வெள்ளி 23 2012

அந்தத் துரோகம் இன்னும் மறையவில்லை......!






தோழர்களே! வீரத்தியாகிகளே!

உங்கள் மூவரையும்.................
துாக்கிலட வைத்து
நாட்டையும் காட்டிக்
கொடுத்த துரோகிகளுக்கும்
அவர்களின் வழியில்
சுதந்திரமாக நாட்டை
மீண்டும் அடிமையாக்கும்
கைக்கூலி கயவர்களுக்கும்
போராடும் மக்கள் மீது
அடக்குமுறை ஏவும்
கொடுங்கோலர்களுக்கும்
அவர்களின் ஏவல் நாய்களுக்கும்
அவர்களின் வாரிசுகளுக்கும்

தங்களின் வீரத்தியாகங்களை
அதிகாரமில்லா ஓட்டுக்காக
பயன்படுத்தும் போலிகளுக்கும்

தங்களின் வீரத்தியாக நாளை
நிணைவு கூற கிஞ்சித்தும்
உரிமையுமில்லை!
அருகதையுமில்லை!

தங்களின் போராட்டத்தையும்
புரட்சிகர அரசியலையும்
மறுதலித்து புறந்தள்ளி
பத்தோடு பதிணொன்றாக
 இந்திய தேசிய துரோகத்
சின்னகங்களுடன் செய்தி
ஊடகங்களில் வெளியிட்டு
 நல்லவர்களைப்போல் காட்டிக்
கொள்கிறார்கள் கொள்ளையர்கள்

துரோகம் இழைத்த கொடுமைகளை
மறவாமல்....வெஞ்சினத்துடன்
உங்கள்வழியில் வீரத் தியாகத்துடன்
உழைக்கும் மக்களின் அரசமைக்க
போராடும் தோழர்களுக்கும்
போராடும் மக்களுக்கும் அவர்களின்
வாரிசுகளுக்குமே உரிமையும்
கடமையும் உண்டு...!!!

 அந்த உரிமையுள்ள உணர்வுடன்
தோள்மீது சுமத்தப்பட்ட கடமையுடன்
தங்களின்வீரத்தியாக போராட்ட
லடசியங்களுடன் உங்கள் வழியில்
போராடுவேன். போராடுவோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...