பக்கங்கள்

Tuesday, April 19, 2011

உயர...... உயர......பறந்தாலும்.......

இரண்டு நாட்களுக்கு முன்னால் ஒரு பதிவில் படித்தேன்.
யார் அஞ்சா நெஞசன் என்று..தலைப்பை பார்த்த்தும்
கருனாநிதியின் மகனுக்குதான அஞ்சா நெஞ்சன்னு பட்டம்
கொடுத்திருக்காங்க. கலைமாமனி விருதுமாதிரி கொடுக்க
ஆரம்பிச்சுடாங்களான்னு பார்த்தால்.அழகிரியையே
ஆட்டம்காண வைத்தவர்.மதுரை மாவட்ட ஆட்சியரும்
தேர்தல்அதிகாரியுமான சகாயம்தானாம் கூடவே
ஒரு தகவலும் இருந்தது.உமாசங்கரும்,சகாயமும்
கிறிஸ்தவ தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்களாம்
இதை படித்தவுடன்.புதிய ஜனநாயகதொழிலாளர்
முன்ன்னியின் நாட்குறிப்பில் அம்பேத்கர் தன் இறுதிநாளில்
வெளியிட்ட குறிப்புதான் நினைவுக்கு வந்தது.

சமத்துத்தின்அடிப்படையில் அரசியல் அதிகாரங்களைப்
பகிர்ந்து கொண்டு ஆளும்வர்க்கமாக என்மக்களை
காண ஆசைப்பட்டேன்.இன்றோ உடல்நலக்குறைவால்
முடங்கிக்கிடக்கிறேன்.இதுவரை என்னால் ஆன பலன்களை
எல்லாம் படித்த பிரிவினர் மட்டுமே பெற்றனர்.
அதை அவர்கள் தங்கள் சுயநலத்திற்கும் சொந்த
இலாபத்திற்கும் மட்டுமே பயன்படுத்திக்கொண்டனர்.
இதன்மூலம் என் எதிர்பார்ப்பை ஏமாற்றிவிட்டார்கள்.
படிப்பறிவின்றி பாமரனாக வாழும் மக்களுக்கு என்னால்
ஒன்றும் செய்ய இயலாத நிலையில்
முடங்கி கிடக்கிறேன்.என்றார்.

ஆதிக்க சாதிவெறிகொடுமையும்,சாதித்தீண்டாமையையும்
தாங்க முடியாமல்தான் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார்கள்.
அப்படி மாறியும் கிறிஸ்தவர் என்று கூறாமல். கிறிஸ்தவதலித்
என்ற அடைமொழியிட்டுதான் குறிக்கப்பகிறார்கள். இந்துதலித்,
முஸ்ஸீம்தலித், கிறிஸ்தவதலித் எம்மதமும் சம்மதம்
என்றாலும் இந்தீயா வல்லரசனாலும் தலித் என்றஅடைமொழி
மட்டும் மாறவே மாட்டுகிறது.

பெருமைக்கு குறிப்பிட்டாலும், சிறுமைக்கு குறிப்பிட்டாலும்
தலித் அடைமொழி எதற்கு? ஏழை-பண்க்காரன் என்று நடப்பு
மொழியிருக்கையிலே.இருந்தாலும் குப்பையிலே கிடைக்கும்
மாணிக்கம் ஏழைக்கா பயன்படும்.ஏழைக்குத்தான் பயன்பட்டது
என்ற வரலாறுதான் உண்டா???

12 comments :

 1. சபாஷ்....சரியான பதிவு...தலித் அப்டின்னு சொல்லி காமிக்கிரதுனாலே "அவங்களும் உயராங்கன்ன்னு" நாங்க சொல்றோம்னு சப்பை கட்டும் வாய் சொல் வீரர்கள் தான் பாஸ் நம்மை சுற்றி...செவ்வாய் கிரகம் போனாலும் அங்கேயும் சாதி குறிப்பிடாமல் நாம் இருக்க போவதில்லை...இது தமிழன் ஸ்டைல்..:))

  ReplyDelete
 2. தங்கள் கருத்துரைக்கு நன்றி.

  ReplyDelete
 3. வழி போக்கன் தெரியும்...அதென்ன வலி போக்கன்??...purpose ஆவே வச்சிங்களா? வலியை போக்குபவன்????

  ReplyDelete
 4. என்றுதான் இந்த சாதி ஒழிய போதோ

  ReplyDelete
 5. இந்த சொல் சரிபார்ப்பு வேண்டாம் . பின்னூட்டம் இட நினைப்பவர்களுக்கு அது இடையூறு,

  உங்கள் வலைப்பூவும் அழகாக உள்ளது நண்பரே. தொடர்ந்து நல்ல பதிவுகளை எழுதவும்

  ReplyDelete
 6. ஆனந்தி அவர்களுக்கு, ஏற்கனவே வழிபோக்கன் பெயரில் ஒருத்தர் இருக்கார்
  அவருக்கு உபத்திரம் கொடுக்ககூடாது என்றும்.மற்றவர்களின்(மனத்துயரம்)வலியை போக்குவதாலும் சுயமாக நானே
  வலிபோக்கன் சூட்டிகிட்டேனுங்க.

  ReplyDelete
 7. எல் கே அவர்களுக்கு அரைகுறை படிப்பவச்சும் தொடர்ந்த முன்முயற்சியாலும் எவர் உதவியின்றி
  வலைப்பக்கம் தொடங்கி நான்கைந்து இடுகையும் இட்டு நானும்ஒரு பதிவராக
  வந்துட்டேன். சொல்சரிபார்ப்பு என்னவென்று தெரியவில்லைஆங்கிலம்
  சுத்தம். தமிழும் அதாவது கணனி தமிழ்
  சுத்தம். விக்கிரமாதித்தனைப்போல் மீண்டும் முயற்சிக்கிறேன்

  ReplyDelete
 8. தங்களின் தாங்களின கருத்துரைக்கு மீண்டும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்

  ReplyDelete
 9. செமையா சாட்டையடி கொடுத்துட்டீங்க....

  ReplyDelete
 10. //மற்றவர்களின்(மனத்துயரம்)வலியை போக்குவதாலும் சுயமாக நானே
  வலிபோக்கன் சூட்டிகிட்டேனுங்க.//

  அருமை அருமை மக்கா...

  ReplyDelete
 11. இன்ட்லி, தமிழ்மணம் இணைப்பு குடுங்க....

  ReplyDelete
 12. திரு.மனோ அவர்களுக்கு இண்டலி,தமிழ்மணத்திற்கு எப்படி இணைப்பு கொடுப்பது தெரியவில்லை.பல
  தடவை முயன்றும் தோல்வியே,மீண்டும்
  முயற்சிக்கிறேன். தங்களின் கருத்துரைக்கு
  நன்றி!!

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com