வெள்ளி 11 2013

11மாத அயோக்கியர்களும் 1மாத யோக்கியர்களும்





 
  நான் வசிக்கும் ஏரியாவில் உள்ள பகுதி மக்களில் ஒரு பகுதி கேரள அய்ப்பனுக்கும் இன்னொரு பகுதி  பழனி முருகனுக்கும் செல்கின்றனர். கோவிலுக்கு செல்கின்ற இரு பகுதி மக்களில் யாருமே! சொந்த வாழ்க்கையிலோ, பொது வாழ்க்கையிலோ, நேர்மையாக இருந்ததில்லை ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமாக அடுத்தவர்களை ஆதிக்கம் பன்னுவதிலும் ஏமாற்றுவதிலும்.தான் மட்டும் நல்லாயிருக்கவேண்டும் என்ற குறுகிய சிந்தனையிலும், அதை நிறைவேற்றுவதற்க்காக குள்ளநரித்தனத்திலும்,காலத்தை கடத்தி வந்துள்ளனர்.

வருடத்தில் 11மாதங்கள் உதிரித்தனமான சிந்தனையுடனும்.குடி.கூத்தி போன்ற ஊதாரித்தனமாகவும்.வாயில் வருவதெல்லாம் ஊத்த வசவுகளும் டாஸ்மாக் வாசனையுமாக இருந்தவர்கள் மார்கழி-தை  ஒரு மாதங்களில் மட்டும்  இந்தப்புலியும் பசித்தால் புல்லையும் தின்னும் என்ற கதையாக

இல்லீங்க சாமி, போங்க சாமி, சாமியோ....... சிகரெட்டாசாமி..... வேனாம் சாமி சரக்கா சாமி, மாலபோட்டுயிருக்கேன் சாமி.அடுத்த மாசம் பாப்போம்சாமி.......பேச்சுக்கும் மூச்சுக்கும் ஒவ்வொரு தடவையும் சாமி....சாமி..சாமி...... எல்லாரையும் சாமி.......சாமி.......சாமி..... என்றே அழைத்தார்கள்.

இது எப்படி இருக்குதுன்னா....................

கொள்ளைக்காரன் கொலைகாரன்  செய்த பாவங்கள் அநியாயங்கள் மறஞ்சு போகிறதுக்கு பரிகாரமாக  தான தருமம் செய்யிற மாதிரி.11மாத அயோக்கியர்கள் எல்லாம் ஒருமாதத்தில் யோக்கர்கள் ஆகிறார்கள்.

கல்வி ஆண்டு., கணக்கு ஆண்டு, காலண்டர் ஆண்டு மாதிரி,   இந்த ஒரு மாதம் யோக்கியர்கள் ஆண்டாகத்  எனக்கு தெரிகிறது.


2 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....