வியாழன் 24 2014

சிவகாசியில் பார்த்த சீதக்காதி..........

படம்--keelakaraitimes.com

அன்மையில் சிவகாசியில் மாஸ்டர் பிரிண்டிங்  அசோசியசன்  சார்பில் நடந்த பிரிண்ட்டெகஸ்  கண்காட்சிக்கு சென்று இருந்தேன்.

பிரிண்டிங் கண்காட்சியை சுற்றிப்பார்த்துவிட்டு வெளியே வந்தபோது மூன்று மணிக்கு மேல் ஆகிவிட்டது.  அன்று ஞாயிற்றுக் கிழமையாதலால் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் சாப்பாட்டுக் கடையைத் தேடி சிறிது தூரம் நடந்து செல்ல வேண்டியிருந்தது.

அப்படிச் செல்லும்போதுதான் சீதக்காதி  தெரு என்று  சிவகாசி நகராட்சி போர்டு ஊன்றி இருந்தததைப் பார்த்தேன்.

செத்தும் கெடுத்த சீதக்காதியா...? செத்தும் கொடுத்த சீதக்காதியா..ன்னு ஒரு தொடர் குழப்பம்.. தெருவைப்பார்த்தால்   ஒரே அமைதியாக இருந்தது.

முதலில் இரையை போட்டு விட்டு வரலாம் என்று சாப்பாட்டு கடையை தேடி  தொழில் நண்பர்களான சீனி. மணி, மற்றும் ஒருவருடன் நடந்து கொண்டு இருந்தோம்.

 வழியில் குடிமகன் கடையை பார்த்துவிட்டார்கள். தொழில் நண்பர்களான மூன்று குடிமகன்கள் என்பதை நிருபணமாக்க அவர்கள் சென்று விட்டார்கள்.

குடிமகன்களிடம் விடைபெற்றுவிட்டு.. திரும்பவும் சிவகாசி வீதியிலே நடந்து வந்தபோது..

.  சீதக் காதியைப்பற்றி விசாரித்தபோது தெரிந்தது.

புலவர்களுக்கும், கஞ்சிக்கு செத்தவர்களுக்கும் கொடுத்து கொடுத்து சிவந்த கரங்களை கொண்டவர் சீதக்காதி என்ற இஸ்லாமிய மதத்தைச்சேர்ந்தவர்.

அவர் செத்தது தெரியாத புலவர் ஒருவர் இவரைப்பாடி பரிசு பெற்று செல்ல வந்தவர். வந்தவுடன் சீதக்காதி செத்துப்போன செய்தியைக்கேட்டு நொந்து போனார் புலவர்,  சரி வந்ததும் வந்தோம் சீதக்காதியை புதைத்த சமாதியை   பார்த்துவிட்டு செல்வோம் என்று நிணைத்து அவரின் சமாதிக்குச் சென்றார்..

அவரின் சமாதிக்கு அருகில் சென்ற புலவர் , சீதக்காதியே ,உன் வள்ளல் தன்மையை கண்டு உன்னைப்பாடி பரிசில் பெற்று செல்ல வந்தேன். நீயோ.எனக்கு பரிசில் வழங்காமல் சென்றுவிட்டாயே அய்யா...என்று தன் சோகத்தை சொல்லி பாடியுள்ளார்.

புலவரின் புலம்பல் பாடலைக் கேட்ட சமாதிக்குள் இருந்த சீதக்காதி , தன் கையை   மட்டும் சமாதியிலிருந்து வெளியே நீட்டி , பாடிக் கொண்டுருந்த புலவனை , இந்தாய்யா, லேட்டா வந்ததுமில்லாம இப்படி ஒரு புலம்பலா...ன்னு சொல்ற மாதிரி,ஒரு தட்டு தட்டி,  ஒரு மோதிரத்தை கொடுத்துவிட்டு .மீண்டும் சமாதிக்குள் கையை இழுத்துக் கொண்டாராம்.

இதைக் கண்டு திடுக்கிட்ட புலவர். மோதிரத்தை பெற்றுக் கொண்டு.. செத்தும் கொடுத்த சீதக்காதியே !!! என புகழ் ந்து பாடல் பாடினாராம்.

இந்தக்கதை பழைய விட்டாலாச்சர்யா கதை மாதிரி இருக்கேன்னு  . நீங்கள் கேட்கக்கூடாது.  எனக்கு சொன்னதை,நான் கேட்டதை  நான் உங்களுக்கு சொல்கிறேன்.

இதுவும் ஒரு வகை பதிவுதானே................


4 கருத்துகள்:


  1. நண்பருக்கு இந்தக்கதை உண்மையல்ல ஒரு ஏழைக்குடும்பத்து நபருக்கு ''வள்ளல் சீதக்காதி அவர்கள்'' இறந்தபிறகு கனவில் வந்து இந்த இடத்தில் புதையல் இருக்கிறது போய் எடுித்துக்கொள் என்று சொன்னதைக்கேட்டு மறுநாள் போய்பார்த்ததில் புதையல் எடுத்து இருக்கிறார் ஆகவேதான் அவருக்கு ''செத்தும் கொடுத்தார் சீதக்காதி'' என்று பெயர் வந்தது,,,,
    நான் கீழக்கரையைப்பற்றி நன்கு அறிந்தவன்.

    பதிலளிநீக்கு
  2. புலவர் தைரியசாலியா இருப்பார் போலிருக்கு ,பொணம் எழுந்து தட்டினா
    நமக்கெல்லாம் பேதி இல்லே போகும் ?சீதக்காதி செத்தும் கொடுத்தான் பேதின்னு வேணா நாம் சொல்லி இருப்போம் !
    த ம 1

    பதிலளிநீக்கு
  3. தாங்கள் சொல்வது உண்மையாக இருக்கலாம் கில்லர். எனக்கு சிவகாசியில் ஒருவர் கூறியதைத்தான் எனது பாணியில் பதிவுட்டுள்ளேன் தவறு என்றால் திருத்திக் கொள்ள தயராக இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. இந்தக் கதையே உண்மை இல்லையென்று கில்லர் சொல்கிறார். உண்மைக்கதையில் புலவர் தைரியசாலியா, புல்தடுக்கி விழுந்தவரான்னு கில்லர் சொன்னபிறகுதான் தெரியும் பகவான்.

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...