ஞாயிறு 05 2011

அதனா ல..........

அன்று சொன்னார்
என் வாத்தியார்
டேய்,உனக்கு
படிப்பு வராது
அதனா ல
மாடு மேய்க்க போ!

என் தாய் சொன்னார்
மாடு எப்ப வேணாலும்
மேய்க்கலாம்
அதனா ல
படிக்கப் போ!

என் சிநேகிதன் சொன்னான்
படிப்பு உனக்கு
எட்டாக் கனி
அதனா ல
வேலைக்கு போ!

இன்று களவானி கல்வி
வள்ளல்கள் சொல்கிறார்கள.
இன்றைய செலவு
நாளைய வரவு
அதனா ல
ரொக்கத்தை
செலுத்திவிட்டு போ!

அம்மா ஆட்சியிலே
செல்வியம்மா சொல்லுது
உன் வம்சத்துக்கு
கல்வியும் கிடையாது
வேலையும் கிடையாது
அதனா ல
ரேஷன் அரிசியை இலவசமா
வாங்கிட்டு போ!!!!


3 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

எது அகிம்சை.!....எது தீவிரவாதம்.!!

  சுரண்டுபவன் ஆயுதம் ஏந்தினால் அது அகிம்சை.. சுரண்டுபவனால் பாதிக்கப்பட்டவர் நகம் வளர்த்தாலும் அவை தீவிரவாதம் ---நன்றி! கீழடி பதிப்பகம்