திங்கள் 30 2013

இத்துனுண்டு வாய்க்குள் அம்மாம் பெரிய உலகம்!!! ஒரு புளுகு கதையும் நிஜ கதையும்.....

“ அம்மா, கிருஷ்ணன் ...மண்ணை அள்ளித் தின்றான” அவன் அம்மாவான யோசதையிடம் சொன்னான் பலராமன்.

“கிருஷ்னா...... மண்னையா தின்றாய்” கேடடாள் அவன்தாய் யோசதை.

மண்ணைத் தின்ற  பாலகன் கேட்டான். அவன் அம்மாவிடம்.

“யார் சொன்னது” என்று,

அவன்அம்மா சொன்னாள்.- பலராமன்னு,

“பொய்....ம்மா, வாயைத்திறந்து காட்டுகிறேன். நீயே பார்”

வாயை திறந்து காட்டினான்.பாலகன்கிருஷ்ணன்.

அடேங்கப்பா,“ இத்துனுண்டு வாயில்... ஏழு கடல்களும ஏழு மலைகளும்,ஏழு உலகங்கங்களும், முப்பத்து முக்கோடி தேவர்களும், எண்பத்து நாண்கு லட்சம் ஜீவராசிகளும் கொண்ட அம்மாம் பெரிய  ஒலகமான பூமி மண்ணாங்கட்டி போல் வலம் வந்ததாம்.

 அண்டா கசத்திலும் அபுக்கா கசத்திலும், பெரிய புளுகுணி கசம் இதுதான்.

இந்த புளுகுனி கசத்தைவிட உண்மையான அண்டா கசம், அபுக்கா கசம்  இது.

கிரானைட்-ஊழல்garnet-2

 இத்துனுண்டு வாய்க்குள் வெளியே உள்ள  இம்மாம் பெரிய உலகத்தில்  மலையையே  முழுங்கிய மகாதேவன்களான மலைக்கள்ளன்கள், கடலையே காணமால் ஆக்கிய தாது மணல் தாதாக்கள்,  சுரங்கத்தையே துரும்பாக்கிய இரும்புக களவாணி  ரெட்டிக்கள்,  எண்ணெயையே கசக்கி பிழிந்தெடுத்த எண்ணெய்வள எத்தன்களான அம்பானிகள்- போன்றவர்கள்  இருக்கும்போது..

அதெப்படி இத்துனுண்டு வாயிக்குள் மண்ணாங்கட்டி சைசில்   தெனவெட்டாக உலகம்  வலம் வந்திருக்கும்

முன்னது புளுகு, பின்னது  நிஜம்

கொஞ்சமாச்சும்  பொருத்தமா சொல்ல  யோசிங்களப்பா...................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...