பக்கங்கள்

Monday, April 11, 2011

வாக்கு ஆள குடி மக்களே!டாஸ்மாக் தோன்றா காலத்திலிருந்து குடித்துவரும் மூத்தகுடிமகனின்
தேர்தல்-போதை பிரச்சாரம. வாக்கு ஆள குடீ மக்களே! வணக்கம், என் பெயர் ஆண்டி குடித்தே ஆண்டியானவன் இல்லிஙக. என் அப்பா.ஆத்தா வச்சபேரே....ஆண்டிதாங்ககுடிகாரன் உளருரான்னு நினெக்காதீங்க. என்ன மாதிரி ஆண்டியான குடும்பத்திக்கு வருவாய்தான் பெரும்பிரச்சனை. நான் நேர்மையான குடீ மகனுங்க அரசு அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் விலைவாசி ஏறுனா?அவுங்களுக்கு பிரச்சனையில்லங்க,விலைவாசிக்கு தக்கமாதிரி சம்பளமும் கிம்பளமும் ஏறுமுங்க. முன்பெல்லாம் தெரியாம குடிச்சா போலீசுகாரங்க புடுச்சு உள்ளே போடுவாங்க. இப்போ காசுஇல்லாம குடிக்காம போனாலும் ஏன்? குடிக்காம போறேன்னு புடுச்சு உள்ளேபோடுறாங்க. கடைய திறந்து வச்சுபுட்டு குடிகுடிய கெடுக்கும். குடி உடல்நலத்தை கெடுக்கும்முன்னு போர்டு வச்சா போதுமா? குடிக்காமயாரு இருக்கா? உலகத்தலே நம்மதான அதிகமாஇருக்கோம். ஏ....மகன்கூடகுடிக்கிறான்.ஏங்......பொண்டாட்டிகூட மேல்வலிக்குன்னு குடீக்கிறா! குடீக்கிறதுலகூட ஆண்கள்தான் மொஸாரிட்டிமற்ற வருவாயவிட நம்மகுடீக்கிறதலாதான் அரசாங்கமே நடக்குது.
      ஆனா, நம்ம குடீமக்கள, எந்த அரசும்சரி,எந்த கட்சியும்சரி கண்டு
கிறவே மாட்டுறாங்க. கருணாநிதி அய்யா.....நா....ன. எம்புட்டு கொடுத்தேன்
இன்னும் மிக்ஸி, கிரைண்டர் தருவேன்னு சொல்லுறாரு. செல்வி ஜெயா
அம்மையாரும் அய்யாவவிட நெறைய தருவதாக சொல்றாங்க.இடது வலதுசெகப்பு காரங்களும்.குல்லா போட்ட வயசு பையன காட்டி விற்பனைக்குஅல்ல ன்னு சொல்லுறானுங்க.கருப்பு அண்ணனோ பாரின் சரக்கா அடிக்கிறாரு    மத்திய  அமைச்சரு ஒருவரோ. உங்களுக்கு
என்னத்த கொடுக்கல.பிள்ளதான் பொடுக்கல.இனி பிள்ளையும் கொடுக்கிறோம் என்று சொல்லுறாரு. வாக்காள குடீ மக்களே! இவுங்க கொடுக்கிறதெல்லாம்வச்சு குடீக்கமுடியுமா? குடீ மக்களே! சிந்தியுங்கள்.நேர்மையை கடை பிடியுங்கள்.  டாஸ்மாக்கில் ஆப்பு,புல்லுஎல்லாம் விலை எகிறிபோச்சு, கலப்படமும்
போலிசரக்கும்பெருகிபோச்சு.அதனாலநிம்மதியாகுடீமக்களலகுடிக்கமுடியுதா. அதக்கேட்க நாதியில்ல. நம்மல குடிக்க பழக்கிவிட்டுபுட்டு, ஓட்டுக“கு கிடைக்கிற காசையும் தடுத்துபுட்டு   சிந்தித்து, நேர்மையாக ஓட்டு
போடுங்கனு சொன்னா ஓட்டு போட்டுவோம்மா. குடிக்க கஞ்சியில்லை
யினாலும். குடீக்காம நாம இருந்திருக்போமா?  ஆகவே, வாக்கு ஆள பெருங்குடீ மக்களே. நாம ஓசியில சரக்க கேட்கல டர்ஸ்மாக் விலை யை குறைத்து குடீமக்களின் நெஞ்சிலும் வயித்திலும் போதையை ஏத்துற வரைக்கும்.நாம் இந்த போதையில்லா தேர்தலை பாய்காடபன்னுவொம்.
சிந்தித்தால் சிரிப்பு வலும்
மனம் நொந்தால் அழுக வலும்
இது நமக்கு தேவையா?------வணக்கம்

குறிப்பு;   டாஸ்மாக்கின் அருமைபெருமைகளை அறிய
வினவு.வெளியிட்ட.“பனமரத்துல வவ்வாலு, டாஸ்மாக்
இல்லேன்னா திவாலு”-பதிவை மகாஜனங்கள் படித்து
தெரிந்து கொள்லவும்.

5 comments :

 1. நன்பா...லைன் அலைன்மென்ட் கொஞ்சம் பாத்துகோங்க...
  remove word verification..

  ReplyDelete
 2. வணக்கம்,
  உங்களுக்கு இணைப்பு கொடுத்துள்ளேன் பாருங்கள்.

  ReplyDelete
 3. நணபர் வேடந்தாங்கல் அவர்களுக்கு தங்கள் ஆலோசனைக்கு நன்றி்.லைன்
  அலைன்மென்ட் பற்றி தெரியவில்லை அடுத்த இடுகையில் சரி செய்து கொள்கிறேன்்

  ReplyDelete
 4. தோழர் சூப்பர்லிங்க் அவர்களுக்கு செவ்வணக்கம்.இணைப்பை தெடர்ந்து பார்க்கிறேன்

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com