பக்கங்கள்

Wednesday, January 18, 2012

சிறையை சம்ரோட்சனம் செய்த இந்தியாவின் மாபெரும் (துரோகத்) தலைவர்...

இணையத்தில் எழுதுகிறவர்களில் படிப்பவர்களில்எத்தனைபேர் குடியரசு இந்தியாவின் சிறைக்குள்சென்று வந்திருப்பார்கள் என்று எனக்குத் தெரியாது.

சொந்தப்பிரச்சினை,பொது பிரச்சினை.அரசியல்பிரச்சினை போன்ற அரசின்அடக்குமுறைகளில்ஒரு முறையாவது சிறைக்கு சென்று வந்திருந்தால்

சினிமாவில்அதுவும் தமிழ் சினிமாவில் காட்டப்படும் சிறைக்கும் உண்மையான சிறைக்கும், மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசங்களை தெரிந்து கொள்ளலாம்

சட்டம் எப்படி அனைவருக்கும் சமமாக இல்லையோ!அதேபோல் சிறைச்சாலையும் சமமாக இருப்பதில்லைஎன்ற உண்மையை தெரிந்து கொள்ளலாம்.

சிறை ஒருசிலருக்கு மாமியார் வீடாக இருக்கலாம்.அதுஎல்லோருக்கும் மாமியார் வீடாக இருந்ததில்லை.இருக்கப்போவதுமில்லை.

இப்படிபட்ட குடியரசு இந்தியாவிற்கு சுதந்திரம் என்ற ஒன்றைபெருவதற்கு முன்னால்.அந்த சுதந்திரத்தை வாங்கித்தந்தாகசொல்லப்படுகிற அந்த மாபெரும் (துரோகத்)தலைவர் ஒருவர்

ஆங்கில அரசால் கைது செய்யப்பட்டு எரவாடா சிறையில் இருந்தபோது அவருக்கு எல்லா வசதியும் இருந்தன சிறையில்இருக்கும் உணர்வே அவருக்கு இல்லை. மாமியார் வீடுன்னுகூடவச்சுகிருக்கலாம். அவர் சாதாரன குடிமகனில்லை. தலைவருக்கெல்லாம் அவர்தான் முதன்மையான( துரோகத) தலைவராகஇந்தவர்.(துரோகத் தலைவருக்கான ஆதாரம் .பு.மா.இ.முவின்காந்தியும் காங்கிரசும்-வெளியீடு)

எரவடா சிறையில் எல்லா வசதியுடன் அந்தத் தலைவர் இருந்தபோதும் மேலும் வசதி குறைகளை தெரிந்து கொள்வதற்க்காக அந்தச்சிறையின் முக்கிய அதிகாரி ஒருவர்அவரை பார்க்க வந்தார்.

அந்தத்தலைவரிடம் வசதி சௌரியங்களை தெரிந்துகொண்டுசென்றுவிட்டார். அந்த அதிகாரி சென்ற சிறிது நேரத்தில் அந்தஅதிகாரி வந்து சென்ற இடத்தை சம்பு ரோட்சனம் செய்தார்அதாவது அந்த அதிகாரி வந்து சென்ற இடம் தீட்டு பட்டுவிட்டதால் அந்த இடத்தை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தார்.

இப்படித்தான்.இருபதாம் நுாற்றாண்டின் தொடக்கத்தில் சிறீரங்கத்து ரங்கநாதனின் கருவரைக்குள் சென்று சும்மாபடுத்தே காலத்தை கழித்த ரங்கநாதனை தொட்டு எழுப்பினார்கள் மகஇக,விவிமு தோழர்கள்.

தோழர்கள் எழுப்பிய போது முழிச்சு பார்க்காத ரங்கநாதன்ரெண்டு குடுமி போயி நின்றவுடன் முழிச்சு பார்த்தாரோஇல்லை குரட்டை விட்டாரோ தெரியவில்லை. தோழர்கள்ரங்கநாதனின் கருவரைக்குள் சென்று தொட்டதால் தீட்டுபட்டுவிட்டதாக சம்புரோட்சனம் செய்து திட்டு கழித்தார்கள்

திட்டுகழித்த இந்த வாரிசுகளின் முன்னோடியான அந்தத்தலைவர்தான் சிறையை சம்புரோட்சனம் செய்து திட்டுக்கழித்தார்

தான் சம்புரோட்சன்ம் செய்ததை மறைப்பதற்க்காக மற்றவர்களிடம்... வந்த அதிகாரி புாட்ஸ்காலுடன் வந்ததால் தரை முழுவதும் மண்ணாகி விட்டதென்று சப்பைகட்டுகட்டினார்.அந்தத் துரோகத்தலைவர்.
5 comments :

 1. Ada paavigalaa! Andha kizhavan ippadi kuudava seithaan?

  ReplyDelete
 2. சரியாக சொநீர்கள்..

  ReplyDelete
 3. அம்பேத்கர் அவர்கள் தனித்தொகுதி மற்றும் இடஒதுக்கீட்டு கேட்டு போராடிய போது காந்தி அதை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தார் காந்தியின் உடல்நிலை கவலைகிடமாகவே எங்கே கலவரம் ஏற்பட்டு தாழ்த்தப்பட்ட மக்கள் பாதிக்கப் படுவர்களோ என்று பயந்து அம்பேத்கர் அவர்கள் போராட்டத்தை கைவிட்டது இங்கு நினைவுக்கு வருகிறது.

  சிறையில் இருந்துக் கொண்டே அம்பேத்கரை கைது பண்ணிய காந்தியின் அறிவு யாருக்கு வரும்

  ReplyDelete
 4. அந்தக்கிழவன் இது மட்டுமா செய்தான். எழுதினால் இந்த இண்டர் நெட்டெ தாங்காது.

  ReplyDelete
 5. வருகைக்கும்,கருத்துரைக்கும் நன்றிகள்

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com