இளமையில் அழகாக
இல்லை முதுமையில்
அழகாக இருக்கிறாய்.
- ஒரு பாட்டி சொன்னது
ஓடோடி சென்றேன்
கண்ணாடியில் பார்க்க
தேடியும் கிடைக்கவில்லை
கண்ணாடி.......பாட்டி
சொன்னது உண்மையாய்
இருக்கும்... இல்லையென்றால்
கண்ணாடி கிடைத்திருக்குமே...
இளமையில் அழகாக
இல்லை முதுமையில்
அழகாக இருக்கிறாய்.
- ஒரு பாட்டி சொன்னது
ஓடோடி சென்றேன்
கண்ணாடியில் பார்க்க
தேடியும் கிடைக்கவில்லை
கண்ணாடி.......பாட்டி
சொன்னது உண்மையாய்
இருக்கும்... இல்லையென்றால்
கண்ணாடி கிடைத்திருக்குமே...
படித்தவர்கள் எல்லாம்
அறிவாளிகள் அல்ல
படிக்காதவர்கள் எல்லாம்
முட்டாள்களும் அல்ல.
ஆனால்..
படித்தவர்களும் முட்டாள்களும்
படு மகா காரியவாதிகளாக
ஆகிவிட்டார்கள்.....இதில்
நீ எதில் சேர்த்தி.....
வர்க்கததை ஆய்வு செய்தவர்கள்
வர்ணத்தை ஆய்வு செய்யவில்லை- என்றார்.
கூடவே, கொக்கு தலையில் வெண்ணெய்
வைத்த கதையையும் சொன்னார்..
சரி, என்று புரிந்தது போல்
தலையை ஆட்டிவிட்டு
கொக்கு தலையில் வெண்ணெயை
வைக்க சொன்னவர் யாரென்று கேட்டேன்
இதை படி என்றார்
படித்தேன்..
”சாதி அமைப்பை மாற்றுவது என்பது
சமூக ஒழுங்கை சீர் குலைக்கும் செயல் ““
”உயர்சாதியினர் மனம் மாறி தீண்டாமையை
அவர்களாகவே கைவிடும்வரை தீண்டாமை ஒழியாது ”
எனக்கு புரிந்து விட்டது கொக்கை பிடிக்க கொக்கு தலையில் வெண்ணையை வைக்க சொன்னவர் யாரென்று...
உங்களுக்கு................................
அவரும் அவுங்களும்
காதலித்து திருமணம்
முடித்தவர்கள் அவர்களுக்கு
ஆணொன்று பெண்னொன்று
இரு குழந்தைகள்
அவரு அவுங்களை
இன்றுவரை பெயர்
சொல்லி அழைத்ததில்லை
அடிமை சொல்லான
டீ போட்டு அதிகாரம்
செய்ததில்லை அவுங்க
அவரை கோபமாக
அன்பாக அழைத்தாலோ
என்னங்க மேடம்
என்றபடிதான் போய்
நிற்பாரம்.. என்ன
காரணம் என்று
விசாரித்தபோது அவரு
கீழ்மட்டமாம் அவுங்க
மேல் மட்டமாம்... இன்றைய
சமூகத்தில் கீழ்மட்டத்தை
உதறி தள்ளிவிடாமல்
விடாப்பிடியாக போராடி
கைப்பிடித்தாராம்....அவுங்க
தாய் தந்தையரும் தடுத்தும்
ஆணவக் கொலையளவுக்கு
செல்லாமல் அவர்
அவுங்களுக்கு மதிப்பும்
மரியாதையும் தருவதை
கண்டு பிரமித்து போய்
அவரை வாழ்த்துகிறார்களாம்
முட்டாளாக நடித்தான்
அவர்கள் அவனை
அறிவாளியாக ஏற்றுக் கொண்டார்கள்
அறிவாளியாக நடித்தான்
இவர்கள் அவனை
முட்டாளாக மாற்றி விட்டார்கள்
எப்படி பார்த்தாலும்
அவன் நடிகன்
எனது தாயார்
இன்று...
புரட்டசியாக..
பௌர்ணமியாக..
இருக்கட்டும்
ஆனால்
இன்றைய..
20.09.21
என்பது
எனக்கு
என் தாயார்
நினைவுதினம்.
மட்டுமே
தெரியும்....
அங்கின உள்ள மசிரு
அது நரைத்தால் என்ன...
நரைக்காமல் போனால் என்ன...
உன் வாழ்க்கையில் நீ
சிற்றின்பம் பெறவில்லை..
பேரின்பமும் கிடைக்கவில்லை....
அட....போடா..மசிற பத்தி
கவலப்பட்டுகிட்டு..........
காலை வேளையில்
நகரத்தின் ஒரு
தெருவில் சண்டை
சச்சரவு..........
ஏன் ? சண்டை
எதற்கு சச்சரவு
வேடிக்கை பார்த்த
போது கேட்டது...
“ நான் தேவடியாள்தான்
அதுக்காக அவன்கள்
கொடுக்கிற காசுக்காக
வாறவன் போறவன்
கிட்ட எல்லாம்
படுக்க முடியுமா..???"
சண்டையில் வந்த
அந்த வார்த்தை
வாறவன் போறவன்
யார் ? என்றால்
கீழ்சாதி பயல்களாம்.
அவர்களும் காசு
கொடுத்துதானே....!!!
“ அவர்கள் காசு
யாருக்கு வேணும்......"
சற்று நேரத்தில்
பார்வை திசை
மாறிய போது.......
“என்னங்கடா வேடிக்கை
நான் இங்கே..
அவுத்து போட்டா
ஆடுறேன் போங்கடா..
ஒங்க சோலிய
பாத்துகிட்டு................!
காலையிலேயே வெயில்
சுட்டெரித்து விட்டது
நீல வானம்
வெண் மேகமாகி
சட்டென்று கரு
நிறமேகமாக .திரண்டது.......
தலை அண்ணாந்து
கண் விரிந்து
வாய் பொளந்து
பார்த்து கொண்டிருந்தவனின்
வாயிலும் கண்ணிலும்
சட சட வென்று
தண்ணீரை கொட்டி
என்னடா வேடிக்கை
என்று விரட்டியடித்தது
மழை..................
நண்பரே! உடலில்
உள்ள தோலில்
படர் தாமரை
வந்தால் உடல்
நாசமா போகும்
அதே தாமரை
குளத்தில் வளர்ந்தால்
அந்த குளமே
நாசமாகும்.....
இப்படியான தாமரை
நம் தமிழ்நாட்டில்
மலர்ந்தால் தமிழ்
நாடே சுடுகாடாகும்...
ஏற்கனவே அடிமைகளின்
ராஜ்ஜியத்தில் நாசமான
தமிழ்நாடு சுடுகாடாகும்
புரிந்து கொள்
தெரிந்து கொள்...
-சொன்னார் அவர்.
முரண்பாடுகளும் வேறுபாடுகளும்
கொண்ட ஏழு எட்டு
கட்சிகள் பதவிக்காக
ஓரணியில் சேர்ந்ததுகள்
அதுக்கு பேரு
கூட்டணி கட்சிகளாம்......
https://www.google.co.in/url?
கழிப்பறையில்
அமர்ந்திருக்கும்போதும்
பல் விளக்கும்போதும்
உணவு அருந்தும்போதும்
வரும் சிந்தனை
சும்மா இருக்கும்போது
வருவதில்லை........
................................
பார்க்கும் ஒவ்வொரு
நேரத்திலும் அவள்
புன்னகை செய்தாள்
அந்த புன்னகை
எந்த வகை
என்று இன்று
வரை தெரியவில்லை...
பலமுறை அந்த கூட்டத்தில்
அவரை பார்த்திருக்கிறேன்
அவருடன் பேசியதில்லை
வெறும் பார்வையுடன்தான்
அவரிடம் அதுவுமில்லை..
தமிழ்சரத்தில் எந்தவொரு
இணைப்பையும் திறந்தால்
வருமே ஒரு வேளை
ஒரு வேளை என்று
அதுமாதிரி ஒருவேளை
ஊமையாக இருப்பாரோ
என்று எனக்கு
சந்தேகம் இருந்தது.
பல நாளில் ஒரு நாள்
அந்த சந்தேகமும்
தீர்ந்தது....அந்த
சந்தேகத்தை அவரே
தீர்த்து வைத்தார்
ஒருநாள் எனது
கைப்பேசிக்கு அழைப்பு
வந்தது. அழைத்தவர்
தன்னை அறிமுகம்
செய்து கொண்டு
தகவல் அறியும்
உரிமை பற்றி
சந்தேகம் என்னை
நேரில் சந்திக்க
வாய்ப்பு கேட்டார்
கரோனா நோய்
தொற்றால் கூட்டம்
நடக்கவே இல்லை
என்பதால் நானும்
ஒருவித தயக்கத்துடன்
யார்.. எவர்
என்று தெரியாத
நிலையில் சரி
வாருங்கள் சந்திப்போம்
என்று அனுமதியளித்தேன்.
சந்திக்கும் இடத்தில்
என்னைக் கண்டவுடன்
வணக்கம் சொன்னார்.
ஆ. ஆ...எனக்கு
அதிர்ச்சி ஊமை
பேசி விட்டாரே...
காதுகேட்பு கருவியை
காதில் பொருத்தியபடி
அவரே தொடர்ந்தார்
அவருக்கு விளக்கம்
அளித்து அவரை
அனுப்பி வைத்தப்பின்
என் மனம்
சந்தேகம் தீர்ந்ததில்
மகிழ்ச்சியாக இருந்தது.
..........................
பெரியார் நிலையம்
எங்கே உள்ளது
என்று தகவல்
கேட்டால் வரும்
பதிலில் பெரியார்
நிலையமே இல்லை
என்று தகவல்
வந்தால் எப்படி
இருக்கும் அப்படித்தான்..
அவருக்கு வந்தது..
அவரைப் பற்றிய
என் சந்தேகத்தையும்
தெரிவித்து விட்டேன்.
ஆமாம் பெரியார்
பஸ் நிலையம்
எங்கே!! ...............
............................
போலீஸ் உங்கள் நண்பன்
அப்படி நிணைத்துதான் காவல்
நிலையம் போனார் அங்கே..
பேருக்கு இரண்டு மூன்று
பேர்கள் மட்டுமே இருந்தார்கள்
காவல் நிலைய ரைட்டர்
என்பவரிடம் புகார் மனுவை
கொடுத்தார் அதை வாங்கி
படித்தவர் இல்லை பார்த்தவர்
இரவு ஏழு மணிக்கு
மேல் வரச் சென்னார்
கேள்வி கேட்பது காவலர்க்கு
பிடிக்காது என்று நண்பர்
சொல்லி தெரிந்து கொண்டதால்
மேற்க் கொண்டு எதுவும்
கேட்காமல் தலையை மட்டும்
ஆட்டி விட்டு நகர்ந்தார்...
வெளியில் வந்து நின்றவரிடம்
கேட்டார் அய்யா காவல்
நிலையத்தில் காவலர்கள் இல்லையே
ஏன்? ...அதற்கு அவர்
பதில் சொன்னார் காவலர்கள்
வசூலுக்கு சென்று இருக்கிறார்கள்
என்று.. ஆச்சரியம் மேலிட
வசூலுக்கா என்று கேட்டு
வாய் பொளந்தார். சட்டென்று
அவருக்கு நிணைவுக்கு வந்தது.
தலைக்கவசம்..முகக்கவசம்
இல்லாமல் இல்லையில்லை
அணியாமல் இரு சக்கர
வாகனத்தில் சென்ற போது
நட்டநடு ரோட்டில் வந்து
இடை மறித்து இழுத்து
சென்று ஸ்பாட் ..ஆன்லைன்
என்று அபதாரம் போட்டது
சொன்னவரிடம் விடைபெற்று
காவல் நிலையத்தை விட்டு
நடையை கட்டினார்.
காவலர்கள் வசூலுக்கு சென்று
இருக்கிறார்கள்.................
ஓட்டு போடும்....மனிதர்க்கு.....
தேர்தல் என்ற பெயரில் தாங்கள்
இனியும் நீங்கள் முட்டாளாக ஆக வேண்டாம்
உங்களின் வரி பணத்தை கோடி
கோடியாக செலவு செய்து
இனி வரும் தேர்தலிலும் செலவு
செய்து வீணடிப்பார்கள் என்பதை
தெரிந்து கொள்ளுங்கள்......
நீங்கள் ஓட்டு போட்டாலும்
போடா விட்டாலும் EVM மே
ஒருவரை தேர்ந்தெடுக்கும்..
இனியும் இந்தியா ஒரு
ஜனநாயக நாடு என்று
உங்கள் ஜனநாயக கடமையை
ஆற்றுங்கள் என்று ஊதி
பெறுக்கும் செய்தியை
நீங்கள் நம்ம வேண்டாம்
நீண்ட வரிசையில் நின்றாலும்
நீண்ட நேரம் காத்திருந்து
ஓட்டு போட்டாலும் உங்களுக்கு
கிடைப்பது என்னவோ
கையில் கருப்பு மைதான்
பல தேர்தலிலும் ஓட்டு
போட்ட உங்களுக்கு போடப்பட்டதோ
அடக்கு முறை சட்டங்கள்தான்..
நீங்கள் மாற்றத்துக்குதான் ஓட்டு
போட்டேன் என்று சொன்னாலும்
இதுவரை மாறவில்லை என்பதுதான்
உண்மை... அதனால்..
உங்கள் ஓட்டுக்கு எந்த
வலிமையும் இல்லை. அப்படியே
இருந்தாலும் EVM ஆல்
அந்த வலிமை உங்களுக்கு
இல்லாமல் ஆக்கப்படுகிறது..
ஆளுவதோ அதிகாரி
தீர்மானிப்பதோ அதிகாரி
இந்தியா ஒரு ஜனநாயக நாடு
என்று சொல்லிக் கொள்ள
இடையில் நீங்களும் உங்களின்
வாக்கு சீட்டும்......
முடிவு எல்லாம் அவர்கள்
கையில் இருக்கும்போது
உங்களுடைய வாக்கு
சீட்டு என்ன செய்துவிட முடியும்...
EVMயை எதிர்த்து................

உசிலம்பட்டிக்கு அருகிலுள்ள தொட்டப்பநாயக்கனூரில் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள மாணவி நிஷாந்தினி - தற்கொலை. நிஷாந்த...