ஞாயிறு 19 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-70

  ஒரு தற்கொலை.மரணம் என்று சொல்லப்பட்டது





Image result for  வயதான காமம்





என்னைக் கண்டதும் “ வாங்கண்ணே..” என்ன விசேசம் காலையிலே வந்திங்ட்டீங்கே” வேலையில்லையாக்கும் என்றவர்க்கு”  கிட்ட வந்துசொல்றேன் என்று சைகையால் பதில் சொல்லி விட்டு ..இரு சக்கர வாகனத்தை ரோட்டின் ஓரமாக நிறுத்திவிட்டு, 

வேலையில்லாமல் இல்லைண்ணே...“எங்க ஏரியாவுல..டோட்டல் ஆப்” ண்ணே என்றபோது.. அதானே... பாத்தேன்..என்னடா..அண்ணன் நம்மல மறக்காம பாக்க வந்திருக்காருண்ணு ”   அவர் சொல்லிக் கொண்டிருந்தபோது..
அவருக்கு அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து நாலு மடக்கு தண்ணியை குடித்துவிட்டு அமைதியாய் அவரைப் பார்த்தேன்.

 துணைக்கு ஆளில்லாமல் இருந்தேன். நீங்க வந்தது நல்லதாய் போச்சு... வாங்க..பக்கத்து தெருவில் உள்ள  ஒரு கேத வீட்டுக்கு போயிட்டு வருவோம் என்று எழுந்தவர் என் கையைப் பிடித்துக் கொண்டு நடந்தார்

நானும் அவருடன் சேர்ந்து நடந்தபடியே...யாருண்ணே.... சொந்தமா.?.பழக்கமா? என்று விசாரித்தேன்...  வாடகைக்கு இருக்கும் கடையின் ஓனரின் அப்பா என்று தெரிந்தது.  போகும்போதே கடையில் வேலை செய்து கொண்டியிருந்தவர்..வண்டியில் வந்து மாலையை கொண்டு வந்து கொடுத்தார் . அவருக்கு பதிலாக நான் வாங்கிக் கொண்டு அவருடன் பேசிக் கொண்டே நடந்தேன்.

கேத வீட்டுக்கு அருகில் வந்ததும்..மாலையை அவர் கையில் கொடுத்துவிட்டு அவருடனே வீட்டுக்குள் நுழைந்து சவப் பெட்டி அருகில் நின்று இறந்தவரை பார்த்தேன். அண்ணன் மாலையை போட்டுவிட்டு.. என்னை அழைத்துக் கொண்டு வெளியே வந்து நாற்காலியில் அமர்திருந்தபோது..அண்ணனுக்கு தெரிந்தவர்களும்... அவரை வைத்து என்னை தெரிந்தவர்களும் ஒருவருக்கொருவர் வணக்கம் சொல்லிக் கொண்டோம்..அப்படி வணக்கம் சொல்லிக் கொண்டவரும். அண்ணனும் மிகவும் ரகசியமான குரலில் பேசிக் கொண்டனர். கவனித்த நான் பிறகு அண்ணனிடம் கேட்டுக் கொள்ளலாம் என்ற நிணைப்பில் என்னை விசாரித்தவரிடம் பேசிக் கொண்டிருந்தேன்.

ஒருவழியாக  பேச்சு ஓய்ந்த பின்...சுடுகாட்டுவரை போகனுமான்ணே னு கேட்டபோது.... வேறு வேலை இருக்கான்ணே ன்னு என்னை திருப்பிக்கேட்டார்.. இல்லணே....என்றபோது பார்ப்பம் என்றார்

இறந்தவரை நாலு மணிக்கு மேல்தான் துாக்குவார்கள் என்பதால் அரைமணி  நேரத்துக்கு மேல் அமர்ந்துவிட்டு..கடைக்கு வந்துவிட்டோம். கடைக்கு அண்ணன் வந்ததும் பக்கத்து கடைக்காரரும் வந்தமர்ந்திருந்தார். இருவரும் இறந்தவரை பற்றி பேசினார்கள்....அவர்களின் பேச்சிலிருந்து நான் தெரிந்து கொண்டது.

இறந்தவர் அந்த ஏரியாவில் செல்வாக்கானவர். அவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் நாலு ஆண்பிள்ளைகள். எல்லோருக்கும் திருமணம் முடித்து அவரவர்களுக்கு சேர வேண்டிய சொத்து பத்துக்களை செட்டில் பன்னிவிட்டு இவரும் மனைவியும் , தற்போது  போய்வந்த வீட்டில் தனியாக வசித்து வந்தனர். இறந்தவரின் மனைவி நாலு வருடத்திற்கு முன் இறந்துவிட்டார்.  இரண்டு தெருவுக்கு தள்ளியிருந்த மகளின் வீட்டிலிருந்ததான் அவர்க்கு உணவு வந்தது.  இப்படியாக அவரின் வண்டி ஓடிக் கொண்டியிருந்த வேளையில் பக்கத்து வீட்டில் குடியிருந்தவர்களின் மகள் திருமணமாகி ஒரு குழந்தையுடன்  கோபித்துக் கொண்டு தங்கிவிட்டவள்.

இறந்தவருக்கு சில உதவிகள் செய்ய..இவரும் அந்தப் பெண்ணுக்கு வேண்டிய காசு பணம் கொடுக்க...இப்படியாக அவர்களுக்குள் கசமுசாவாகி கூடா நட்பாகி எந்த இம்சையும் இல்லாமல் தொடர்ந்து வளர்ந்திருந்தது.

ஒரு கட்டத்தில்அந்தப் பெண்ணின் மாமனார் மாமியார் வீட்டார்களும், தாய் தந்தை விட்டாள்களும் சமரசம் பேசி அழைத்து செல்ல வந்தபோது.. கணவர் வீட்டுக்கு செல்ல மறுத்தாள். பிறகு எப்படியோ ஒரு தடவைக்கு இரு தடவை பேசி அந்தப் பெண்னை கணவர் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள்.

அப்படி அந்தப் பெண் சென்ற ஒரு வாரத்தில் கணவர் வீட்டில் பிரச்சனை எழுந்தது. அவளின் கணவன்தான் பிரச்சனையை கிளப்பினான். குழந்தை பிறந்த நாள் முதல்  தாய் வீட்டுக்கு சென்றவள்... கர்ப்பமாக இருக்கிறாள். இந்த கர்ப்பத்துக்கு யார் காரணம்.... அந்தப் பெண்ணும் இறந்தவரை காட்டிக் கொடுக்கவில்லை...திரும்பவும் தாய் வீட்டுக்கே திரும்பி விட்டாள்... தாய் வீட்டில் அந்த கர்ப்பத்துக்கு காரணம் யார் என்று கேட்டு பல வழிகளில் இம்சை படுத்தப்படுகிறாள்.

இறந்தவர், அவள்  கர்ப்பத்தை கலைக்க முயன்றபோது..அது எல்லை கடந்தாகிவிட்டது என்பது தெரிய வருகிறது. .என்ன செய்வது உங்களை சொல்லட்டுமா  ?என்று அவள் அவரிடம் கேடகிறாள். அவர் யோசிக்கிறார்.

தன் செல்வாக்காலும் தன் மகன் மகள்கள் செல்வாக்காலும்  தன்னை காப்பாற்றிக் கொள்ளலாம். அந்தப் பெண்ணனின் நிலையை எண்ணிப் பார்க்கிறார்.  முன்பின் யோசிக்காமல்  இருந்து விட்டோமே  என்று புலம்புகிறார். ஒரு கட்டத்தில் அந்தப் பெண்ணை அழைத்து தன்னிடம் இருந்த அத்தனை பணத்தையும் கொடுத்து உன் கர்ப்பகத்துக்கு தான்தான் காரணம் என்று சொல்லி விடாதே!...வயதான காலத்தில் எனக்கு புத்தி கெட்டு போய்விட்டது.. நீயும் என்னுள் ஆசையை வளர்த்துவிட்டாய்...உன்னைச் சொல்லியும் குற்றமில்லை... சரி ,இனி பேசிப் பயனில்லை... என் மீது உனக்கு அன்பும் காதலும் உண்மையாய் இருந்தால் என்னை காட்டி கொடுத்துவிடாதே!
போய் வா என்று விட்டு ...மறு நிமிடமே தன் கதையை முடித்துக் கொண்டார்.

உணவு கொண்டு வந்த மகளின் பேரன் வருகிறான். தூக்கில் தொங்கும் தாத்தாவை காண்கிறான் தகவல் பரவுகிறது.  இதற்கிடையில் தன் மகளை தொடர் கண்காணித்து வந்த தாயும் தந்தையும் தன் மகள் பணக்கட்டுடன்
இறந்தவரின் வீட்டிலிருந்து வருவதை காண்கிறார்கள். மகள் திருடிக் கொண்டு வருகிறாள் என்று  உதைத்தவர்கள்..  மகளின் வாக்கு மூலத்தை கேட்டவர்கள் அமைதியாகிவிட்டார்கள்...

பின் இறந்தவர் பிள்ளைகளின் செல்வாக்கால்..ஒரு தற்கொலை இயற்கை மரணமாக்கப்பட்டது.... இறந்தவரின் மரணத்தின் ஊடே இரு வீட்டார்களும் அமைதியாகிவிட  அரசல்புரசலாக ..  இரகசியமான இந்த விபரம்.  போன இடத்தில் எனக்கு தெரியவர... இந்த விபரம் என் மூலமாக  தங்களுக்கும் இந்த உலகத்துக்கும்   தெரிந்துவிட்டது. 

2 கருத்துகள்:

  1. எல்லா இடங்களிலும் இப்படிக் காட்சிகள் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது நண்பரே...

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...