எங்கள் தெருவுக்கு
அடுத்த தெருவில்
இரண்டு பணம்
கொடுக்கும் இயந்திரங்கள்
அதில் ஒன்று
சென்ற மாதத்திற்கு
முன் மாதத்தில்
இருந்தே பகலும்
இரவுமாய் ஓய்வறியாமல்
வந்தவர்களுக்கு பணம்
கொடுத்து சிவந்த
கரமாய் காட்சி
அளித்த வேளையில்
திடிரென்று கொடுக்கும்
பணத்தை வாங்க
எங்கள் தெருவரை
வரிசை வரிசையாய்
மக்கள் கூட்டம் .
ஜெ..ஜெவென்று
இருந்தது தெரு
ஒருநாள் பணம்
கொடுக்கும் இயந்திரம்
இறந்துவிட்டது என்று
துக்கத்துடன் அழுது
மாலை அணிவித்தனர்
தெரு மாதர்கள்.
அந்த நிகழ்வுக்குப்பின்
தெரு வாசிகளும்
துக்க முகத்துடனே
காட்சி தருகிறார்கள்
கடந்த ஒருவாரமாக
அந்த இயந்திரம்
குந்தியிருந்த இடம்
பூட்டியே கிடப்பதால்
தெருவே வெறிச்
சோடி கிடக்கிறது..
வாரத்தில் ஏழுநாளும் ,இருபத்து நான்கு மணி நேரமும் செயல்பட்ட atmக்கு வந்த கதி :)
பதிலளிநீக்குஇங்கு எங்கும்...!
பதிலளிநீக்குதங்களின் தெருவிற்கு அருகில்மட்டுமா
பதிலளிநீக்குஎங்கெங்கும் காணும் காட்சி அல்லவா
அஞ்சலி செய்வது நமது கடமை நண்பரே
பதிலளிநீக்குஏ.ரி.எம். செயலிழந்தால்
பதிலளிநீக்குநிலைமை என்னாகும்?
அதைப் படித்தேன்
இங்கே