சனி 13 2013

டாக்டர் அம்பேத்கரின் பொருளாதாரக்கொள்கைகள் எப்போது சாத்தியமாகும்...................




அரசியல் அமைப்பு சட்டத்தின் வரைவுக் குழுவின் தலைவராக அவர் பணியாற்றினாலும். அவர் முன் வைத்த அடிப்படை கருத்துக்கள் எதையும் அரசியல் சட்டத்தில் சேர்க்க அவரால் முடியவில்லை. ஆற்றல்மிக்க தலித் தலைவர்கள் ஒரு குறிப்பிட்ட வரம்பக்குள்தான் செயல்பட முடியும் என்ற அளவு கோளை ஆதிக்க வர்க்க சாதிகள் தீர்மானிக்கின்ற உரிமை பெற்று இருந்தனர்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை மற்றவர்களுக்காக எழுதி முடித்தேன் என்று பிற்க்காலத்தில் வருத்தத்தடன் கூறினார். இதோடு சட்டங்களால் இந்த சமூகத்தை மாற்றிவிடமுடியும் என்று கனவு கண்டேன. அது முடியாது என்று இப்போது உணர்ந்து கொண்டேன். இந்த சட்டங்களை எரிப்பவன் ஒருவன் இருப்பானென்றால், அதில் நானே முதலாவதாக இருப்பேன் என்றும் கூறினார்.

அம்பேத்காரல் ஆன பலன்களை எல்லாம் படித்த பிரிவினர் பெற்றனர். அதை அவர்கள் தங்கள் சுய நலத்திற்கும் சொந்த லாபத்திற்கும் மட்டுமே பயன்படுத்திக் கொண்டனர்.

அம்பேத்கர் சாதி ஒழிப்பையே முதன்மையாக வலியுறுத்தினார். தாழ்த்தப்பட்ட மக்களை சாதிய கொடுமைகளிலிருந்து விடுவிக்கவே போராடினார். அம்பேத்காரின் பகுப்பாய்வுகள் நவீனமயமாக்கல்,தாரளமயமாக்கள், தனியார்மயமாக்கள் எதிர்ப்பாகவே உள்ளன.

அம்பேத்கரின் நிலச்சீர்திருத்தம்,கூட்டுப்பன்னை தொழில்மயமாக்கல், வேளான்மை கொள்கைகள், தொழில்சீர்திருத்தங்கள். போன்ற பொருளாதார கொள்கைகள்,  மக்களுக்கான அரசை வர்க்கப்போராட்டத்தின் மூலம் நிறுவி. புரட்சிகர அரசு நிகழ்கிற போதுதான் அம்பேத்கருடைய பொருளாதாரக் கொள்ளைகைகள் நடைமுறை சாத்தியமாகும்,











1 கருத்து:

  1. சட்டமேதை வன்றுதான் எல்லோருக்குமே தெரியும்.இவ்வளவு திறமையை கொண்ட அவருக்கு மரியாதை செய்ய வேண்டும்

    பதிலளிநீக்கு

இனி நான்என்ன செய்ய....

 முன்பொரு காலத்தில் ஓலைக்குடிசையில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து  வந்தேன்.. இயற்கையோடு நான் வாழ்வதை பிடிக்காத சிலர் என் குடிசைக்கு தீ வைத்தனர...