நேரு ஒரு லண்டன் நிருபருக்கு அளித்த பேட்டியில் பொதுவுடைமை கொள்கையை தான் ஆதரிப்பதாகவும் ஆனால் இப்போது ஜனங்கள் எல்லோரும் பொதுவுடைமை எனக் கருதும் கொள்கையை தான் ஆதரிக்கவில்லை என்றும் அத்தகைய பொதுவுடைமை கட்சியை தான் சேர்ந்தவன் இல்லை என்றும் குறிப்பிட்டிருந்ததை சுட்டி காட்டி பின்வருமாறு எழுதுகிறார் தந்தை பெரியார்
“இது உண்மையானால் தோழர் ஜவஹர்லாலுக்கு இந்த குணம் காந்தியாரின் சகவாசத்தால் ஏற்பட்ட குணம் என்று தான் சொல்ல வேண்டும். தோழர் காந்தியார் தான் இரு கூட்டத்தாடையும் நல்ல பிள்ளையாவதற்கு இவ்வித தந்திர மொழிகள் கூறி இரு கட்சியாரையும் ஏமாற்றி பெருமை அடைவதை அனுசரித்து வருகிறார். உதாரணமாக
“வர்ணாசிரம தர்மம் வேண்டும் அனால் எனது வர்ணாசிரமம் வேறு” என்பார்,
“ராம ராஜ்யத்க்காக நான் பாடுபடுகிறேன் ஆனால் எனது ராமன் வேறு” என்பார்
“ஜாதி பாகுபாடுகள் இருக்க வேண்டும். ஆனால் ஜாதி என்பதற்கு எனது கருத்து வேறு” என்பார்,
“ராஜாக்கள்,ஜமீன்தார்கள் இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் ஏழைகளுக்காக இருக்கவேண்டும்” என்பார்,
“பிரிட்டிஷாருக்கு இந்திய அரசியலில் சில பாதுகாப்புகள் இருக்க வேண்டும். ஆனால் அது இந்தியாவின் நன்மைக்காக இருக்க வேண்டும்” என்பார்,
“ஏழைகள், தொழிலாளர்கள் ஷேமமாக இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் பெட்டியில் பணம் இருக்க கூடாது” என்பார்,
“தீண்டாமை ஒழிய வேண்டும் .ஆனால் தீண்டப்படாதவரகள் சூத்திரர்களுக்கு சமானமாய் கருதப்படவேண்டும்” என்பார்,
தீண்டத்தகாதவர்களுக்கு கோவிலுக்குள் சமஉரிமை இருக்க வேண்டும். ஆனால் கோவிலுக்குள் சூத்திரர்கள் இருக்கும் இடத்தில் தான் அவர்கள் இருக்க வேண்டும்” என்பார்
இந்தப்படி எந்த விசயமானாலும் “ஆனால்” போட்டு திருப்பிவிடுவது அவரது சாமர்த்தியம் என்பதை தோழர் காந்தியாரை ஒரு மனிதர் என்று கருதியிருக்கும் யாவரும் அறிவார்கள்.
- ஜவர்லாலும் பொதுஉடைமையும், புரட்சி – தலையங்கம் – 17.12.1933
யானைக்கும் அடி சறுக்கும் என்பது சரிதான் :)
பதிலளிநீக்குஅறிந்திடாத அரிய விடயம்
பதிலளிநீக்குபெரியார் பெரியார்தான்
பதிலளிநீக்குநல்லாத்தான் தாக்கி இருக்கிறார்...!
பதிலளிநீக்குஅவர் தியாகி வலிப்போக்கரே,
பதிலளிநீக்குநல்ல பதிவு
பதிலளிநீக்குதேசத்திற்கு விடுதலையே வேண்டாம் ,வெள்ளைக்காரனே ஆளவேண்டும் என்று மாட்சிமை தாங்கிய மன்னருக்கு பிராது கொடுத்த ஒரு தறுதலை கூட்டத்தின் தலைவனல்லவா இப்படித்தான் இருக்கும் அவருடைய சிந்தனையும் ,பேச்சும்.
பதிலளிநீக்குபுதிய தகவல். பகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்குநல்ல நகைச்சுவை ! :-)
பதிலளிநீக்குYou cannot accuse me of placing a wrong emphasis on varnashrama dharma
https://raattai.wordpress.com/2015/05/01/you-cannot-accuse-me-of-placing-a-wrong-emphasis-on-varnashrama-dharma/
“My Varnashrama” – Gandhi
https://raattai.wordpress.com/2016/01/26/my-varnashrama-gandhi/
காந்தியின் ஆசிரமத்தில் (தென்னாப்பிரிக்காவில் கூட) வர்ணாஸ்ரமத்தை கடைபிடித்ததில்லை.
காந்தியின் ஆசிரமத்தில் வசித்த தமிழ் (பறையர்) குடும்பம்
https://raattai.wordpress.com/2016/01/26/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5/
சபர்மதி ஆசிரமத்தில் வளர்ந்த காந்தியின் வளர்ப்பு மகள் லட்சுமி (பட்டியல் சாதி)
https://raattai.wordpress.com/2016/08/05/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/ இவர் 1933 மார்ச் 8 ஆம் தேதி மதராஸ் பார்ப்பனரைக் கரம்பிடித்தார். திருமணம் ஆசிரமத்தில் வைத்து நடைபெற்றது. வரன் தேடியவர் காந்தி.
1927 முதல் ஆசிரமத்தில் ஒரே சாதியில் திருமணங்கள் நடைபெறாது என முடிவு எடுக்கப்பட்டது. 1940களில் மணமக்களில் ஒருவர் பட்டியல் சாதியாக இருந்தால் மட்டுமே ஆசி வழங்கியவர் காந்தி. (தன் மடியில் வளர்ந்த நாராயண் தேசாயின் கல்யாணத்துக்கு காந்தி செல்லவில்லை https://tkan.wordpress.com/2015/06/04/narayan-desai-a-journey-in-the-radiance-of-gandhi/)
சந்திரசேகர சரஸ்வதி காந்தியை வர்ணவதம் செய்யவந்தவர் என எச்சரிக்கிறார். ஏன் ? https://raattai.wordpress.com/2015/01/29/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D/
1936 ல் காந்தியை இந்து அல்ல என அறிவிக்கக் கோரி சனாதனிகள்/சங்கராச்சரிகள் பிரிட்டிஷ் அரசிடம் மனு அளித்தார்கள். ஏன் ?
காந்தியின் ஆசிரமத்தில் பார்ப்பனர்கள் உட்பட அனைவரும் மலம் அள்ளினார்கள் https://raattai.wordpress.com/tag/bhangi/
இதெல்லாம் பெரியாருக்குத் தெரியாதா ? தெரியும். ஆனால் சும்மா அரசியலுக்காக பேசுவார்.
இதுதான் இரட்டை நாக்கு https://raattai.wordpress.com/2015/06/13/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/