பக்கங்கள்

Wednesday, September 18, 2013

தாலி பிச்சையால் காந்தியின் உயிரை மீட்ட கஸ்தூரிபா..!!!

,புல்லானாலும் புருஷன்,கல்லானாலும் கணவன்,கணவனனே கண்கண்ட தெய்வம் என்ற ஒப்புமைக்கேற்ப, இந்தியயாவின் பெண்களுக்குரிய பொதுப் பண்புகளான அடக்கம்,சகிப்பு தன்மை,,பொருமை,தியாகம், கணவன்வழியே தன்வழி என்று புராணத்தில் கணவனை மீட்ட சாவித்தரியாக   1869ல் பிறந்து அரை ஆடை பக்கரியை மணந்து,  உண்ணாவிரத்தில் உயிரைவிட இருந்த காந்தியை மடிபிச்சையால் மீட்டு  75 வயதுவரை வாழ்ந்து மடிந்தவர் கஸ்தூரிபா.

ஆணாதிக்கத்திடமிருந்து  விடுபட,பார்ப்பண பெண்கள், உயர்ஜாதிப்பெண்கள், பிற்ப்படுத்தப்பட்ட பெண்கள், தாழ்த்தப்பட்ட பெண்கள் போன்ற இந்தியாவின் ஒட்டு மொத்தப் பெண்களின் உரிமைக்காக போராடி, பெண்களுக்கான உரிமையை வாங்கித் தந்தவர் அண்ணல் அம்பேத்கார்.

பெண்களைவிட மிகவும் கொடுமையாக , இந்து மதத்திலுள்ள தாழ்த்தப்பட்டவர்களை மனிதர்களாக நடத்தப்படுவதில்லை என்பதையும்,  அத்தகைய தாழ்த்தப்பட்டவர்களுக்கு “அரிஜன்”( கடவுளின் குழந்தைகள்) என்று பேரு வைத்த காந்தியையும் ஆதாரததோடு அம்பலப்படுத்தி, அன்றைய பிரிட்டிஷ் அரசிடம் போராடி, மனிதர்களாக மதிக்கப்படாத  மக்களுக்கு இரட்டை வாக்குரிமை பெற்றுத் தந்தார்.

போராடி பெற்ற  இரட்டை வாக்குரிமையை எதிர்த்து, இந்தியாவின்  நிமிட கணக்கில் நேரத்தை பகிர்ந்து வாழ்ந்த  மகா....ஆஸ்துமாவான அரைஆடை பக்கிரி சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார்.

அரை ஆடை பக்கரியின் உண்ணாவிரதத்தைக் கண்டு , இந்தியாவிலுள்ள பார்ப்பன உயர்ஜாதி கைகளிலுள்ள ஊடகங்களும் பல கட்சி தலைவர்களும்   அஞ்சா-நெஞ்சரை கொல்ல வந்த வில்லனாக அண்ணல் அம்பேத்கரை சித்தரித்தன.

வில்லனாக சித்தரித்த தலைவர்களின் மத்தியில் ஒருதலைவர் மட்டும்.

“கோடிக்கனக்கான தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமையைவிட ஒரு தனிநபரின் உயிர் முக்கியமல்ல, காந்தியின் மரணத்தை குறித்து தாங்கள் கவலைப்பட வேண்டாம். உங்கள் உறுதியில் இருந்து பின் வாங்காதீர்கள்” என்று தந்தி கொடுத்தார் தலைவர் பெரியார்.

உறுதியாக இருந்த அம்பேத்கரை, காந்தியின் மனைவி கஸ்தூரிபா, அண்ணல் அம்பேத்கரை நேரில் சந்தித்து.தன் கணவரின் பிடிவாத போக்கை மன்னித்து தன் கணவரின் உயிரை  காப்பாற்றும்படி தாலிப்பிச்சை கேட்டார்.

 ஆணாதிக்க கொடுமையிலிருந்து பெண்களுக்கு போராடி விடுதலை வாங்கித் தந்த அண்ணல், கஸ்தூரிபாவுக்காக மனமிரங்கி  அவரின் கணவரின் உயிரை காப்பாற்றினார்.

இதனால், இந்து மதத்தில் மனிதனாக மதிக்கப்படாத தாழ்த்தப்பட்டவர் களுக்கான   போராட்டத்தில், அரைஆடை பக்கரியின் “பிளாக்மெயில்” அரசியலினால் தோற்றார்.


நன்றி! வே. மதிமாறனின்


No comments :

Post a Comment

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com