பக்கங்கள்

Sunday, January 13, 2013

அட,போங்கய்யா! நீங்களும் உங்கள் பொங்கல் வாழ்த்துக்களும்.......

 

ஏமாந்த தமிழர்க்கும்
ஏமாற்றும் தமிழர்க்கும்
தமிழர் திருகுநாளின்
இனிய பொங்கல்
வாழ்த்துக்கள்.........

மாதம் மும்மாரி பொழிந்து
காடு வயல் செழித்து
தொழில்வளம் பெருகி
போட்ட முதல் எடுத்த
தமிழர்க்கும் பொங்கல்
வாழ்த்துககள்...........

மின்கட்டணத்தையும்
பேருந்து கட்டணத்தையும்
ஏற்றிவிட்டு இருண்ட
தமிழகமாக மாற்றிய
இருண்ட காலத்தை
மூன்றாதாகவும்
,மானாடமயிலாட தந்த
ஒரேதமிழனை அய்ந்தாகவும்
ஆட்சியில்அமர ஓட்டு போட்ட
வாக்காள தமிழர்க்கும் பொங்கல்
வாழ்த்துக்கள்..............

வருடத்தில் 11மாதம் அயோக்கியர்களாக
இருந்துவிட்டு 1மாதம் யோக்கியர்களாக
வேஷம் போடும்  டாஸ்மாக்
தமிழர்க்கும் பொங்கல்
வாழ்த்துக்கள்.....................

இருபோக சாகுபடியும் பொய்த்து
ஒருபோக சாகுபடியும் பொய்த்து
விலை உயரும் அரிசியை வாங்க
முடியாமல் அல்லல்படும் தமிழர்க்கும்
 பொங்கல் வாழ்த்துக்கள்.................

 வானம் பொய்த்தாலும்
வயல்கள் பொளந்தாலும்
எவன் குடல் சரிந்து செத்தாலும்
 உச்ச நீதிமன்றம் சென்று வெற்றி
கொடி நட்டுவிட்டு  ஜல்லி பய
விளையாட்டை வீரவிளையாட்டாக
காது குத்தும் வீரத் தமிழர்க்கும்
வாய்பொளந்து கூட்டம் சேரும்
வெட்டித் தமிழர்க்கும் பொங்கல்
வாழ்த்துக்கள்..........................

வாழ்வதற்கும் வழியுமில்லை
வழி பிறக்க போராடினால்
 போராடுபவர்களை உள்ளே
தள்ளி ஒரு வருடம் கஞ்சிக்கு
வழி கண்ட குண்டர் சட்டம்
கொண்டு வந்த குண்டாந்(தி)
தடியர்களுக்கும் பொங்கல்
வாழ்த்துக்கள்.............

வாழ்வதற்கு வழி சொல்லாமல்
வாழும்வழியை பறித்து அணு
அணுவாக சாகடிக்கும்
அணுஉலைநிறுவும்
கொலையா கொலையா
முந்திரிகளுக்கும் பொங்கல்
வாழ்த்துக்கள்..................

வெந்ததும் கிடைக்காமல்
வேகாததை தின்று-சதி
மூலம் விதி வந்து அமைதி
இல்லாமல் சாகும்
 தமிழர்க்கும் பொங்கல்
வாழ்த்துக்கள்.....................

 மொத்தத்தில்
கல் தோனறா
மண் தோனறா
காலத்துக்கு முன்
தோன்றிய சாதி
வெறி கொண்ட
தமிழ் ஈனத்துக்கும்
 இனிய பொங்கல்
பொங்கல்  வாழ்த்துக்கள்...
No comments :

Post a Comment

”வினவு” கற்றுக் கொடுத்த அனுபவத்தின் மூலம் ... திட்டுபவர்கள் குறித்து குறைபடத்தேவையில்லை என்பதால்... கருத்துரை மதிப்பாய்வு நீக்கப்படுகிறது.. இனி.. புழுதிவாரி தூற்றுவோர்கள் தூற்றிக் கொள்க.........!!