ஞாயிறு 19 2013

ஈழத்தமிழரின் நினைவஞ்சலியில் கலந்து கொண்ட தமிழக போலீசு காவலர்கள்.!!!



2009 வருடம் மே17ந்தேதி இன அழிப்புப்போரில் உயிர்நீத்த அனைத்து ஈழத்தமிழருக்கான நினைவஞ்சலியை...

கோடை வெய்யலின் உக்கிரத்தை காலையில் தாங்க முடியாததால் மாலை வேளையில் காற்று வாங்கிக்கொண்டு,யாருக்கும் எவ்வித-துளிகூட கஷ்டமின்றி,ஓரமாக மெழுகுவத்தி ஏந்தி திரிவதை மாற்றி..
சீ என்று புறந்தள்ளி..

ஈழத்தமிழரின் நினைவஞ்சலி கூட்டத்தை போர்குணமிக்க ஆர்ப்பாட்டமாக ஈழத்தமிழரின் தன்னூரிமைக்கான மாணவர் முன்னணியும்,புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியும் இணைந்து சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடத்தினர்.

இந்த இன அழிப்பு போரில் உயிர் நீத்த அனைத்து ஈழத்தமிழர்க்கான நினைவஞ்சலி ஆர்ப்பாட்டத்தில் 70 மகளிர் காவலர்களும்,50ஆண் காவலர்களும்,7 உதவி ஆய்வாளர்களும்,5 ஆய்வாளர்களும்,2 உதவி ஆய்வாளர்களும்,5 உளவுத்துறை ஆய்வாளர்களும் கலந்து கொண்டனர்.

வந்திருந்த உளவுத்துறை ஆய்வாளர்களில் ஒருவர் ஆர்ப்பாட்டத்தில்
தலைமை வகித்து பேசிய புமாஇமு தோழர் மருதுவின் தலைமை உரையிலும்,சிறப்புரை ஆற்றிய ஈ.த.மா.முன்னணியின் மாநில ஒருங்கினைப்பாளர் தோழர் த.கணேசன் உரை வீச்சிலும் ஈர்க்கப்பட்டு 
தன் கையேட்டில் பதிவு செய்து கொண்டார்.

ஆர்ப்பாட்டத்தில் தொடக்கத்தில் பேசிய தோழர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்த அணைத்து காவலர்களையும் வரவேற்று பேசியது குறிப்பிடத்தக்கது.

நன்றி..வினவு


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...