பக்கங்கள்

Friday, April 27, 2012

நான் நிணைத்தேன்.நீ தும்மிவிட்டாய்.........


பகல் வெயிலின் கொடுமையைப் போக்க நண்பர் மூவர்
மாலை வேளையில் பை-பாஸ் ரோட்டிலுள்ள பாலத்தின்
திண்டின் மேல் அமர்ந்து. தங்கள் ரசித்த.மனதை பாதித்த
உலக விஷயங்களை அசைபோட்டும் அரட்டை அடித்து
சிரித்தும் தங்களை மறந்து பேசிக் கொண்டு இருந்தனர்

அந்த மாலை வேளையில் நாயைப்பிடித்துக்.கொண்டு
வாக்கிங் போவோர்மற்றும்பஸ்களிலும்.டூவீலர்,போர்
வீலர்களில் செல்வோர் பற்றி கண்டுக்கொள்ளாமல்
மூன்று நண்பர்களும் பேசி மகிழ்திருந்த வேளையில்

மாலை மயங்கி இருள் பரவத் தொடங்கியது.ரோட்டிலுள்ள
மின்கம்பங்களிலுள்ள மின்விளக்குகளும் இங்கொன்றும்
இங்கோன்றுமாக எரியத்தொடங்கியது.

சிரித்து மகிழ்திருந்த மூன்று நண்பர்களும் திடீரென்று பதறி
அடித்து எழுந்து நின்றனர்.

நாங்க ஸ்டுடன்ஸ் சார்,வீடு பக்கதில்தான் சார்,2வது தெருசார்
என்பேரு சேகர்,இவன் பேரு மணி,அவன்பேரு வெங்கட்சார்
ரிலாகஸ்க்காக பேசிக்கிட்டு இருந்தோம் சார்.சரிசார்.இனிமேல்
இங்கே உட்காரமாட்டோம்சார்.

மூன்று நண்பர்களும் அமைதியாக தங்கள் வீடுகளை நோக்கி
நடையை கட்டினார்கள். சிறிது தூரம் வந்தபிறகு வெங்கிடு
சொன்னான். போலீஸ்காரனிடம் ஒரு முஸ்லிம் பேர சொல்லி
இருந்தேன்னு வைய்யி.மாப்பிள்ள நம்மல கம்பி என்ன
வச்சுருப்பான்டி என்றான்.

ஏண்டா என்றான்.சேகர்

பாரதீயஜா காரங்க சங்குமம் மாநாடு நடத்துறாங்கடா,அதுக்கு
சதி செய்ததாக வழக்கு போடுவாங்கடா....என்றுவிட்டு தும்மினான்

மணி சொன்னான். நான் நிணைத்தேன். நீ தும்மிவிட்டாய் என்றான்.
மூவரும் சிரித்தபோது.“டேய், பேசாம போங்கடா”ன்னு பைக்கில்
வந்த போலீஸ் கத்தினான்.

மூவரும், திரும்பி பார்க்காமல். பேசாமல்,“நீ நிணைத்தாய்.அவன்
தும்மிவிட்டான்”.மனதிற்க்குள் சிரித்தவாறு எட்டு வைத்தார்கள்


No comments :

Post a Comment

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com