பக்கங்கள்

Sunday, April 03, 2011

அடபோங்கப்பா!!


அரசியல்,சமுகம்,அனுபவம் அதைப்ற்றியும் இதைப்பற்றியும் நிறைய யோசன
பண்ணி எழுதி வச்சுருந்தேனா, அதை வெளியீடுவதற்க்காக தமிழ்மணம் சசி சார்,சொன்ன மாதிரி என் அறிவுக்கு எட்டிய அளவில் முட்டி மோதி ஒரு
வலைத்தளம் தொடங்கினேன்.
     எல்லாம் “டமால்ஆகி போச்சு, என்னான்னா நா எழுதி வச்சிருந்த பேப்
பரெல்லாம் காணல,போனால் போகட்டும் போடா ன்னு  எழுதின மறுபடியும்
யோசிச்சா ,டமால்,டுமீல்ன்னு ஒரு சத்தம்கூட திரும்பி வரமாட்டேன்குது..
உள்ளதும் போச்சுதடா.
     வலைதளம் தொடங்குவதற்கு முன்னாடி புதுசு புதுசா சிந்தனை வந்திச்சு
அப்போ எழுதி வைக்கிறதுக்கு பேனா கிடைத்தா பேப்பர் கிடைக்காது.பேப்பர்
இருந்தா பேனா இருக்காது..இப்போ பேனாவும் பேப்பரும் இருக்கிறப்போ,
ஒன்னுமே வரமாட்டேன்கிது.
     “வினவுதோழர்களின் ஒரு பதிவை நெஞ்சிலே ஏற்றி,அது மாதிரி  போராடி சிந்தித்து குறிப்பெடுத்து டைப் அடிக்க உட்கார்ந்தா கரண்ட் ஓடிபோயிருச்சுஅது வர்ரதற்கு மூன்றுமணி நேரமத்துக்கு மேல் ஆகும். அதுவரைஎன்னசெய்வதுன்னு,சரி பொழப்ப பாக்கலாம்ன்னு, பொழப்ப பாத்தா  ஓட்போன கரண்ட்வந்துடும் பொழப்ப பாதியில விட்டுட்டு வரமுடியாது. மறுநாள்பாக்குமாதிரிபொழப்அரைகுரையாகமுடித்துவைத்துட்டுசாப்பிட்டுட்டுவந்தால்,துர்க்கமும்சோர்வும்வந்திடும்.துர்க்கத்தையும்சோர்வையும் ஒதுக்கிட்டு போனா.....
    
அடபோங்கப்பா?
ஊரு, நாட்டுல எருமை மாடு மேய்க்க முடியலைன்னு, இங்க வந்தா...................
 “என் எருமை மாட்டையே காணோம்
 உளரல்கவி, தனிஒருவனுக்கு(எனக்கு)எருமை மாடு மேய்க்க வழியில்லையெனில் இணைய(என்) இணைப்பையே நிறுத்திடுவே(ன்)ம்

2 comments :

  1. "பாரதியார் கவிதைகள்" அடுத்த பதிப்பு வெளியிடற வேலையில் மும்முரமாக இருக்கிறீர்கள் போலிருக்கு! இப்படித் தானுங்க, நாம் செய்கிற வேலையில் நம்மை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டால், எங்கு போனாலும் அதே நினைவு தான் வரும், நிழலாடும்! சாகா வரம் பெற்ற மகாகவி அல்லவா அவன்! கேட்க வேண்டுமா?

    ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com