வெள்ளி 06 2013

வருந்துவதற்கு ஒன்றுமில்லை........

 
பயணக்கைதி என்ற வகையில் என்னை சில வினாடிகளில் சுட்டுக் கொல்லப் போகிறார்கள் என்று சிறைச்சாலைப் பாதிரியார் இப்பொழுதுதான் எனக்கு தெரிவித்தார்.எனது பொருட்களை வந்து எடுத்துச் செல்வதந்கு சர்ச் மெடி சிறை அதிகாரிகளுக்கு மனு போடும்படி உங்களை வேண்டிக் கொள்கிறேன் எனது தஸ்தாவேஜிகள் சில இங்கே உள்ளன. ஒருவேளை அவை என்னை நினைவுறுத்த உதவியாக இருக்கக்கூடும்.

எனது வாழ்வு  முழுவதிலும் ஒரு லட்சியத்தைப் பின்பற்றி ஒழுகி வந்தேன், அந்த லட்சியத்துக்குக் கடைசிவரை நான் உண்மையாக நடந்து கொண்டேன. என்பதை என் நண்பர்கள் அறிவார்களாக! பிரான்ஸ் வாழட்டும் என்பதற்க்காக நான் இறக்கிறேன் என்பதை இந்த நாட்டு மக்கள் அறிவார்களாக,

கடைசிமுறையாக என்து மனசாட்சியைத் தொட்டுச் சோதித்து விட்டேன. வருந்துவதற்கு எனக்கு ஒன்றுமில்லை. இதை நீங்கள் எல்லோர்க்கும் தெரிவிக்க வேண்டுமென்பதுதான் என் ஆசை. இன்னொருமுறை பிறப்பேனேயானால இதே பாதையில்தான் மீண்டும் செல்வேன்.

கம்யூனிசம் என்பது உலகின் மறுபிறப்பு. அது ஒரு ஒளி பொங்கும் வைகைறையைத் தோற்றுவிக்கும். தோற்றுலிக்கச் செயலாற்றிக் கொண்டு வருகிறது. எனது ஆருயிர் நண்பர் பால்வேயான் குதூரியர் சொன்னது சரி என்று நான் திடமாக நம்புகிறேன். மார்ஷல் காஷான் எனக்கு ஒரு சிறந்த குருவாக வாய்த்தார். அதில் சந்தேகமில்லை. அதனால்தான் இவ்வளவு சித்தத் தெளிவோடு இவ்வளவு நம்பிக்கையோடு நான் சாவை எதிர் நோக்கி நிற்கிறேன்.

“சென்று வருகிறேன்! பிரான்ஸ் நீடூழி வாழ்க!”.
                                                                                                  காப்ரியல்

“மார்க்ஸிய மெய்ஞ்ஞானம்” என்ற நூலிருந்து

3 கருத்துகள்:

  1. வணக்கம்

    மிக அருமையாக எழுதியுள்ளிர்கள் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. கம்யூனிசம் என்பது உலகின் மறுபிறப்பு. /////////

    பாவம் பிரான்ஸ்ல கூட மறுபடி பொறக்காம்ம போச்சு..

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்தியவர்க்கும் வசவிட்டதின் மூலம் கருத்திட்டவருக்கும நன்றி!!!

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....