செவ்வாய் 03 2013

ஊருக்கு இளைத்த ஆண்டிமடத்து பிச்சைகாரர்களுக்கு எச்சரிக்கை!





சகல விதமான ஊருக்கு இளைத்த ஆண்டிமடத்து பிச்சைகாரர்களுக் கு  இந்தீய ஜன்நாய்க தேர்தல் கமிஷன் மண்டி எச்சரிக்கை!!!

நடக்க இறக்கும் ஸனநாயக ஏற்க்காட்டுத் தேர்தலில் ஓட்டுப் பட்டனை பார்ப்பதற்கும் தொடுவதற்கும் , பணமாகவோ.பொருளாகவோ, பிச்சை பெற்றாலோ...............வாங்கினாலோ............ அடுத்து பிச்சையே எடுக்க முடியாதபடியும்  ஒரு வருட ஜெயில் தண்டனையும் வழங்கப்படும்

ஆளும் கட்சியோ,ஆளாத கட்சியொ பிச்சையிடுவதற்க்காக வாகனங்களில் கொண்டுவரப்பட்ட 5கோடிக்கும் மேலான பணம்,தங்கம்,வெள்ளி பொருட்கள் பறி முதல் செய்யப்படும்

அவர்கள் மீது வழக்கு தொடர,முதலில் ஓலை அனுப்பி, பிறவு ஒரு வருடம் கழித்து பதில் ஓலை வராததை தெரிந்து, பத்து வருடங்கள் கழித்து வழக்கு தொடர்ந்து, இரண்டு நூற்றாண்டுகால அளவில் வாய்தா போட்டு, மூன்று நூற்றாண்டுகால அளவில் விசாரனை நடாத்தி, நான்காம் நூற்றாண்டில் சொல்லும் தீர்ப்பீன் அடிப்படையில் .ஓட்டு போடுவதற்க்காக ஆண்டிமடத்து பிச்சைக்காரர்களுக்கு பிச்சையிட்ட கட்சியின் மீது ஜன்நாய்க பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே, கொள்ளையடிக்க வள்ளல்கள்  பிச்சையிடும்போது,அதை ஆண்டிமடத்து பிச்சைக்காரர்கள் பெறுவது தெரியவந்தால், அதுபற்றி 0000000
கட்டணமில்லா தொலை பேசியில் தெரிவிக்கலாம்.


(குறிப்பு..தகவல் தெரிவித்தவர் மேல் வழக்கும் கடும் நடவடிக்கையும் எடுக்கப்படாமாட்டது)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...