செவ்வாய் 21 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-71

மானம் காத்தவர்................?




Image result for மானம்









அது லட்சுமி கிளினிக்.. முதிய வயது பெண்ணும் ,இளவயது பெண்ணுமாக உள்ளே சென்று காலியான இருக்கையில் அமர்ந்தார்கள். கிளினிக்கில் நர்சு பெண் அமர்திருந்த முதிய பெண்ணை பார்த்து “நல்லா இருக்கிங்களா” என்று கேட்டு புன்னகைத்து விட்டு சென்றது.

வரிசைப்படி..நாலைந்து பேர்களுக்குப்பின் முதிய வயது பெண்ணும். இளவயது பெண்ணும் மருத்துவர் அறைக்குள் சென்றார்கள்.. முதிய வயது பெண்ணைப் பார்த்ததும் அந்த பெண் மருத்துவர் நலம் விசாரித்தார்...பின் தற்போதுள்ள உடல் குறைகளை கேட்டறிந்து.அதற்கு தகுந்த மாத்திரை .மருந்துகளை எழுதி கொடுத்துவிட்டு சாப்பிடும் முறைகளை தெரிவித்தவிட்டு உடன் வந்த இளவயது பெண்ணை யாரென்று விசாரிக்கிறார்.


அவளைப்பற்றிய விவரத்தை கூறிய பின் மிக மெதுவான குரலில் அந்த இளவயது பெண்ணை அழைத்து வந்த நோக்கத்தை  தெரிவிக்கிறார். புரிந்து கொண்ட மருத்துவர் அந்த இள வயது பெண்ணை விசாரணை செய்கிறார்.

அந்த இளவயதுப் பெண்ணும் எதையும் மறைக்காமல்  சொல்கிறாள்.

என் கணவர் வயதானவர் அவருக்கு பிள்ளை இல்லாததால் என்னை இளையதாரமாக அவருக்கு கட்டி வைத்துவிட்டார்கள். எனக்கும் பிள்ளையில்லை.. கிராமத்தில் மழை தண்ணி இல்லாததால் பிழைப்பு தேடி, நகரத்துக்கு வந்து கடைசியாக இந்தம்மா குடியிருக்கும் தெருவுக்கு குடி வந்ததோம்...படிப்பறிவு எதுவும் எனக்கு இல்லாததால் கட்டிட சித்தாளாக வேலை பார்த்து வாழ்ந்து வந்தோம்...மூன்று வருடங்களுக்கு முன் என் கணவர் இறந்துவிட்டார்.. எனக்கு  தாய் தந்தை யாரும் இல்லை..ஆகையால் கிராமத்துக்கு செல்லாமல் இங்கயே தங்கி வேலை செய்து வாழ்ந்து வருகிறேன். இந்நிலையில் எனக்கு வேலை கொடுக்கும் கட்டிட காண்ட்ராக்டர்  என்னை  அவருடைய ஆசைக்கு பயன்படுத்திக் கொண்டார்.

என் வாழ்க்கைக்கு வேறு வழியெதும்இல்லை வேறு வழியும் இல்லாததால் வேலை கொடுக்கும் முதலாளியின் ஆசைக்கு மறுப்பு ஏதும் சொல்லாமல் அடிபணிந்தேன். எப்போதும் மாதத்தில் முறையாக தீட்டு வந்துவிடும்.. கடந்த இரண்டு மாதமாக தீட்டு வரவில்லை. இந்தம்மாவிடம் உண்மையைச் சொல்லி சந்தேகமாக கேட்டபோது..நான் மாசமாக இருப்பதை தெரிவித்தார்.

கரு கொடுத்தவரிடம்  நிலைமைச் சொல்லி அழுதபோது...அவர் உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவரென்றும் நான் தாழ்ந்த சாதியென்றும்..கருவை கலைத்துவிட சொன்னார்.. எனக்கும் அவர் சொல்வதுதான் சரிஎன்று பட்டது. கணவர் இல்லாத நான் பிள்ளை பெற்றால். ஊர் தூற்றுவதோடு என்னை பாதுகாப்பதற்கும் யாருமில்லை... இந்தத் தாயிடம் அழுது முறையிட்டபோது..
மனமிறிங்கி தங்களிடம் அழைத்துவந்தார். தயவு செய்து அம்மா..என் மீது இரக்கப்பட்டு. என் கருவை அழிப்பதோடு .கரு உண்டாகத அறுவை சிகிச்சையும் செய்து விடுங்கள். அதற்கண்டான செலவை தெரிவித்தால்.என் முதலாளிடம் வாங்கி  இந்த அம்மா மூலம் செலுத்தி விடுகிறேன். என்னை காப்பாற்றுங்கள் அம்மா என்று மருத்துவரின் காலில் விழுந்து வணங்கினாள்.

அந்த முதியவயது பெண்ணும் பாவம்மா.....நீங்கள் மனது வைத்து இவளை காப்பாற்றி விடுங்கள்...ஆகும் செலவை இவள் முதலாளி தருகிறேன் என்றார்.
எவ்வளவு என்று சொல்லுங்கள் பணத்தை வாங்கி வந்துவிடுவாள் என்றாள்..

எல்லாவற்றையும் கேட்டு தெரிந்து கொண்ட அந்த மருத்துவர்  சில கணம் யோசனையில் ஆழ்ந்தார் பின் மருத்துவ சீட்டில் அந்த இளவயது பெண்ணின் பெயர் அவருடைய வயது எல்லாவற்றையும் எழுதிக் கொண்டு உள்ளறையில் அழைத்துச் சென்று அந்தப் பெண்ணை பரி சோதனை செய்தார்.

பின் இளவயது பெண்ணிடம்  அருகில் உள்ள லேப் பெயரைச் சொல்லி.. ஸ்கேன் எடுத்துவரச் சொல்லி..எழுதிய குறிப்பு சீட்டை கொடுத்து, முதிய வயது பெண்ணிடம் அந்தப் பெண்ணை காப்பாற்றி விடலாம்.என்று சொல்லி விட்டு நீங்கள் விடாமல் மருந்து மாத்திரையை சாப்பிட்டு வரச் சொல்லி இருவருக்கும் ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தார்

சில நாட்கள் கழித்து சுகமான அந்த இளவயது பெண்..அந்த முதிய வயது பெண்ணின் வீட்டிற்கு வந்தவள்... புன்னகையுடன் காட்சியளித்த முதிய வயது பெண்ணின் புகைப்படத்தை தொட்டு  ” என்னை காப்பாற்றியதற்கு நன்றியம்மா!..என்று முனு முனுத்து கண்ணீர் சிந்தியபடி வணங்கிச்  விட்டுச் சென்றாள்...


4 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. நிலவும் டிஜிட்டல் யுக காலத்தில்... மேற்படி சம்பவம் கற்பனை இல்லை நண்பரே!!

      நீக்கு
  2. போற்றுதலுக்கு உரியவர் அந்த முதிய வயதுப் பெண்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போகும்போது ஒரு நண்மை என்று எடுத்துக் கொள்ளலாம் நண்பரே..!!!

      நீக்கு

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...