வியாழன் 12 2013

இரட்டை வேடம் போடுவதில் கில்லாடி யார்?..........

இருவருமே திரை துறையிலிருந்து வந்தவர்கள்

ஒருவர் எழுத்திலும் பேச்சிலும் வல்லமை காட்டியவர்.
மற்றெருவர் ஆடலிலும் நடிப்பிலும் திறமையை செலுத்தியவர்.

ஒருவர் மூச்சுக்கு அண்ணா வழியில் என்பார்.
மற்றெருவர் எப்பொழுதாவது புரட்சி தலைவர் என்பார்.

ஒருவர் அய்ந்து முறை நாற்காலியில் அமர்திருந்தார்.
மற்றெருவர் மூன்றாவது முறையாக நாற்காலியில் கோலோச்சுகிறார்.

ஒருவர் இல்லாத மக்களுக்கு டி.வி,கேஸ் அடுப்பு கொடுத்தார்.
மற்றெருவர் பாவப்பட்ட ஜனங்களுக்கு பேன்.மிக்ஸி,கிரைண்டர் வழங்கினார்.

ஒருவர் சமச்சீர் கல்வியை உசுப்பேற்றினார்.
மற்றெருவர் சமச்சீர் கல்வியை புதைகுழிக்கு தள்ளினார்.

இப்படி இந்த இருவரைப்பற்றியும் சொல்லிக்கொண்டே போகலாம்
ஒவ்வொரு மத்தியகட்சியாக இருந்தாலும் மாநில கட்சியாக இருந்தாலும் ஒவ்வொன்றும் மாநிலத்துக்கு தகுந்த மாதரி இரட்டை வேடம் போடுவது அறிந்திருந்தாலும்,

குறிப்பாக தமிழ்நாட்டில் இந்த இருவருமே,வாய்வீச்சிலும் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவதிலும் சளைக்காதவர்கள் என்று தெரிந்திருந்தாலும்

இந்த இருவர்களில் தமிழ்நாட்டு நாற்காலியின் அதிகாரத்துக்காக, அந்த நாற்காலியில் அமர வைக்கும் ஓட்டுக்காக இரட்டை வேடம் போடுவதில் கில்லாடி யார் ??????????

4 கருத்துகள்:

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...