சனி 12 2025

ஆர்.எஸ்.எஸ்- பாஜக எனும் நச்சு வைரிகள்!!! பயங்கரவாதிகள்.!!!

 Comrede Uthman Ali




எந்த ஒரு
மாவோயிஸ்ட்டாவது
மலையை
மொட்டை அடிக்கிறானா?

எந்தவொரு
மாவோயிஸ்ட்டாவது
தனியார்
விமான நிலையம்/துறைமுகம் கட்டி
கொள்ளையடிக்கிறானா?

சுங்கச்சாவடி
வழிப்பறி செய்கிறானா?

பெண்களை
பாலியல் வன்முறை செய்துவிட்டு
சாமியார் வேஷம் போடுகிறானா?

"குன்றிருக்கும் இடமெல்லாம்
குமரன் இருக்கிறான்!"
என்று கூறிக் கொண்டே
இயற்கை வளத்தை
கொள்ளை அடிக்க
வேல் முருகனுக்கே
வெடி வைப்பவன்,
மாவோயிஸ்டா?
குவாரியிஸ்டா?

முல்லைவன
காடுகளை அழித்து
பாக்சைட்டை
தேட்டை போடுபவன்
நக்சலைட்டா?
கார்ப்பரேட்டா?

மண்ணையும் மக்களையும் நேசித்து
உயிரையும் தரும்
நாட்டுப்பற்றுள்ள நல்லவர்கள் நக்சல்பாரிகள்!

முருகனுக்கே மொட்டை அடித்து
பெருமாளுக்கே நாமம் போட்டு
முதலாளிகளுக்கு காவடி தூக்கி
மொத்த நாட்டையும்
கார்ப்பரேட்டுகளுக்கு
பஞ்சாமிர்தம் ஆக்கும்
பயங்கரவாதிகள்

ஆர்.எஸ்.எஸ்- பாஜக
நச்சு வைரிகளே!

- துரை. சண்முகம்
எல்லா உணர்ச்சிகளும்:
7

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

*பலவித பெயர்களில் இயங்கும் rss -பாஜக கம்பெனி

பலவித பெயர்களில் rss - பாஜக கம்பெனி  காந்தியை படுகொலை செய்தபோது அவர்கள் பெயர் இந்துமகாசபா..!  குஜராத்தில் 3000 முஸ்லிம்களை கொன்று குவித்தபோ...