ஒரு துக்க நிகழ்வின் போது இரு தோழர்கள் சந்தித்துக் கொண்டபோது அவர்களுக்குள் நடந்த உரையாடல்கள் என் வடிவில்... அப்படியே....!!!
“தாத்தா....தாத்தா.. தாத்தா... என்று சிறுவன் அழைப்பதைக் கண்டு ..”
“ என்னடா ” என்றேன்.
“ என் பதிலை் அந்த சிறுவனுக்கு கேட்கவில்லை..”
எனக்கு காது கேட்கவில்லை என்று நினைத்து திரும்பவும் தாத்தா.. தாத்தா..தாத்தா -- சற்று சத்தாமாக அழைத்தான்”
“ பதிலுக்கு நானும் சற்று சத்தமாக “டேய் என்னடா ” என்று கேட்டேன்.
“உங்கள தேடி ஒருத்தரு வந்திருக்காரு” என்று சொன்னான்.
“ யாருடா..” படித்திருந்தபடியே கேட்டேன்.
“தெரியவில்லை ” என்றான்..
எழுந்து வெளியே வந்த போது அறிமுகம் இல்லாத ஒருவர் என்னைக் கண்டு “வணக்கம் தோழர்” என்றார்.
பதிலுக்கு நானும் “வணக்கம், நீங்க யாருன்னு தெரியலையே” என்றேன்.
“ கன்னன் அனுப்பி வச்சார்” என்றார்.
“ எந்தக் கன்னன் ” என்றபோது உளவு பிரிவு கன்னனை சொன்னார்.”
“ ஓ..அவரா, அவருக்கு பதிலா..அல்லது நீங்க வேறா..” என்றபோது அவருக்கு பதில் என்றார். அவரைப்பற்றி கேட்டபோது வேறு பணிக்கு சென்று விட்டார் என்பதை தெரிவித்தார்.
“ பையன் யாரு என்று கேட்டார்” பக்கத்து வீட்டு பையன் என்றதும். அவன் தோளில் தட்டிக் கொடுத்தார். அதையே அவன் வெகுமதியாக ஏற்றுக் கொண்டு சென்று விட்டான்.
வந்திருந்தவர் , அவரது செல்போனில் எனது படத்தை காண்பித்தார். சாட்சாத் நான்தான் கொரானாவுக்கு முன் எடுத்த படம் என்றேன். வேறு சிலர் படங்களை காட்டினார். அவர்கள் யாரென்று தெரியவில்லை. தெரிவித்தேன்.
” ஓகே தோழர்..., தற்போது எந்த அமைப்பில் இருக்கீங்க” என்றார்.
“ நானும் விளையாட்டாக எந்த அமைப்பில இருக்கனும்” என்றபோது அது உங்க விருப்பம் என்றார்.
“ உண்மையை சொல்லட்டுமா ?..எந்த அமைப்பிலும் இல்லை. இதை கண்ணனிடம் பலமுறை சொல்லிவிட்டேன். நீங்கள் என்னிடம் காட்டிய புகைப்படம் கொரோனாவுக்கு முன் நான் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளின் போது எடுத்த படம்.. கொரோனாவுக்கு பின் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் ஒரு படத்தையாவுது காட்டுங்கள் என்று பலமுறை கேட்டுவிட்டேன். நீங்கள் நினைக்கிறபடி பெரிய ஆள் எதுவும் இல்லை. சாதாரன ஆதரவாளன்தான்.
“ தாங்கள் சொல்லியபடி அமைப்புக்கும் கொரோனா நோய் தாக்கி உடைந்து கொரோனாவுக்கு பின்பு நான்காக சிதறிவிட்டது.. கொரோனாவுக்கு முன் நடந்த நிகழ்ச்சிகளை படம் பிடித்த நீங்கள்.. கொரோனாவக்கு பின் நடந்த நிகழ்ச்சிகளை படம் பிடித்திருப்பீர்கள் அல்லவா? அந்தப் படங்களில் எந்தெந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இருந்திருக்கேன் என்று பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். நான் எதிலும் இல்லை.. நான் எதிலும் இல்லாதபோது அவைகளை பற்றி என்னிடம் கேட்காதீர்கள். என்னிடம் நீங்கள் கேட்பீர்கள் என்பதற்காகவே அவைகளைப் பற்றி நான் தெரிந்து கொள்வதில்லை.
“ பேச்சின் இடையே தேநீர் அருந்தலாமா தோழர் ” கேட்டார்
“ மன்னிக்கவும். எனக்கு தேநீர் அருந்தும் பழக்கமில்லை” எனறபோது ஆச்சரியத்துடன் கேட்டார் .
“ உண்மையாகவா தோழர்”
'' இந்தா பாத்திங்களா..! உண்மையைச் சொன்னா நம்ப மாட்டுறிங்களே?”
“ என்கிட்ட நல்ல பழக்கம்தான் இருக்கு” , கெட்ட பழக்கம் எதுவுமில்லை” எதைச் சொன்னாலும் நம்ப மாட்டுறிங்களே!..” சரி விசயத்துக்கு வருகிறேன்.
“ மேல் அதிகாரி சொல்றாரு, கீழ் அதிகாரி சொல்றாரு” ன்னு என்னை பார்க்க வராதிங்க... அது உங்களுக்கு தேவையில்லாத வேலை..” பேஸ்புக்குல போங்க,, அதில ஆயிரக்கன்கான கட்சிகளும் இலட்சனக்கான அமைப்புகளும் நாங்க என்னனென்ன செய்திருக்கோம் என்னனென்ன செய்யப்போறோமுன்னு புள்ளி விபரமா பதிவிட்டு இருப்பார்கள். உங்களுக்கு தேவையான தொடர்பு எண்களும் தெரிவித்து இருப்பார்கள். உங்க அலுவலகத்திலே இருந்தே தெரிந்து கொள்ளலாம்.
“ இல்ல தோழர் மூத்த தோழர்ன்னு...”
“ என்னைவிட ஆறு ஏழு எட்டு அடி உயழுள்ள மூத்த தோழர்கள் இருப்பாங்கல, அவுகள போய் பாக்கலாமுல....என்னை எப்ப வந்து பாத்தாலும் இததான் பதில்.
எனக்கு காதும் கேட்கல... கண்ணும் தெரியல....நா போயி என்னத்த கேட்கிறது. எதை பார்க்கிறது.... சொல்லுங்க...எதச் சொன்னாலும் நம்ப மாட்டுறிங்க சிரிக்கிறிங்க............
