பக்கங்கள்

Wednesday, January 09, 2013

பெருந்தரகர்கள் இருவர்...... வாடகைக்கு வீடு
தேடி அலைபவர்களுக்கு
வீடு தேடி பிடித்து
வாடகை வீட்டில்
குடியேறுபவரிடம்
தொகை பெறுபவர்
வீட்டுத்தரகர்...

கறவை மாடோ?
உழவு மாடோ?
வேண்டுபவர்களுக்கு
மாட்டுப்பல் பார்த்து
மூடிய துணியில
விரல் பிடித்து
பேரம் பேசி மாட்டை
வாங்கியவரிடமும்
விற்றவரிடமும்
தொகையை பெருபவர்
மாட்டுத்தரகர்........

புதிய பழைய பொருளை
விற்பனை செய்து
கொடுத்து அதன்
மீது தொகையை
பெருபவர் விற்பனைத்
தரகர்...............

இந்தத் தரகர்கள்
வரிசையில்


பெருந்தரகர்கள் இருவர்...........

 ஒருவர்
இந்திய ரூபாய்
நோட்டில் சிரித்து
கொண்டு இருப்பவர்
பிரிட்டிஷ் உலக
 சாம்ராஜ்ஜியத்தின்
தரகர்.........என்றால்

இன்னொருவர்
மிஸ்டர் கிளின்
உலக வங்கியின்
முன்னால் அதிகாரி
அமெரிக்க ஏகாதி
பத்தியத்தின் தரகர்


No comments :

Post a Comment

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com