ஞாயிறு 06 2012

கனவில் வந்த சிவன்.

மின்விசிறி நல்லா இருந்தபோது மின்சாரம் இல்லை.மின்சாரம்
கிடைக்கும்போது மின்விசிறி இல்லை.என நொந்து கொண்டு
புழுக்கத்தடன் தூக்கம் வராமல் புரண்டு கொண்டு இருந்தேன்.
வேலை செய்த அசதியிலாவது தூக்கம் வரும் என்று எதிர்
பார்ப்பும் தோற்றுக்கொண்டு இருந்தது.

நாளைக்கு எப்பாடு பட்டாவது மின்விசிறியை பழுது பார்த்து
வாங்கிவிடவேண்டும் என்று உறுதிககொண்டு விடியும்
நேரத்தை எதிர்பார்த்து கொண்டு இருந்தபோது.......................

மதுரை ஆதினகர்த்தர் இளைய பீடம் என்று சொல்லப்படுகிற
நித்தி என்ற நித்தியானந்தா. ஆர்பீட் தின்று பல்லெல்லாம்
வெள்ளையாக மாறிய மாட்டு பற்களைபோல் வெண்மை
பளிச்சிட்ட பற்களால் சிரித்தபடியே ஒரு கணம் சினிமாவில்
வர்ர மாதிரி பிளாஷ் பேக்கில் வந்து சென்றார்.

இவரை அடிக்கடி எங்கயோ பார்த்தமாதிரி இருக்கே.....என்று
யோசித்தபோது............ஆத்தாடி....அவ்வள லேசுல மறக்க
முடியமா?..... அண்ணனையும்,அண்ணியையும் காண்பிச்சு
  ஒலகம்பூராவுக்கும் புகழ்பரப்பி கல்லா கட்டிய சன்டீவியத்தான்
மறக்கத்தான் முடியுமா??..............

நித்தியாணந்தாவும்,ரஞ்சிதாவும் எனக்கு அண்ணனா? ரஞ்சிதா
என்ன அண்ணியா?  நான்தான் மூத்தவன். எனக்கு அம்பத்திரண்டு
ஆச்சு!  தம்பி நித்தியும் கொளுந்தியா ரஞ்சியும் பளிச்சிடும் பற்கள்
தெரிய வந்து சென்றார்கள். அவர்கள் தரிசனம் கொடுத்து சென்ற
சிறிது நேரத்தில் விளம்பர இடைவேளை வந்தவுடன் அவர்கள்
மறைந்தார்கள்.

சிறிது நேர இடைவேளைக்குப்பின் என் பெயரைக்சொல்லியபடி

“என்ன தோழர் நல்லாயிருக்கீங்களா”.என்று கேட்டபடியே ஒருவர்
வந்தார்...

“யாரென்று அடையாளம் கண்டுபிடிக்கமுடியவில்லை. தோழராக
இருக்கவும் வாய்பில்லை.” யோசிக்க அவகாசம் கொடுக்காமல்
வந்தவரே பேசினார்.

“யாருன்னு தெரியலையா”? நான்தான் சிவன்”...............

”சிவனா,எந்த சிவன். ஏட்டையாவ இருந்து சப்பு இன்ஸ்பெக்ட்ரா
மாறி என் வீட்டுப் பிரச்சினையில பொய்ப்புகார் கொடுத்தவங்களுக்கு
சார்பா....என் மீது பொய் வழக்கு போடுவேன்னு மிரட்டிய சிவனா....???

திரும்பவும் சிவனே பேசினார்.. மதுரை மீனாட்சி வீட்டுக்காரன்
சுந்தரேஸ்வரன்.”....என்றார்.

பிரிண்டிங் வேலை கொண்டு வந்திருப்பாருன்னு நெணச்சு..“ வாங்க
சார்.வாங்க, சார், இந்த சேர்ல உட்காரங்க சார்” என்றேன்.

வர்ர ,மே இரண்டாம்தேதி எனக்கும் மீனாட்சிக்கும் கல்யாணம்.....

உடனே, நான் இடைமறித்து, ரெண்டாதேதி கல்யாணத்த வச்சுகிட்டு
ஒன்னாந்தேதி வந்து பத்திரிக்கை அடிச்சு கொடுன்னா அடிக்க
முடியாது சார்., டைப் அடிச்சு முடிக்குறதுக்கள்ள ஒங்க கல்யாணம்
முடிஞ்சுரும் சார்”....

பொருங்க, பொருங்க,பத்திரிக்கையெல்லாம் பொண்ணு வீட்டுக்
காரங்க. அடிச்சுட்டாங்க.......... நா...... அதுக்கு வரலீங்க........வேறு
விசயமாக ஒங்கள பாத்துட்டு போகலாம்முன்னு.....இழுத்தார்.

அவரே சொல்லட்டமுனு பேசாமல் இருந்தேன்.....

 “வேற ஒன்னுமில்லை,நித்தியானந்தாவை தெரியுமில்ல”,

தெரியும்சார்,நேரில பாத்தது இல்லை, நித்தியும்ரஞ்சிதாவும்
ஒன்னாக இருந்ததை சன்டிவீயில பார்த்தபிறகுதான் நித்திய
தெரியும். இப்பக்கூட உங்க வீட்டுக்காரம்மா இருக்கிற தெருவுக்கு
பக்கத்தில இருக்கிற ஆதீனம் மடத்துக்கு குரு மகா சந்நிதானமாக
.நியமித்ததப்பத்தி சின்னத்திரயிலும் இணையத்திலும் வெளிவந்து
கிட்டு சார். நெருக்கமா வேறு சங்கதி எதுவும் தெரியாது சார்.......
.....
”சரி,இந்த விவகாரத்த பத்தி ,என்ன நிணைக்கிறிங்க!..வலி........

” நான். நிணைக்கிறது இருக்கட்டும், நீங்க என்ன நிணைக்கிற
சொல்லுங்க சார். நான் தெரிஞ்சுக்கிறேன்”...

”யோசித்தவறாக,தலையில் இருந்த முடியை ஒதுக்கி உச்சந்
தலையை சொரிந்தார்..சிவனுக்கு உச்சந்தலை வழுக்கையாக
 இருந்ததைக்கண்டு.....வாயைப்பிளந்தேன். சிவனக்கே மண்டை
வழுக்கையப்பா.......ம்ம்..ம்.. இருக்கட்டும் .... இருக்கட்டும்.....

சிவனே சொன்னார்.. என்கூட்டாளி மும்மூர்த்திகளில் ஒருவனான
பிரம்மன் இருக்கானே!  அவன் செய்யாத லீலையா?... ஊருப்பய
பொண்டாட்டியெல்லாம் தன் பொண்டாட்டின்னு நிணச்சுகிட்டு
நடந்தவன். அவன் செய்யாத அயோக்கிய தனமா??.. அவனையெ
படைக்கும் கடவுளாக தொழும்போது.,நித்தியும் ரஞ்சியும் செய்த
 லீலைகளா பெரியது. சரி.இதவிடு,நானே.என் கூட்டாளி விஷ்னு
வோடு ஓரினசேர்க்கை புரிந்தனே.. மும்மூர்த்திகளின் களவாளித்
தனத்தையெல்லாம் அவதாரம்.திருவிளையாடல் .புண்ணாக்கு
அது இது என்று வணங்கும்போது.....  சன்டீவீயும்.நக்கீரனும்
தங்கள் கல்லா பெட்டியை நிரப்புவதற்க்காக நித்தி- ரஞ்சி
லீலைகளை வெளியிட்ட விளம்பரத்தை பெரிதெனக் கொள்ளலாமா?

நித்தி நியமனத்தை எதிர்த்து என் லீலைகளைச்சொல்லி பொழுப்பு
ஓட்டுற பண்டார பரதேசி மடா திபதிகள் நீதிமன்றததுக்கு போவதற்கு
அருகதையிருக்கா......... ஞாயத்த சொல்லு .நா,,,,,ன் நித்திக்கு சார்பா
பேசுறதா தப்பா நெணைக்கக்கூடாது.

நாடே. தனியார்மயமா,தாராளமயமா போய்கிட்டு இருக்குது. இவிங்க
மதுரை ஆதினத்தை அரசுடமையாக்குன்னு கத்துறாங்க....

”பார்ரா ,சிவனுக்கு தனியார்மயம்,தாராளமயமெல்லாம் தெரிஞ்சு
இருக்குன்னு” வியந்தேன்.

”சே, மூவுலகையும் கட்டி அழுற சாமிக்கு அதெல்லாம் தெரியாமா
இருக்காதுன்னு சமாதானம்அடைந்து.”ஏஞசார், ஒங்க பவர காட்டி
எல்லாத்தையும் ஒரு வழிக்கு கொண்டு வர்ரதுதானே” சார்.....

ஏற்கனவே. பவர்கட்டா இருக்கு, இந்த லட்சனத்துல எனக்கு
பவரு இருக்கன்னு நம்பிக்கை வேறய்யா?..

இநநேரத்தில் சிவனின் செல்போன் சினுங்கியது.. அலோ,அலோ
என்றார். பதில்லை, நெட்ஒர்க் பிராபளமா இருக்குது. பட்டரு
அடிக்கிறான்.என்னைய தேடிக்கிட்டு இருக்காங்கே, நா...ன்
அவிங்க கண்ணுக்கு தென்படலேன்னா காணமேன்னு சொல்லி
இருக்கிற அப்பிராணி சப்பிராணியெல்லாம் புடுச்சு சாமி எங்கடான்னு
ஒதைப்பாங்கே....... நான் வர்ரென்னு சிவன் ஓடினார்...

பதறியடித்து சிவன் ஓடிய பின்னும் செல்போன மணி விடாமல்
அடித்தது........ அய்யோய்யோ,,,,,,,,,செல்போன வச்சுட்புட்டு
ஓடிட்டாரே........ செல்போனை எடுத்து .................................


ஆன் செய்தபோது.”தோழரே, சிவகங்கையில்.மேதின.பேரணியும
ஆர்ப்பாட்டமும் இருக்கு,  முன்கூட்டியே கிளம்பனும் ரெடியா
இருங்கன்னு தோழர் ஒருவர் பேசினார்.

மணியைப்பார்த்தால் பத்தை நெருங்கிக்கொண்டு இருந்தது.
அட,  நல்ல தூக்கத்துக்கு அடையாளம் கனவுன்னு சொல்லுறது
சரியாகத்தான் இருக்கிறது. என்று நிணைத்து எழுந்தேன்.




 .





3 கருத்துகள்:

  1. நித்யானந்தா விவகாரம் ஒரு தொடர் கதை போன்று நீண்டு கொண்டே செல்கிறது/////

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன செய்வது முடித்து வைப்பவர்கள்தான் தூங்கிக்கொண்டு இருக்கிறர்களே!!

      நீக்கு
  2. என்ன மசுதுக்கு நித்தி விவகாரத்த முடிக்கணும்மு நினைக்கறேள்?
    நேக்கு புரியலை. இந்தமாறி மொள்ளமாறில்லாம் ஆதீனமா, சங்கராசாரியாளா வந்தாதானே, பகவான் செஞ்ச லீலைகளும் மத்ததுகளும் மத்தவாளுக்கு தெறியறது..சவுந்தர்யலகரிய (அழகின் போதை) படிச்சவனுக்கு கனகதாரா (தங்க மழை) தேவைதானேங்காணும். அத விட்டுட்டு அஹம் பிரம்மம், ஜகன் மித்யா ( நானே அனைத்தும், உலகம் மாயை) ந்னு சொன்னா... ஆத்ல ஆத்துக்காரி
    ஸ்ரீமாரால (விள்க்குமாறால) திருச்சாச்து சாத்துவா.. நித்திட்ட போயி "ஏம் ஓய் ரஞ்சி கைய புடிச்சு இழுத்தியா"ன்னு கேக்க இங்க யாருக்கு என்ன ரைட்ஸ் இருக்குன்னேன்.

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...