செவ்வாய் 15 2013

நல்ல குடிமக்கள்..........




ஒரு பெரிய பேரரசுக்கு உட்பட்ட ஒரு சிற்றரசாக ஒரு நாடு இருந்து வந்த்தது. அந்த நாட்டை ஒரு அரசரும்.ஒரு அரசியருமே மாறி மாறி ஆண்டுவந்தனர்..

இந்த நாட்டை ஆண்ட அரசருக்கும் அரசியருக்கும் எப்பவுமே ஒத்து போகது. வேறு நாட்டு அரசர்களோ, பெரும் தொழில் வணிகர்களோ, இவர்கள் ஆளும் போது தொழில் தொடங்க வந்துவிட்டால் விழுந்து விழுந்து தனித்தனியாக உபசரிப்பார்கள்.

அரசர் பதவிக்கு வந்தால், அரசியார்.- வெறுப்புற்று காட்டுப் பங்களாவுக்கு போய்விடுவார். 

அரசியார் ஆட்சிக்கு வந்துவிட்டால் அரசர் கூத்து பார்ட்டிகளுக்கு கதை எழுத போய்விடுவார்.

அரசியார் ஆட்சிக்கு வந்துவிட்டால் அரசரால் கஜனா காலியாகவிட்டது என்று புகார் சொல்வார். அரசரோ, கதை எழுதுவதோடு முன்னொரு காலத்திலே என்று புகார்க்கு பதிலையும் கதையாக  சொல்வார்.

அரசர் ஆட்சிக்கு வந்தால் அரசியாரை ஊழல் குற்றச்சாட்டில் வழக்கு தொடுப்பார். அதே மாதிரி அரசியார் ஆட்சிக்கு வந்தால் பதிலடியாக அரசரின் கைத்தடிகளை ஊழல் புகாரில் உள்ளே தள்ளி கம்பி எண்ண வைப்பார்.

இப்படியாக அந்த நாட்டிலே ஒருவர் மாற்றி ஒருவர் குற்ற்ம் சொல்லிக்கொண்டும் தங்கள் தங்கள் கஜனாக்களை நிரப்பிக் கொண்டு  ஆண்டு வந்தனர்.

அந்த நாட்டு மக்களோ, தானுன்டு தன் வேலையுன்டு என்று,  அரசியாரும் அரசரும்  மக்களுக்காக போட்டி போட்டு கொண்டு வந்த குடி கெடுக்கும் தீர்த்த்ததை பருகி எல்லா வகையான ஆடல்.பாடலில் திளைத்து உலகமே போற்றும் நல்ல குடி மக்களாக வாழ்ந்து வந்தனர்.




1 கருத்து:

  1. குடி கெடுக்கும் தீர்த்தம் 300கோடிக்கு விற்பனை ஆகியிருக்கு!

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....