ஞாயிறு 15 2013

நல்ல நண்பனை மனைவியாக ஆக்கிய ஒரு தலைவர்....!!!!!!!

இந்தியாவின் ரப்பர் ஸ்டாம்பு என்றால் பாட்டாளி வர்க்க அரசியல் தெரிந்தவர்கள் புரிந்தவர்கள் சடடென்று சொல்லிவிடுவார்கள் இந்தியாவின் குடியரசு தலைவரென்று......

அப்பேர்பட்ட  இந்தியாவின் குடியரசு தலைவர் ஒருவர், நல்ல நண்பனை மனைவியாக ஆக்கிக் கொண்ட கதைதான் இது.

இந்தியாவின் இரண்டாவது குடியரசு தவைராக பதவி வகிப்பதற்கு
முன். முதல் குடியரசு துனைத் தலைவராக   ராதாகிருஷ்ணன்
பதவி வகித்தபோது, பதவியின் ஒரு வேலையாக   வெளிநாடு
செல்வது  ஒரு விதி.

அந்த விதிப்படி, வெளிநாட்டுப் பயணம் மேற்க்கொண்டார். பயணம் செய்த போது தங்குவதற்க்காக எற்ப்பாடு செய்யப்பட்ட அறையில் ஒரு படுக்கை மட்டும் போடப்பட்டு இருப்பதை அறிந்து,இன்னொரு படுக்கை போடும்மாறு சொன்னாராம்.

அறை ஏற்ப்பாடு செய்தவர்களோ! துனைக்கு யாருமில்லாமல் தனியாக வந்திருக்கும் இவர், மனைவியை இழந்தவர். எதற்கு இன்னொரு படுக்கை போடச் சொல்கிறார் என்று பலான சந்தேகம் கொண்டு குடியரசு துனைத் தலைவரின் அறையை நோட்டமிட்டனர்.

அப்போது.ஒரு படுக்கையில் ராதா கிருஷ்ணனும்,இன்னொரு
படுக்கையில் புத்தகங்களும் இருந்தததைக் கண்டனர்.

இதைப்பற்றி ராதாகிருஷ்ணன், புத்தகங்கள்தான் என் மனைவி,
அவைதான்என் படுக்கையில் இருக்கும். அதற்குத்தான் இன்னொரு
படுக்கை என்று சொன்னார்

நல்ல நண்பனுக்கு அடையாளம் புத்தகங்களே என்றுதான் சொல்வார்கள். அந்த நல்ல நண்பனையே.மனைவியாக்கி கொண்டவர்தான் இந்தத்தலைவர்.



3 கருத்துகள்:

  1. உண்மை தான் புத்தகமே சிறந்த நண்பன்

    பதிலளிநீக்கு
  2. புத்தகங்களை மனைவியாக நேசித்ததால் தான் இவரிடம் இருந்து தத்துவ முத்துக்கள் பிறந்ததா ?

    பதிலளிநீக்கு

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...