திங்கள் 30 2013

2013ம் ஆண்டின் இந்திய (அ) நீதிமன்றத்தின் நீதி(பதி)களின் (அ)யோக்கிய சுவடுகள்........



பிப்ரவரி 9. நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக ஆக்கப்பட்டவர் அப்சல் குரு. என்பவர்.

அப்சல் குரு , குற்றவாளி அல்ல என்பதற்க்கான தடயங்கள்.சாட்சிகள், மற்றும் வாக்குமூலங்கள் போன்றவற்றை.எவற்றையுமே பரிசிலிக்காமல்

பினையில் விட்டால் சாட்சியங்களையும் தடங்களையும் அழித்துவிடுவார். என்று கூறி பினை மறுக்கப்பட்டு ஒரே வருடத்தில் விசாரனை நடத்தப்பட்டு   இந்திய நீதி மன்றத்தால் தூக்கிலேற்றப்பட்டவர்.
                                           ------------------------------



நவம்பர் 27. அதே இந்திய (அ) நீதி மன்றம்.  சங்கர மடத்தின் கொள்ளையர்களான  கொலைகாரர்கள். சங்கரராமனை கொலை செய்தற்க்கான  தடயங்கள்,சாட்சியங்கள்,மற்றும் வாக்குமூலங்கள்  போன்றவைகள் ஆனித்தரமான ஆதாரங்கள் இருந்த போதும்.

பினையில் விட்டால் சாட்சிகளை கலைப்பார், தடயங்களை அழிப்பார் என்று கண்கூடாக தெரிந்திருந்தும்  பினை வழங்கப்பட்டது.

கொலைக்குற்றவாளிகள்.தங்கள் வழக்கை புதுச்சேரிக்கு மாற்றக்கோரி மனு செய்தபோது.தலை வணங்கி நமஸ்கரித்து ஏற்றுக் கொண்டு ,புதுச்சேரி  நீதி மன்றதுக்கு மாற்றியது.

  கொலையான சங்கரராமனின் (பாதிக்கப்பட்டவர்கள்) மகள் புதுச்சேரி நீதி மன்றத்தால் தங்களுக்கு நீதி கிடைக்காது. அதனால் வழக்கை சென்னைக்கே மாற்றக்கோரி மனு செய்த போது,மனுவை ஊதாசீனப்படுத்தி,நிராகரித்து

கொலைகாரர்களான ஜெயேந்திரன்,விஜயேந்திரன் உட்பட அனைவரையும் விடுதலை செய்தது. சட்டத்தின் அனைவரும் சமம் என்று ஊளையிடும் இந்திய (அ)நீதி(பதி)கள் நிறைந்த (அ)நீதிமன்றம்.

2013ம் ஆண்டில் இந்திய நீதியின் சுவடுகள் .................

1.சங்கரராமன் கொலை வழக்கில், கொலை குற்றவாளிகளுக்கு நீதி விற்கப்பட்டுள்ளது. கொலை குற்றவாளிகளால் நீதி வாங்கப்பட்டுள்ளது.

2. அப்சல் குரு வழக்கில்,  குற்றமற்றவர் தூக்கலிடப்பட்டு,நீதி மறுக்கப்பட்டுள்ளது.

3. ஜெயலலிதா வழக்கில், மாதம் ஒரு ரூபாய் சம்பளம் பெற்று மொத்த ஆட்சி காலத்தில் ரூபாய் 60/- மட்டுமே பெற்றவர். 66 கோடி சொத்து சேர்த்த வழக்கில் நீதி தாமதப்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய (அ) நீதி மன்றத்திலே...................தனியார்மயம்.தாராளமயம்,உலக மயத்தால் நீதியும் வியாபாரமாக்கப்பட்டுள்ளது.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...