அண்டசோறுக்கு ஒருசோறு பதம். குக்கர் சோறுக்கு விசில்சத்தம் பதம்.
அது மாதிரி சாதித் தீண்டாமைக்கு சின்னபதம். கீழ்சாதியைச் சேர்ந்த ஒரு பணக்காரன் வீடு கட்டுறான். இவன் வீட்டு கட்டிட வேலைக்கு மேல்சாதியை சேர்ந்த இருவர் வேலைசெய்கின்றனர். இருவரில்ஒருவன் கிருக்கன் (எப்படி வேலசெய்யுறான்னுதெரியல).
வேலை நடந்து கொண்டு இருக்கும்பொழுது ஒருவனுக்கு தண்ணீர் தாகம் கீழ்சாதிக்காரன் வீட்டில் குடியிருக்கும் மேல்சாதிக்காரி வீட்டில் தண்ணீர் கேட்டு வாங்கிகுடித்தான்.அந்த மேல்சாதிக்காரியோ இதுவரை ஆறு,ஏழு பேருக்கு வைப்பாட்டியாக இருந்து ஏழுபிள்ளையும் பெற்று உறவினர்களால் ஒதுக்கப்பட்டு வீடு கிடைக்காமல் மாநகரில் அரிசனசேரின்னு ஒதுக்கப்பட்ட தெருவில் வாடகைக்கு குடியிருந்து வருகிறாள்
ஒருவன் தண்ணி குடித்ததும் கிறுக்கனுக்கும் தண்ணி தாகம் எடுத்தது. “டேய், ,நீ எங்க தண்ணீ குடித்த-என்று அவனிடம் கேட்டான்.அதைக்கேட்ட வீடு கட்டுபவனின் மனைவி ,பிரிஸ்ஸிருந்து தண்ணி பாக்கெட் எடுத்துதரவா?ன்னுகேட்க,அந்தலூசுப்பய, “வேண்டாம்னு சொல்லிபுட்டு”அந்த மேல் சாதிக்காரி கொடுத்த மண்டித்தண்ணிய மண்டினான். ஆடு, மாடு கூடத்தான் மண்டி தண்ணிய மண்டுது.அது சாதியா பாக்குது.
ஒரு லூசுப்பயகூட சாதித்தீண்டாமை பாக்குறான்னா!? செத்தபிறகு அவன் கட்டைவெந்தாலும், சாதீத்தீண்டாமை மட்டும் வேகுமா??
“உள்ளென்று வைத்து,புறமொன்று பேசாதீங்க.
“கெட்டாலும் மேன்மக்கள் மேன் மக்களா?
கெடாமல் இருந்தாலும் கீழ்மக்கள் கீழ் மக்களா?
---பதில் சொல்லுங்கள்- படித்தவர்களே!
நீங்கள் வழிப்போக்கனா இல்ல வலிப்போக்கனா? என்னமோ போங்க ரெண்டுமே நல்லா இருக்கு.
பதிலளிநீக்குஇதுல நம்ம யோசிக்க வேண்டியது என்னன்னா, கூலிக்கு மாரடிக்கும் அவனை வைத்தா ஒரு விசயத்த எடை போட முடியும்.
படித்தவர்களும் பதவியிலிருப்பவர்களுமே அப்படித்தானே?
வழிபோக்கன் இல்லீங்க. வலியை போக்குகின்ற “வலிபோக்கன” னுங்க.படித்தவங்க,பதவியிருப்பவங்க
பதிலளிநீக்குரெம்ப அறிவாளிங்க,தகுந்த காரண-காரியங்கள சொல்லி
தப்புச்சுருவாங்க.கூலிக்கு மாரடிப்பவனாக இருந்காலும்
சக உழைப்பாளி மக்கள்தானே. கூட இருக்கிறவங்கள
வச்சுதானே முதலஎடை போடனும்.
தங்கள் வருகைக்கு நன்றி மீண்டும் வருக.நன்றி
பதிலளிநீக்கு