் ரீசார்ஜில் மீண்டும் ஆன்லைன் புரட்சி. மக்கள் வீட்டில் இருந்தபடியே தங்கள் மொபைலை ஆன்லைனில் ரீசார்ஜ் செய்யத் தொடங்கினர். இந்த ரீசார்ஜ் கடைகள் மீண்டும் வேறு வியாபாரத்துக்கு மாற வேண்டியிருந்தது. இப்போது இக் கடைகள் மொபைல் போன்கள் வாங்கவும் விற்கவும் பழுதுபார்க்கவும் மட்டுமே செய்கின்றன . ஆனால் இதுவும் மிக விரைவில் மாறும். அமேசான், பிளிப்கார்ட் போன்றவற்றிலிருந்து நேரடியாக மொபைல் போன் விற்பனை அதிகரித்து வருகிறது.
பணத்திற்கான அர்த்தம் மாறி வருகிறுகிறது. முன்பெல்லாம் ரொக்கம் கையில் இருந்தது, ஆனால் இன்றைய காலத்தில் அது "பிளாஸ்டிக் பணம்" ஆகிவிட்டது. கிரெடிட் கார்டுகள் மற்றும் டெபிட் கார்டுகள் புழக்கத்தில் சில நாட்களுக்கு முன்பு இருந்தன. இப்போது அதுவும் மாறி மொபைல் வாலட் காலம் வரப்போகிறது. Paytm Gpay இன் வளர்ந்து வரும் சந்தை, மொபைல் பணத்தின் காலமாக ஆகிவிட்டது.
காலத்துக்கு ஏற்ப ஒத்துப்போக முடியாதவர்களை, காலம் இந்த உலகத்திலிருந்து நீக்குகிறது.
வெள்ளி 10 2026
இரண்டு நண்பர்கள்
இரு நண்பர்கள்
வெள்ளி 19 2026
எதுக்கும் சொல்லி வைப்போம்....!!!
இளமையில் அழகாக
இல்லை முதுமையில்
அழகாக இருக்கிறாய்.
- ஒரு பாட்டி சொன்னது
ஓடோடி சென்றேன்
கண்ணாடியில் பார்க்க
தேடியும் கிடைக்கவில்லை
கண்ணாடி.......பாட்டி
சொன்னது உண்மையாய்
இருக்கும்... இல்லையென்றால்
கண்ணாடி கிடைத்திருக்குமே...
திங்கள் 08 2026
சினிமாவில் வில்லன்- நிஜத்தில் சூப்பர் ஸ்டார்
“தற்கொலைக்கு முன் என்னை
ஒரு முறை நினைத்துக் கொள்ளுங்கள். "
- இது ஒரு சூப்பர் ஸ்டாரின் உதடுகள்
அடிக்கடி உதிர்க்கும் வார்த்தைகள்!
இவை ஏதோ சினிமா வசனம் அல்ல!
நடைமுறையில் நிறைய விவசாயிகளின் தற்கொலை முடிவை மாற்றி வாழ்வதற்கான நம்பிக்கை தந்த உயிரோட்டமுள்ள வார்த்தைகள்!
அந்த உண்மையான சூப்பர் ஸ்டார் வேறு யாருமல்ல! இந்தி நடிகர் நானா படேகர் தான்! தமிழில் பாரதிராஜா இயக்கத்தில் இவர் முதலில் நடித்த படம் : 'பொம்மலாட்டம்'..சமீபத்தில் 'காலா' திரைப்படத்தில் ரஜினிகாந்தோடு, பா.ரஞ்சித் இயக்கத்தில் நடித்தாரே,அதே நானா படேகர்தான்!
வறட்சியால் மிக பாதிக்கப்பட்டிருக்கும் பகுதி மகாராஷ்ட்ராவின் மராத்வாடா. கூரைகள் இல்லாத வீடுகள். கொடூர வெயிலில், விவசாய நிலங்கள் பாளம் பாளமாக வெடித்திருக்கும். மின்சாரமும் இருக்காது. கிராமத்திற்கு ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டிருப்பார். அரசியல்வாதிகளே எட்டிப் பார்க்கத் தயங்கும் மக்கள் நிறைந்த பகுதி. இங்கு அடிக்கடி ஒரு பிரபலத்தை மட்டும் காண முடியும். இருட்டிலும் கூட செல்போன் வெளிச்சத்தில், அந்தப் பிரபலத்தின் கைகள் செக் விநியோகித்துக் கொண்டிருக்கும். சினிமா உலகில் அவரது பெயர் நானா படேகர், மராத்திய மண்ணில் பிறந்த நடிகர்.
திரையுலகுக்கு வருதற்கு முன் போஸ்டர் ஒட்டியும், சாலைகளில் ஜீப்ரா கோடு வரைவதும்தான் நானாவின் பிழைப்பு. தினச்சம்பளம் 35 ரூபாய். சொற்ப சம்பளத்தில் தாயும் மகனும் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்தனர். மராத்தி நாடகங்களில் நடித்து, ஹிந்தி சினிமாவில் புகுந்த பிறகு, வருமானம் கொட்டியது. மூன்றே மாதங்களில் முழு சினிமாவை முடித்து விடும் இன்றைய காலத்தில், 'பிரகார் ' என்ற படத்தில் நடிப்பதற்காக, இந்திய ராணுவத்திடம் 3 ஆண்டுகள் சிறப்புப் பயிற்சி பெற்ற, சற்றே வித்தியாச நடிகர் நானா.
மகாராஷ்ட்ராவில் கடந்த சில ஆண்டுகளாக வரலாறு காணாத வறட்சி. கிராமத்திற்கு ஒரு விவசாயி தற்கொலை. அரசாலும் தடுக்கமுடியவில்லை. தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் போராடியும் இயலவில்லை. நடிகர் என்பதையும் தாண்டி, சொந்த மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் கொத்து கொத்தாக செத்து மடிவது நானாவை என்னவோ செய்தது. குறிப்பாக மராத்வாடாப் பகுதியில் நாக்பூர், லாத்தூர், ஹிங்கோலி, பிரபானி, நான்டெட் மாவட்டங்களில் விவசாயிகளின் தற்கொலை அதிகம்.
விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்க என்ன செய்யலாம் என யோசித்தார் நானா. சில காலம் சினிமாவை ஒதுக்கி வைத்தார். சக நடிகர் மன்கர்டுடன் இணைந்து 'நாம் ' என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கினார். முதல் நாளே 80 லட்ச ரூபாய் நன்கொடை குவிந்தது. நானா படேகர் என்ற அந்த பெயருக்கு மக்களிடம் அத்தனை செல்வாக்கு. 2 வது வாரத்தில் 7 கோடியாக உயர்ந்தது. மொத்தம் 22 கோடி ரூபாய் நன்கொடையாக கிடைத்தது.
நன்கொடை பணம் முழுவதும் விவசாயிகளுக்கு முழுமையாகச் சேர வேண்டும் என்பது நானாவின் அடுத்த இலக்கு. இந்த விஷயத்தில் நானா படேகர் உறுதியாகவும் தெளிவாகவும் இருந்தார். நன்கொடையும் ஏராளமாக வந்துவிட்டது. வேறு ஏதாவது அமைப்பு வழியாக வழங்கிடுவோம் என்று அவர் ஒதுங்கி விடவில்லை. மூன்றாவது அமைப்பின் தலையீட்டை அவர் அனுமதிக்கவில்லை. எந்த அமைப்பையும் அணுகவில்லை. அவரே நேரடியாகக் களத்தில் குதித்தார்.
மராத்வாடாவில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்தினரை வீடு வீடாகச் சென்று நானாவே நேரடியாக சந்தித்தார். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினர்க்கும் நேரடியாகச் சென்று நிதியுதவி வழங்கினார். கணவரை இழந்த மனைவிகளைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
மகாராஷ்ட்ராவில், இப்போது 700க்கும் மேற்பட்ட கிராமங்களில், நானா படேகரின் அறக்கட்டளை, பாதிக்கப்பட்ட விவசாயிகளைக் கண்டறிந்து உதவி செய்து வருகிறது. விவசாயிகள் தற்கொலை குறைந்திருப்பது நானாவுக்கு சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. நிதியுதவி போக, எஞ்சிய பணத்தில் மராத்வாடா பகுதியில் உள்ள ஏரிகள், குளங்களைத் தூர் வாரும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒரு கோடிக்கு மேல் மரங்கள் நடப்பட்டன. கணவனை இழந்த பெண்களுக்கு சுய வேலை வாய்ப்பு, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டது.
ஒவ்வொரு கிராமத்துக்கும் சுத்தமான குடிநீர் வழங்குவது நானா படேகரின் அடுத்த இலக்கு. அறக்கட்டளை வழியாக சேர்ந்த பணத்தை மட்டுமல்லாது, சினிமாவில் தான் சம்பாதித்த பணத்தில் 90 சதவீதத்தை அறக்கட்டளைக்கே நானா படேகர் வழங்கி விட்டார்.மேலும் விருதுகள் மூலம் கிடைத்தத் தொகையையும் இதில் போட்டார்.
திரையில் ஆன்டி ஹீரோவாக நடிக்கும் நானாதான், மராத்வாடா மக்களின் நிஜ ஹீரோ.கோடி கோடியாக பணம் சம்பாதித்த போதும், மும்பையில் ஒரு பெட்ரூம் கொண்ட பிளாட்டில்தான் இப்போதும் தாயுடன் வசிக்கிறார் நானா. ''சம்பாதித்த பணத்தை அறக்கட்டளைக்கு வழங்கிவிட்டீர்களே'' என்றால் , 'இப்போதுதான் நான் பிறந்ததற்கான அர்த்தத்தை உணர்ந்திருக்கிறேன்'' என 'நச்' பதில் வருகிறது அவரிடமிருந்து. இப்போது மும்பை, தானே, புனே,நாக்பூர், அவுரங்காபாத் என இவர் உதவும் பரப்பு விரிவடைந்திருக்கிறது.
'உங்களுக்கு தற்கொலை எண்ணம் வருமானால் தற்கொலைக்கு முன் என்னை ஒரு முறை நினைத்துக் கொள்ளுங்கள்.!'- நானாவின் உதடுகள் அடிக்கடி உதிர்க்கும் வார்த்தை இவை.
நன்றி:
இடது இயக்கம் (முகநூல்)
மீள்பதிவு: 01-06-2026
| இந்தி நடிகர் நானா படேகர் |
புதன் 03 2026
ஆகவே, விரும்பக் கற்றுக் கொள்ளுங்கள்!
***
வில்ஹெல்ம் லீப்னெஹ்ட் (1826-1900) ஜெர்மன் சமூக ஜன நாயகக் கட்சியின் ஸ்தாபக உறுப்பினருள் ஒருவர். பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரமான போராட்டத்தின் வெற்றிக்கு மனப்பூர்வமாகப் பாடுபடும் தொழிலாளி வர்க்கத் தலைவர்கள் தமது வாழ்வு மற்றும் பணி மூலம் உதாரணமாக விளங்குவதைப் போன்று அவர் இருந்தார்.
சிலந்தியும் ஈயும் ஐரோப்பிய நாடுகளில் அது வெளிவந்த காலத்தில் வெகுவாய் வரவேற்கப்பட்ட பிரசுரமாய்த் திகழ்ந்தது. பாட்டாளிகளிடையே அரசியல் உணர்வை உயர்த்துவதற்கு அருஞ்சேவை புரிந்தது. சுரண்டும் சிலந்திக்கும் சுரண்டப்படும் ஈக்கும் இடையிலே நிலவும் பகை முரண்பாடுகளை லீப்னெஹ்ட் தெளிவான, எளிய நடையில் புலப்படுத்துகிறார். ஒடுக்குமுறைத் தளைகளை முறிக்க வேண்டுமாயின் தொழிலாளர்கள் ஒன்றுபட்டு ஒருசேரப் பாடுபடுவது ஒன்றே வழி என்பதைத் தெளிவுபடுத்துகிறார்.
– பதிப்பாளர், மாஸ்கோ பதிப்பகம்
சிலந்தியும் ஈயும்
நீங்கள் எல்லோரும் அதை நன்கு அறிவீர்கள் – அந்தப் பூச்சி சால் போன்ற வயிறுடையது. முடிகள் மண்டிய பிசுபிசுப்பான உடல் கொண்டது. பகலின் ஒளியிலிருந்து தூர விலகி இருண்ட இடங்களில் பதுங்கியிருக்கிறது. கொலைகார வலையைப் பின்னி வைக்கிறது. கவனக் குறைவான அல்லது சிந்தனையில்லாத, பரிதாபத்துக்குரிய ஈ இந்த வலையிலே அகப்பட்டுக் கொலையுண்டு போகிறது. அருவருப்பான அந்தக் கொடூரப் பூச்சி கண்ணாடி போன்ற உருண்டைக் கண்களுடையது. தன்னிடம் அகப்பட்டுக் கொள்ளும் ஈயைக் கெட்டியாய் பற்றிக் கொண்டு அழுத்தி நெரிப்பதற்கு வசதியாய் கோணமாய் மடங்கிக் குச்சி போலமைந்த நீண்ட முன்கரங்களைக் கொண்டது. அந்தக் கொலைகாரப் பூச்சிதான் சிலந்தி.
அதோ அந்த மூலையில், இரை எப்பொழுது தன் பிடியில் வந்து சிக்குமென்று ஆடாமல் அசையாமல் உணர்ச்சியற்றுக் காத்திருக்கிறது. அல்லது மெல்லிய ஈயைச் சிக்க வைத்துத் தப்ப முடியாதபடிக் கட்டுண்டு போகச் செய்யும் தனது கொலைகார இழைகளை பேய்த்தனமாய் நெய்து கொண்டிருக்கிறது! வெறுக்கத்தக்க கொடும் பிறவியான அது அளவிலா முயற்சியெடுத்து வேலை செய்கிறது. தன்னிடம் வந்து சிக்கும் இரை தப்புவதற்குச் சிறிதும் வழியின்றி கடைசி இழை வரை யாவற்றையும் செவ்வனே அமைத்துத் தனது வலையைக் குற்றம் குறையற்றதாய் நெய்கிறது. முதலில் ஓர் இமையைப் பின்னியமைக்கிறது. பிறகு இரண்டாவது, மூன்றாவது – இப்படி மேலும் மேலும் அமைத்துச் செல்கிறது. சிக்கும் இரை சாகுமுன் எவ்வளவு தான் துடியாய்த் துடித்தாலுங்கூட வலை பிய்ந்து போகாமல், அதிரவுங்கூட இல்லாமல் கெட்டியாய் இருக்கும் பொருட்டு, இழைகளைக் குறுக்கில் இழுத்துச் சுற்றுகிறது, மறுமுறையும் இழுத்துக் கெட்டியாய்ச் சுற்றுகிறது.
முடிவில் வலை தயாராகிவிடுகிறது, கண்ணி வைக்கப்பட்டு விட்டது, இனி தப்ப வழி ஏதுமில்லை – சிலந்தி இப்பொழுது அதன் உறைவிடத்தில் பதுங்கிக் கொள்கிறது. சூதறியாத ஈ பசியால் உந்தப்பட்டு உணவு தேடிக் கொண்டு எப்பொழுது வருமென்று சிலந்தி காத்திருக்கிறது.
ஈ வந்து சேர சிலந்தி அதிக நேரம் காத்திருக்க நேர்வதில்லை. பாவம், அப்படியும் இப்படியுமாய்ப் பார்த்தவாறு ஈ ஓடி வந்து விரியப் பறந்திருக்கும் இழைகளை அடைந்து துணுக்குற்று நடுங்குகிறது. சிக்குண்டுத் துடிக்கிறது, பெரு முயற்சி செய்கிறது – அவ்வளவுதான், இனி ஒன்றும் செய்வதற்கில்லை.

ஈ அகப்பட்டுக் கொண்டுவிட்டதைக் கண்டதும் சிலந்தி தனது பதுங்கிடத்தை விட்டு மெள்ள முன்னே வருகிறது. பசி வெறி கொண்ட கண்களுடன் குச்சிக் கரங்களை அசைத்துக் கொண்டு தனது இரையை நோக்கி முன்னேறுகிறது. அது அவசரப்படத் தேவையில்லை, தன் வலையில் அகப்பட்டுக் கொள்ளும் அபாக்கியசாலி தப்ப முடியாது என்பது அந்தப் பயங்கர பைசாசத்துக்குத் தெரியும். அது மேலும் மேலும் நெருங்கிச் செல்கிறது, துருத்திக் கொண்டிருக்கும் மங்கலான கண்களால் தனது இரையை ஏறிட்டுப் பார்த்து எடை போடுகிறது, அதைத் தவிக்கச் செய்து திணறடிக்கிறது. ஈ தன்னை நெருங்கி வரும் பயங்கர அபாயத்தைக் கண்டு நடு நடுங்குகிறது, பிசுபிசுப்பான அந்த இழைகளிலிருந்து பிய்த்துக் கொள்ள முயலுகிறது, தப்பிப்பதற்கு அரும்பாடுபடுகிறது. இந்த மூர்க்கமான இறுதி முயற்சிகளில் அது தனது பலத்தை இழந்து விடுகிறது.
ஆனால் அதன் முயற்சிகள் பயனளிக்கவில்லை, அதன் பிரயத்தனங்கள் வீணாகின்றன! வலையில் அது மேலும் மேலும் கடுமையாய்ச் சிக்கிக் கொள்கிறது. இதற்கிடையில் சிலந்தி அதை மேலும் மேலும் நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. சிலந்திக் கூட்டின் வலைப் பின்னல்கள் மெல்லியனவாய் இருப்பினும் தப்ப வழியின்றி ஈயை இறுகப் பற்றிக் கொண்டுவிட்டன. இவற்றிடமிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்காக ஈ மேற்கொள்ளும் முயற்சி ஒவ்வொன்றும் மேலும் அதிகமான இழைகளில் அதை மாட்ட வைத்து. மேலும் அதிகமான வலைப் பின்னல்களில் சிக்கச் செய்கிறது. முடிவில், எதிர்க்கும் ஆற்றல் அனைத்தையும் இழந்து ஓய்ந்து போய் மூர்ச்சித்துவிடும் ஈ, அதன் பகைவனின், வெற்றியாளனின் அந்தப் பயங்கரச் சிலந்தியின் காலடியில் கிடக்கிறது!
பிறகு அந்தப் படுபயங்கரப் பிராணி முடிகள் மண்டிய தனது கொடுங்கரங்களை நீட்டி ஈயைப் பிடித்துத் தனது கொலைகார அரவணைப்பிலே கெட்டியாய் அழுத்துகிறது. அடுத்து அது பலமிழந்து போய் நடுங்கும் ஈயின் உடலைக் கடிக்கிறது. ஒரு தரம், இரண்டு தரம், மூன்று தரம் என்று தனது வெறிக்கும் பசிக்கும் ஏற்ப அத்தனை தரம் விழுந்து பிடுங்குகிறது. அதன் இரத்த வெறி தற்போதைக்கு அடங்கியதும் பாதி உயிர் போன நிலையில் அந்த ஈயை விட்டுவிட்டு விலகுகிறது. பிறகு திரும்பி வந்து மீண்டும் உறிஞ்சுகிறது. இப்படித் திரும்பித் திரும்பி வந்து ஈயின் உடலிலுள்ள இரத்தம் அனைத்தையும், சத்து அனைத்தையும் உறிஞ்சி இழுத்து விழுங்குகிறது. பாவம் அந்த ஈ, எளிதில் அது உயிரை இழப்பதில்லை, குத்துயிரும் கொலையுயிருமாய் நெடு நேரம் திணறுகிறது.
இரத்த வெறி கொண்ட அந்தப் பைசாசம் தனது இரையிடம் இம்மியளவு உயிர்த் துடிப்பு எஞ்சியிருக்கும் வரை அதை விடுவதில்லை. ஈயின் உயிரை உள்ளுக்கு இழுக்கிறது, அதன் பலத்தை உறிஞ்சியிழுக்கிறது, இரத்தத்தைக் குடிக்கிறது. ஈயிடமிருந்து பருக எதுவுமே இல்லாமற் போன பிறகு தான் அதை விடுகிறது.
முற்றும் உறிஞ்சப்பட்டு சாகடிக்கப்பட்ட ஈ மெல்லிறகையும் விட இலேசாகியபின் வலையிலிருந்து தள்ளிவிடப்படுகிறது. சிறிதளவு காற்று வீசியதுமே காற்றோடு காற்றாய் அடித்துச் செல்லப்படுகிறது. யாவும் முடிவுற்றுவிட்டன.
வயிற்றை நிரப்பிக் கொண்டு திருப்தியோடு சிலந்தி மட்டும் தனது உறைவிடத்துக்குத் திரும்புகிறது. தன்னையும் தனது உலகையும் நினைத்து மன நிறைவு கொள்கிறது. தரமானவர்கள் உலகில் இனியும் நல்லபடியாகவே காலங்கழிக்க முடிகிறதென அகமகிழ்ந்து கொள்கிறது….
***
நகரத்தையும் கிராமத்தையும் சேர்ந்த பாட்டாளி வர்க்கத்தினர்களே, உறிஞ்சியிழுக்கப்பட்டுக் கொல்லப்படும் இந்த ஈ, விழுங்கப்படும் இந்த ஈ நீங்களேதான்! ஏனையோர் வாழ்வது உங்களுடைய இரத்தத்தைக் குடித்துத்தான்! ஒடுக்கப்பட்ட மக்களே, அறிவுத் துறையினரே, ஆலைத் தொழிலாளர்களே, உங்கள் உரிமைகளுக்காக எதிர்த்து நிற்கத் துணியாதோரான அஞ்சி நடுங்கும் இளம் மகளிர்களே, பலமற்றோராய் இருந்து மிதிபடும் பெண்டிர்களே, யுத்த வேந்தர்களுக்குப் பலியாகும் அப்பாவிகளே! சுருங்கக் கூறின் ஏழைகளும் சுரண்டப்படுவோருமானோரே, உங்களுடைய இரத்த நாளங்களிலிருந்து உறிஞ்ச ஏதும் இல்லாமற் போனதும் உதறியெறியப்படுவோரே!
எல்லாச் செல்வங்களின் உற்பத்தியாளர்களே, தேசத்தின் இதயமும் மூளையும் ஜீவ சக்தியுமானோரே, அடி பணிந்து ஓசையின்றி எங்கோ மூலையில் அவலமான முறையில் மடியும் உரிமையன்றி வேறு உரிமை ஏதும் இல்லாதவர்களே! உங்களுடைய இரத்தத்தை, வியர்வையை, உழைப்பை, உங்களுடைய சிந்தனைகளை, உங்களுடைய உயிரைக் கொடுத்து உங்கள் எஜமானர்களாகவும் ஒடுக்குமுறையாளர்களாகவும் இருப்போரை – அருவருக்கத்தக்க சிலந்திகளை – பெரியவர்களாக்குகிறீர்கள், வலியவராக்குகிறீர்கள்.
ஏழைத் தொழிலாளிதான் ஈ. வேலை வாங்கும் எஜமானன் பிறப்பிக்க விரும்பும் கொடிய சட்டங்களுக்கு எல்லாம் இந்த ஏழைத் தொழிலாளி அடங்கி நடக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில் வாழ வழியற்ற நிலையிலுள்ள அபாக்கியவானான இந்தத் தொழிலாளி தனக்கும் தன் குடும்பத்துக்கும் ஜீவனோபாயம் தேடிக் கொள்ள வேண்டியிருக்கிறது. பெரிய ஆலை முதலாளிதான் சிலந்தி.
தனது தொழிலாளர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் நாள் ஒன்றுக்கு 6-லிருந்து 8 மார்க்(1) வீதம் சம்பாதிக்கும் இந்த முதலாளி, அதே போது 12-லிருந்து 14 மணி நேர வேலைக்கு இத்தொழிலாளர்களுக்கு மனம் துணிந்து, இல்லை அருள் கூர்ந்து 2-லிருந்து 3 மார்க் வரையிலான அரைப் பட்டினிக் கூலி தருகிறான்.
சுரங்கத்தின் நச்சுக் காற்றில் தன் உயிரைப் பலி கொடுக்கிறானே, தான் அனுபவிக்கப் போகாத செல்வங்களைத் தரைக்கு அடியிலிருந்து வெட்டியெடுக்கிறானே, அந்தச் சுரங்கத் தொழிலாளிதான் ஈ. திருவாளர் பங்கு முதலாளிதான் சிலந்தி. இந்த ஆளின் பங்குகள் மதிப்பில் இரட்டிப்பாகவும் மும்மடங்காகவும் உயர்ந்து செல்கின்றன.
ஆயினும் இவர் திருப்தியடைவதே இல்லை, மேலும் மேலும் உயர்ந்த லாப விகிதங்கள் வேண்டுமென்கிறார், தொழிலாளர்களுடைய உழைப்பின் பயன்களை அவர்களிடமிருந்து சூறையாடிக் கொண்டு விடுகிறார். தொழிலாளர்கள் சொற்ப அளவு கூலி உயர்வு கேட்கத் துணிவார்களாயின் ராணுவத்தை அழைத்துக் கலகக்காரர்களுக்குத் துப்பாக்கிக் குண்டுகளின் சுவையைத் தெரியப்படுத்துகிறார்.
சின்னஞ் சிறு வயதில் அறியாப் பருவத்தில் ஆலையிலும் பட்டறையிலும் பிறகு வீட்டிலும் மாடாய் வேலை செய்து குடும்பச் செலவுக்கு, வரவை இணையாக்க உதவ வேண்டியிருக்கும் சிறு பிள்ளை தான் ஈ. போதாமையால் தம் குழந்தைகளைக் காவு கொடுக்கும்படி பலவந்தம் செய்யப்படும் ஏழைப் பெற்றோர்களல்ல சிலந்தி; இயற்கை உணர்ச்சிகளின் இந்த வக்கரிப்புகளை, தனது சொந்தக் குடும்பம் இப்படி நாசமாவதை மாறாத மூர்க்க விதியாக்கும் இன்றைய அடாத நிலைமைகளே தான் சிலந்தி.
மக்களுடைய மகளாய்ப் பிறந்த மதிப்புக்குரிய மங்கை நேர்மையாய் வாழ வழி தேடுகிறாள், ஆனால் ஆலை முதலாளி அல்லது டைரக்டரின் காமவெறிக்குப் பணியாவிடில் வேலை பெற முடியாதவளாய்த் திண்டாடுகிறாள். அவளைக் கெடுக்கும் அந்த ஆள் பிற்பாடு – பல சந்தர்ப்பங்களில் பிள்ளையும் பிறக்கப் போகும் நிலையில் – “மானத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக” ஈவிரக்கமின்றி மெத்தனமாய் அவளை நடுத்தெருவில் விடவே நிற்கதியாகிறாள் – அவள் தான் ஈ.
நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைக்கும் உழவர்களே, செல்வந்தர்களான நிலப்பிரபுக்களுக்காக நிலத்தை உழுது நீங்கள் அறுத்தெடுத்துக் கொள்ளப் போகாத பயிரை விதைத்தும், நீங்கள் சுவைக்கப் போகாத கனிகளை வளர்த்தும் வரும் நீங்கள் தான் ஈ. தான் சொகுசாய்ச் சுகபோக ஆடம்பர வாழ்க்கை நடத்துவதற்காகத் தனது ஏழைச் சாகுபடியாளர்களையும் பண்ணையடிமைகளையும் கூலியாட்களையும் கணப்பொழுதும் ஓய்வின்றி வேலை வாங்கும் அந்த நிலப்பிரபுதான், ஆண்டுக்கு ஆண்டு வாரத்தை(2) உயர்த்தியும் நேர்மையான உழைப்புக்குரிய கூலியைக் குறைத்தும் செல்லும் அந்த நிலப்பிரபுதான் சிலந்தி.
ஏழையும் எளியோருமான நாம் எல்லோரும் தான் ஈ. நீண்ட நெடுங்காலமாய் வழிபாட்டு மேடையின் படிகளில் நின்று நடுங்கியும், சமயக் குருமார்களது சாபச் சொற்களுக்குத் தலைவணங்கியும், சமயச் சபையின் கீர்த்திக்காகவும் உல்லாச விளையாட்டுக்காகவும் போராடியும் ஒருவரையொருவர் அடிமை செய்தும் வந்திருக்கும் நாம் தான், அவர்களுடைய சமயப் போதனையின் நலிவுறச் செய்யும் செல்வாக்குக்கு உட்பட்டு ஆன்மீக முடவர்களாகிவிட்டோம். ஆதலால், நமது முதுகு ஓடிய வளைந்தும் மண்டியிட்டும் வந்துள்ள நாம் தான், நமது ஒடுக்குமுறையாளர்களை அவர்களது அநீதியின் பலன்களை அனுபவிக்கும்படி விட்டு வந்துள்ள நாம் தான் ஈ.
கறுப்பு அங்கி அணிந்து நயவஞ்சகமும் பேராசையும் நிறைந்த பார்வை கொண்டுள்ள அந்த குருமார் தான், இழிநிலையிலே இருத்தும் தனது போதனையின் மூலம் தனது பக்த கோடிகளின் எளிய உள்ளங்களை மயக்கங் கொள்ளச் செய்து பணிந்து ஒடுங்கும் அடிமைப் புத்தியை வளர்த்தும், இதன் மூலம் மக்களது ஆன்மாவை மாசுபடுத்தியும், போலந்தின் விவகாரத்தில்(3) நடைபெற்றது போல் தேசங்களையே பாழ்பட வைத்தும் செல்லும் அந்த சமயக் குருமார் தான் சிலந்தி.
சுருங்கக் கூறினால் ஒடுக்கப்பட்டோரும் அடிமைப்பட்டோரும் சுரண்டப்படுவோரும் தாம் ஈ. கேடுகெட்ட ஊக வாணிபக்காரர் என்றோ, சட்ட முறையற்ற கொடுங்கோலர் என்றோ எப்படி வேண்டுமாயினும் அழைக்கப்படத் தக்கவராயுள்ள அவரேதான் சிலந்தி.
சிலந்தி முன்னொரு காலத்தில் அரண்கள் செய்யப்பட்ட பெரிய கோட்டைகளிலும் நிலப்பிரபுத்துவப் பண்ணைகளிலும் தனது வலையைப் பின்னி வந்தது. இன்று அது பெரிய தொழில் மையங்களில், இக்காலத்துப் புண்ணியவான்களது செல்வமனைகளில் தன்னை இருத்திக் கொள்ள முனைகிறது. பெரும்பாலும் ஆலை நகரங்களில் தான் அதை அதிகமாய்க் காண்கிறோம்.
ஆயினும் கிராமப்புறங்களிலும் சிறு ஊர்களிலும் அது வலை பின்னிக் கொண்டுதான் இருக்கிறது. எங்கே சுரண்டல் தாண்டவமாடுகிறதோ, எங்கே தொழிலாளியும் சொத்தில்லாத பாட்டாளியும் சிறு கைவினைஞரும் நாட்கூலியாரும் கடன் சுமை தாங்காமல் வருந்தும் சிறுவிவசாயியும் ஊகவாணிபர்களது வரைமுறையற்ற லாப வெறிக்கு ஈவிரக்கமின்றி உட்படுத்தப்படுகிறார்களோ அங்கெல்லாம் அது இருக்கக் காணலாம்.
அது எங்கே இருப்பினும், நகரமாயினும் கிராமமாயினும், அங்கே பேதைகளான ஈக்கள் பகைவரது வலைகளில் சிக்கிக் கொண்டு தப்ப முடியாமல் தவிப்பதைக் காணலாம், துடிதுடித்துப் பலமிழந்து ஓய்ந்து உலர்ந்து போய் மடிவதைக் காணலாம்.
பல மில்லாத மெல்லிய ஈக்கும் இரத்த வெறி கொண்ட கொடூரச் சிலந்திக்கும் இடையே எத்தனையோ நூறு ஆண்டுகளாய் நடைபெறும் இந்தப் போரில் புரியப்பட்டுள்ள சொல்லொணாத படுபயங்கரங்களுக்கு அளவே இல்லை! இந்தக் கதை கொடுமையிலும் கொடுமையானது. அதைத் திரும்பவும் சொல்ல வேண்டியதில்லை. நடந்தது நடந்து விட்டது, கடந்த காலம் போகட்டும், நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் பற்றிப் பேசுவோம்.
நாம் தனித்து நிற்கும் வரை நம்மைக் கட்டியிருத்தி வைக்கும் வலைப் பின்னல்களைப் பிய்த்தெறியப் பலமற்றோராகவே இருப்போம். நமக்கு விலங்குகளிடும் சங்கிலிகளை உடைத்தெறிவோம், நமது பகைவர்களை அவர்களது பதுங்கு இடங்களிலிருந்து விரட்டியடிப்போம், எங்கும் அறிவின் பிரகாச ஒளியைப் பரப்புவோம், பேய்த் தனமான இந்தச் சிலந்தி இனி எந்நாளும் இருண்ட மூலையில் இருந்து தனது கொலைகாரக் கைங்கரியத்தைச் செய்ய வழியில்லாதபடி செய்வோம்!
ஈக்களே, நீங்கள் விரும்பினால், மெய்யாகவே விரும்பினால், யாராலும் உங்களை வெல்ல முடியாதபடி நீங்கள் பெரும் பலம் படைத்தோராகிவிட முடியும்! மெய் தான், இன்றும் சிலந்திகள் பலமுடையதாகவே இருக்கின்றன, ஆனால் எண்ணிக்கையில் அவை மிகமிகச் சொற்பம். ஈக்களான நீங்கள் சின்னஞ் சிறியவர்களாய் இருப்பினும், செல்வாக்கு இல்லாதிருப்பினும், எண்ணிக்கையில் அதிகமாய் இருப்பவர்கள்; வாழ்வே நீங்கள் தான், உலகமே நீங்கள் தான் – மெய்யாகவே நீங்கள் விரும்புவீர்களாயின் எல்லாமே நீங்கள்தான்!
நீங்கள் ஒன்றுபட்டால், உங்களுடைய இறக்கைகளின் ஒரேயொரு வீச்சாலேயே எல்லா இழைகளையும் அறுத்தெறிந்துவிடலாம், இன்று உங்களைக் கெட்டியாய்க் கட்டி, அடக்கி வைத்திருக்கும் சிலந்தி வலைகளை எல்லாம், உங்களைத் திணற வைத்துத் துடிக்கச் செய்து பட்டினியால் சாகடிக்கும் இந்த வலைகளை எல்லாம் அடியோடு துடைத்தெறிந்துவிடலாம், வறுமையையும் அடிமை வாழ்வையும் நீங்கள் ஒழித்துக் கட்டிவிடலாம். மெய்யாகவே நீங்கள் விரும்புவீர்களாயின் எல்லாம் செய்யலாம்!
ஆகவே விரும்பக் கற்றுக் கொள்ளுங்கள்!
அடிக்குறிப்புகள்:
- மார்க் – ஜெர்மன் மார்க் – ஜெர்மன் நாணய முறை.
- வாரம் – நிலவாரம் – நிலவுடைமையாளர்கள் மற்றும் நிலப்பிரபுக்களுக்கு விவசாயிகள் கொடுக்க வேண்டிய நிலவாடகை, நிலத்துக்கான குத்தகை.
- ஆஸ்திரிய மற்றும் பிரஷ்யவுக்கு எதிரான போலந்தின் தேசிய விடுதலை எழுச்சியில் சமயகுருமார்கள் அடிமைச் சிந்தனையை பரப்பி தேசத்தின் ஆன்மாவை சீரழித்தனர்.
வில்ஹெல்ம் லீப்னெஹ்ட்
சனி 30 2026
இதுவும் மதுரைக்கு பெருமைதான்..
சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த மதுரையில்தானதிருஞானசம்பந்தர் கைங்கர்யத்தால் எட்டாயிரம் சமணர்கள் கழுவேற்றப்பட்டனர். திருநாவுக்கரசர் கைங்கரியத்தால் ஆயிரம் சமணர்கள் கழுவேற்றப்பட்டனர்.
சமணர்கள் படுகொலைகளை மறுக்கிறவர்கள் திருஞானசம்ந்தரை திருநாவுக்கரசரை, சேக்கிழாரை, பரஞ்சோதியாரை பொய்யர்கள் என ஒப்புக் கொள்ள வேண்டும்! அவர்கள் ஒப்புக் கொண்டால் தேவாரமும், பெரிய புராணமும் திருவிளையாடல் புராணமும் பொய்யாகி விடும்.
திருஞானசம்பந்திரனின் சூழ்ச்சியால் சமணர்கள் கழுவேற்றப்பட்டதை பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். ஆனால் திருநாவுக்கரசால் சமணர்கள் படுகொலையானது பற்றி யாரும் வாயே திறப்பதில்லை.
தூங்கா நகரமல்ல..தூக்கத்தை கெடுக்கும் நகரமும்கூட
இப்பேற்ற பட்ட சிறப்பும் பெருமையும் கொண்டதுதான்.. மதுரை...
தங்க ஊசி என்றால் கண்களை குத்திக் கொள்ளவா முடியும்!!!!!!!!!!
வியாழன் 28 2026
வள்ளுவர் வாக்கு பலிக்கட்டும்..
உழைத்து வாழ
வேண்டும் பிறரிடம்
கையேந்தக்கூடாது
அப்படி கையேந்திதான்
வாழ முடியும்
என்ற நிலையில்
உலகை படைத்தவன்
எவனோ அவன்
அழிந்து போகட்டும்
-------- வள்ளுவர்.
செவ்வாய் 19 2026
ஒரு யோக்கியனின் நிலை...
வாய்ப்பு கிடைக்காதவர்கள்
எல்லாம் யோக்கியர்கள் தான்
என்றார் வந்தவர்
என்னைத்தான் சுட்டுகிறார்
என நிணைத்து
அவருக்கு பதிலுரைத்தேன்
இல்லையே எனக்கும்
பல வாய்ப்புகள்
வந்தது வந்த
அந்த வாய்ப்புகளை
பயன் படுத்தாமல்
நான் யோக்கினாகவே
இருக்கிறேன். என்றேன்
சந்தேகம் கொண்டு
அப்படி இருந்திருக்க
முடியாதே பொய்
உரைக்கிறீர் என்றார்.
நம்பவில்லை என்றால்
இந்திய உளவு அமைப்பை
கொண்டு என்னை உளவு
அறிந்து என் யோக்கிய
தண்ட வாளத்தை வண்டவாள
மாக்கலாம் என்றபோது
உங்களுக்கு கோளாறு
அதனால் யோக்கியனாய்
இருக்கிறாய் என்றார்.
என் தெரு மாக்கள்
பொட்டை.ஒம்போது
என சொல்வது
போல் இருக்கிறது.
எனக்கு விபரம்
தெரிந்த நாளிலிருந்து
டீ குடிப்பதில்லை,
புகை பிடிப்பதில்லை
சாராயம் குடிப்பதில்லை
அதே போல் வாய்ப்பு
கிடைத்தும் பயன்படுத்தாமல்
யோக்கியவனாகவே இருந்து
மடிகிறேன் யோக்கினாக
இருப்பதற்கு எந்த
பிரிதிபலனும் வேண்டியதில்லை
வாய் முடி
மௌனமாக இருந்து
நூற்றில் ஒருவர்
இல்லை ஆயிரத்தில்
பெரும் ஆச்சரியத்துடன்
அங்கீகரித்தார்.
வெள்ளி 24 2026
ஹிட்லரை மிஞ்சிய பெரும் பொய்யன் சீமான்
தமிழினத்துரோகி_சீமான்
இப்பதிவின் இறுதியில் ஒரு பேரதிர்ச்சி காத்திருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்!
அரசல், புரசலாக உங்கள் காதில் விழுந்ததைப் பற்றி இப்பதிவின் மூலம் ஆழமாக அறிந்து கொள்க.----
சென்னையில் (தரமணியில்) உலகத் தரத்திலான ஒரு பள்ளி உள்ளது.
அது மழலையர் வகுப்புக்கு முந்தைய நிலை தொடங்கி 12-ம் வகுப்பு வரையிலான கல்வியை அளிக்கிறது.
இது சிபிஎஸ்இ போன்றவை கூட எட்டமுடியாத உலகத் தரம் வாய்ந்த ஒரு கல்விக் கழகத்தின் பாடத்திட்டத்தின் படி இயங்கி வரும் பள்ளியாகும்.
அந்தக் கல்விக் கழகத்தின் பெயர் இன்டர்நேஷனல் பக்கலோரியட் (International Baccalaureate—IB) எனப்படும்.
அதன் தலைமையகம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ளது.
இந்தக் கழகப் பாடத்திட்டத்தின் படி நடத்தப் படும் பள்ளிகள் உலகில் 160க்கும் கூடுதலான நாடுகளில் உள்ளன.
குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இவை செல்வாக்குடன் உள்ளன.
ஏஐ.தகவல்--- “As of March 2026, the International Baccalaureate (IB) programme is offered in over 6,100 schools across more than
160 countries.
* ....... Top Locations: The United States holds the highest number of IB students and schools. Other top countries include Singapore, Peru, Canada, and China.
சென்னையில் உள்ள இத்தகைய பள்ளி அமெரிக்க அரசும் இந்திய அரசும் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தின் படி (இந்திய பாடத்திட்டத்தால் கட்டுப்படுத்தப் படாமல்) சுதந்திரமாக அமெரிக்க பாணிக் கல்வியை அளித்து வருகிறது.
The American International School Chennai (AISC) was established in 1995 through a formal bilateral agreement between the Governments of the United States and India. AISC operates as a non-profit, U.S.-style school............
அத்துடன் அமெரிக்க அரசின் தூதர் அல்லது அவரது பிரதிநிதி இந்தப் பள்ளியின் இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார்.
The U.S. Ambassador to India or a designated representative serves on the AISC Board of Directors.
இப்பள்ளி குறித்த தகவல்களை அமெரிக்க அரசின் வலைத்தளத்தில் காணலாம்----
Chennai, India: American International School Chennai: 2023-2024 Fact Sheet
OVERSEAS SCHOOLS FACT SHEET
OFFICE OF OVERSEAS SCHOOLS
OCTOBER 30, 2023
இந்தப் பள்ளியில் சேரும் மாணாக்கர்
மழலையர் வகுப்பிற்கும் முந்தைய நிலையிலேயே சேர்க்கைக் கட்டணமாக செலுத்தவேண்டிய தொகை 4000 டாலர்!!
அதாவது--- 3,70,000 (மூன்று லட்சத்து எழுபதாயிரம் ரூபாய்.)
பள்ளி வளர்ச்சிக் கட்டணமாக செலுத்த வேண்டிய தொகை 12,000 டாலர்.
அதாவது, 11,08,446 (பதினோரு லட்சத்து எட்டாயிரத்து நானூறு) ரூபாய்!!!
மேற்கண்ட இரண்டு கட்டணங்களும் சேர்க்கையின் போது மட்டுமே செலுத்தப் பட வேண்டும்.
ஆனால் அக்கட்டணங்கள் இந்திய ரூபாய்களாக இருக்கக் கூடாது.
மாறாக அமெரிக்க டாலர்களில் மட்டுமே செலுத்தப்பட வேண்டும்.
“The school charges a registration fee of US $4,000, a development fee of US $12,000 (both one-time and non-refundable), and an application fee of US $400. All fees, except for the application fees, are payable in U.S. dollars.”
அடுத்ததாக---
ஒரே ஓர் ஆண்டுக்கான கட்டண விவரம்—***மழலையர் வகுப்பிற்கு முந்தைய (இரண்டரை வயதேயான) பிள்ளைகளுக்கு--- 14,630 டாலர்.
*(சுமார் பதின்மூன்றரை லட்சம் ரூபாய்)
அடுத்து,
கே.ஜி. வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரைக்கான ஆண்டுக் கட்டணம்---
28, 730 டாலர். (26 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்)
ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்புவரைக்கான ஆண்டுக் கட்டணம்---
29,415 டாலர். (27 லட்சத்துப் பதினாறாயிரம் ரூபாய்)
அடுத்து—
ஒன்பதாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரைக்கான ஆண்டுக் கட்டணம்---
33,045 டாலர். (30 லட்சத்து 51ஆயிரம் ரூபாய்)
மேலே குறிப்பிட்ட அமெரிக்க அரசின் தகவல் தளத்தில் இது பற்றிய தகவல் உள்ளது--- “Finances: In the 2023-2024 school year, annual tuition rates are as follows: EY: US $14,630; KG-grade 5: US $28,730; grades 6-8: US $29,415; and grades 9-12: US $33,045. “
2023-23ம் ஆண்டுக் கணக்கின்படி இந்தப் பள்ளியில் பயிலும் மாணாக்கர்களின் மொத்த எண்ணிக்கை 665 ஆகும்.
இவர்களில் அமெரிக்க நாட்டுக் குடிகள் 94 பேர்.
இந்தியர்கள் 57 பேர்.
பிற நாட்டினர் 514 பேர்.
At the beginning of the 2023-2024 school year, enrollment was 665.............. Of the total, 94 are U.S. citizens, 57 are host-country nationals, and 514 are third-country nationals.
--------------
இப்பள்ளியில் ஆங்கிலவழிக் கல்வி மட்டுமே அளிக்கப் படுகிறது.
மொழிப்பாடம் என்ற முறையில் ஆங்கிலத்தோடு கூடுதலாக பிரெஞ்சு மற்றும் ஸ்பானிஷ் ஆகிய இரண்டு மொழிகளும் மட்டுமே கற்பிக்கப் படுகின்றன.
தமிழ், இந்தி உள்ளிட்ட வேறு மொழிகள் எவற்றிற்கும் அங்கே அறவே இடமில்லை.
இந்தப் பள்ளியில் பயிலும் 57 இந்திய மாணவர்களில் இரண்டு மாணவர்கள் யார் தெரியுமா?
*** செந்தமிழனின் சீமானின் மகனும், அவரது மைத்துனி மகனும்!!!!
நண்பர்களே,
சீமானின் மகனும் வளர்ப்பு மகனும் ஆங்கில வழிக் கல்வி பயின்று வருகிறார்கள் என்று மட்டும் தான் இன்றுவரை (அதுவும் சிலரால் மட்டும்) விவாதிக்கப் பட்டும், விமர்சிக்கப் பட்டும் வந்துள்ளது.
ஆனால் அவ்விரு பிள்ளைகளும் எத்தகைய உலகத் தரத்திலான அமெரிக்கப் பள்ளியில், தமிழோசை என்பது அறவே கேட்காத ஒரு மோசமான சூழலில் கல்வி பெற்று வருகிறார்கள் என்பதும், அதற்காக சீமான் ஆண்டுதோறும் எத்தனை லட்சங்களை வாரியிறைத்து வருகிறார் என்பதும் பேசுபொருளாக மாறவேயில்லை!!!
இது மிகவும் அதிர்ச்சிகரமான உண்மையாகும்.
ஆனால் இந்த உலக மகா அயோக்கியன் தனது கட்சியின் செயற்பாட்டு வரைவு அறிக்கையில் கூறியுள்ளதைப்
பாருங்கள்----
தலைப்பு--கல்விக் கொள்கை
“தொடக்கக் கல்வி முதல் உயர் படிப்பான மருத்துவம், சட்டம், பொறியியல் வரையிலுமான அனைத்துப் பாடங்களும் தமிழ் மொழியிலேயே கற்றுத் தரப்படும்.
தமிழ்வழிக் கல்வியே சட்டமாக்கப் படும்.”
தமிழ் பயிற்றுமொழி.
ஆங்கிலம் கட்டாயப் பாட மொழி.
இந்தி உட்பட உலக மொழிகள் அனைத்தும் விருப்ப மொழி.
ஒருமொழிக் கொள்கையே பின்பற்றப் படும்.”
முன்னதாக இந்த அறிக்கை கூறுகிறது---
“ஆங்கிலம் என்பது ஒரு மொழி மட்டுமே. அதுவே அறிவு அல்ல.”
(அதுவே அறிவு என்று யார் சொன்னது? அதன் மூலம் அறிவு பெறுவதே சாலச் சிறந்தது என்றல்லவா தந்தை பெரியார் போதித்தார்?)
ஆக, தமிழக வரலாற்றில் இதுவரை தோன்றியிராத ஹிட்லரிசப் பெரும் பொய்யன் சீமான் என்பது நூற்றுக்கு நூறு உண்மையாகும்.
இவ்வளவுக்குப் பிறகும் இந்த மக்கள் விரோதி சீமான் தனது மகனும், வளர்ப்பு மகனும் எந்தப் பள்ளியில் படிக்கிறார்கள் என்று ஒரே ஒரு முறை கூட வாய் திறந்து சொன்னதில்லை.
கூகுள் செய்தாலோ ஏ.ஐ. மூலம் தேடினாலோ கூட இது குறித்த தகவல் ஏதும் வெளிப்படையாக அறிவிக்கப் படவேயில்லை.
ஆனாலும் சில குறிப்புகள் இருக்கத் தான் செய்கின்றன.
அவற்றை மறுக்கவும் சீமான் துணியவில்லை.
“என் பிள்ளைகள் ஆங்கில வழியில் படிக்கிறார்கள். எனக்கே அவமானமாக உள்ளது,” என்று மட்டும் கூறிவிட்டு ஓம் தமிழன் ஓடி விடுகிறார்.
நாம் தான் அவரை விடாமல் துரத்திச் சென்றுக் கூண்டில் ஏற்றி விசாரித்து மக்கள் முன் அம்பலப் படுத்தியாக வேண்டும்.
எனவே நண்பர்களே,
சீமான் பிள்ளைகள் எத்தகைய உலகத் தரம் வாய்ந்த அமெரிக்கப் பள்ளியில் எத்தனை லட்சங்கள் கொட்டிப் படிக்க வைக்கப் படுகிறார்கள் என்பது பற்றியும் தமிழ்மொழியை ஒரு மொழிப்பாடமாகக் கூட அவர்கள் பயிலவில்லை என்பதைப் பற்றியும் தமிழ்மக்கள் பலரும் அறிந்திடுமாறு செய்ய நீங்கள் தான் உதவ வேண்டும்.
அதன் பொருட்டு இந்தப் பதிவை இப்போதும், இனி வரும் காலங்களிலும் அடிக்கடி பகிரவேண்டும்.
- பேராசிரியர் மருதமுத்து
வாசாந்தியும் தேவசாதி படைப்பும்
திராவிட ஆய்வு 7 July 2025 · இந்தியா டுடேவில் ஆசிரியராக இருந்த வாஸந்தி, தேவதாசி ஒழிப்புச் சட்டத்தால், ஆடல் பாடல் கலைகள் அழிந...
-
படம்- poocharam.net நான்கு தனிமங்கள் தற்செயலால் இணைகின்றன. இணைவதின் பயனால் உருவமுள்ள தோற்றம் ஒன்று உருவாகிறது. இந்த தனிமங்களின் ...
-
களவானி காங்கிரசின்முன்னால் தமிழ்நாட்டின் தலைவரான குமரி அனந்தன் என்பவரு.,காங்கிரசின் போரட்ட வரலாற்றை இளைஞர்கள் மத்தியில் பரப்ப வேண்டும...
-
படம்- www.dinakaran.com ஒம்பாடு தேவலை தோழர் ஓட்டும் போடுவதில்லை விரல் அடையாளமும் பெருவதில்லை என்றார் ஓட்டு கேட்கும் கட்சியை சேர்ந...



