செவ்வாய் 09 2011

அவரா? இவரா? யாரப்பா கவிஞர்!!!

பெண்களின் இடையையும்
அவளின் மார்பங்களையும்
வர்ணிப்பவரா? கவிஞர்!

இள மங்கையின் கண்களையும்
அவளின் கருங்கூந்தலையும்
வேற்று பொருளோடு
புனைபவரா? கவிஞர்!

காதலுக்காக ஏங்கி
அவளுக்காக அலைந்து
தோற்று போய்-அதை
நினைத்து தோல்விப்பா
வடிப்பவரா?கவிஞர்!

நாயிடமும் பன்றிய்டமும்
பற்றுக்கொண்டு -கூலி
பெற்று புகழ்பா
பாடுபவரா?கவிஞர்!

உலக மகா கவி போல்
மனம் பிறழ்ந்து-அபின
போதை  ஏற்று காளி
மாகாளி என்று
பிதற்றுபவரா?கவிஞர்!

வாழ்வின் துன்பங்களால்
துவண்டு மனம் வெதும்பி
புலம்பி தவிப்பவரா?கவிஞர்!

முற்றும் துறந்தவராக
வேஷம் காட்டி
அய்யா அம்மா பஜனை
பாடுபவரா?கவஞர்!

மய்கையரின் அஙகங்களை
அங்கும் அங்குலமாக
அம்மணமாக எழுதி
பிழைப்பவரா?கவிஞர்!

புளுத்துப்போன குப்பைகளையும்
நாறிப்போன நாதாரிகளையும்
பழமையென்றும் புதுமையென்றும்
ஏற்றி போற்றுவரா?கவிஞர்!

முலை வற்றி இடை சிறுத்து
கண் தள்ளிப்போன
சோமாலியாவினைப் போன்ற
இளம் பென்னை பாட
மறுப்பவரா?கவிஞர்!





2 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

தீபாவளி இயற்கைக்கு கேடு.... மனித சமூகத்திற்கு இழிவு...

  தீக்காயம்:   வெடிவெடிக்கையில், விடிய விடிய பலகாரம் செய்வதால் தீக் காயங்கள் ஏற்பட்டு பலர் இறக்கின்றனர். பலர் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர...