திங்கள் 09 2013

பூட்டிய வீடு என்ற நிணைப்பே இல்லாத களவாணிகள்.............



முன்பெல்லாம் கதவு இல்லாத வீட்டில்தான் எந்த சிரமம் இல்லாமல் களவாணிகள் திருடிக்கொண்டு இருந்தார்கள்.

அப்போது,பொருளை பறி கொடுத்தவர்களுக்கு ஆதரவான வார்த்தைகளை சிலர் சொல்வார்கள். கதவு இல்லாத வீட்டில களவு போகத்தான் செய்யும்,கதவு இருந்தும் பூட்டப்படாமல் இருக்கும் வீடுகளிலும்  திருடு போவது சகஜம்தான், களவு போனதைப்பற்றி கவலைப்படாதீர்கள் என்று.

இவர்கள் மட்டும்மா ?....,போலீஸ் ஸ்டேஷனுக்கு போயி, அய்யா.என் வீட்டுல களவு போயிருச்சுய்யா...?என்று புகார் கொடுத்தால்.........

போலீஸ் அய்யா அவர்கள் சொல்வார்கள்.கதவ,நன்றாக பூட்டிவிட்டு போனீயா....ய்யா,  என்பார். அடுத்த நிமிடத்தில்,கதவ...பூட்டாம போனா, களவு போகாம மயிரா...போகும், என்பார். அதற்கு அடுத்த நொடியில், ஏய்ய்யா... எங்க உயிர வாங்க வர்ரீங்க.............என்பார். அதோடு....

தெருவுக்கு பக்கத்தில போனாலும் கதவ...பூட்டிட்டு ஒருதடவைக்கு இரு தடவையாக இழுத்து பார்த்துட்டு போகனும் ...என்ன தெரியுதா      என்றுவிட்டு அஞ்சாறு வசவுகளோடு அறிவுரையும் கூறுவார் அநத போலீஸ் அய்யா........

ஆனா,பாருங்கள்! நன்றாக பூட்டிய வீட்டிலும் அஞ்சாறு தடவை இழுத்து பார்த்து விட்டு சென்ற வீட்டிலும்.......... அதுவும் போலீஸ் ஸ்டேசனுக்கு அருகே உள்ள வீட்டீலேயே  களவு போயிருக்கும்......

செய்தி--- பழநீ அருகே பூட்டிய வீட்டை உடைத்து 35 பவுன் நகை கொள்ளை. இப்படி  பல இடங்களில் பூட்டிய வீட்டின் பூட்டை உடைத்தோ.கதவை உடைத்தோ களவு  செய்கிறார்கள் களவாணிகள்.

 வரவர பூட்டிய வீடு என்ற நிணெப்புகூட இல்லாம போகுது களவாணிகளுக்கு....

அவர்களும் நாளொரு  தடவையாக புது புது உத்திகளை பயன்படுத்தி களவு செய்கிறார்கள்   இவர்களை பார்த்துதான் நாடு தொழில் வளர்ச்சியில் முன்னேறுகிறது  என்கிறார்களோ..!!!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....