ஞாயிறு 20 2013

இதற்கு என்ன அர்த்தம்...???



கடந்த மூன்று நாட்களுக்கு முன் எனது கனணிக்கு வயிற்றுவலி வந்துவிட்டதுஃ அதனால், அதுவால் எந்த வேலையும் செய்ய முடியா நிலைக்கு ஆகிவிட்டது.

அந்த நேரம் பார்த்து,எனக்கும் வயிற்றுவலி வந்துவிட்டது. எனக்கு வயிற்றுவலி வந்ததன் காரணம் தெரிந்துவிட்டது.

முந்தின நாள் இரவில் பெய்த மழையில் நணைந்துவிட்டேன். விடாது மழையுடன் நானும் விடாது மழையுடன் நணைந்து குளித்துவிட்டு உணவு உண்டதில் ரேஷன் கடையில் வாங்கிய வெறும துவரம்பருப்பு கூட்டுடன்.ரசம் கலந்து சாப்பிட்டதால் மறுநாள் செமிக்காமல் வயிறு ஊதி வலி எடுக்க ஆரம்பித்தது.

வசூல் ராசாக்கல் எம்பிபிஎஸ்-ன் வசூல் சீசன் மாதமாக இருப்பதால், ஆஸ்பத்திரிக்கு செல்லாமல் வீட்டு வைத்தியம் செய்து கொண்டும், எந்த வேலையும் செய்யாமல் வலியால் ஏற்பட்ட வயிற்றை தடவிக் கொண்டு நேரத்தையும் நாளையும் கடத்திக் கொண்டு இருந்தேன்.

இரவு வந்தது.வலியாலும், எதுவும் சாப்பிடாததாலும்,தூக்கம்
வரவில்லை.புத்தகமும் படிக்கமுடியவில்லை, கைப்பேசியையும்
நோண்ட முடியவில்லை.

படுக்கையில் புரண்டு படுப்பதும், பிறகு எழுந்து வயிற்றை அமுக்கிக் கொண்டு உட்கார்ந்து இருப்பதுமாக இருந்தேன. மழையும் பெய்து கொண்டு இருந்தது.

அதிகாலையில் என்னை அறியாமல் தூக்கம் வந்தது. தூக்கத்தில் கனவும் வந்தது.

கனவில்,என் தொழில் சம்பந்தமான வேலைக்கு என்னை ஒருவர்
ஒரு கம்பெனிக்கு அழைத்துச் செல்கிறார். கம்பெனி அருகில்
சென்றவுடன்,என்னை வாயிலில் நிற்கச் சொல்லிவிட்டு,அந்தநபர் கம்பெனிக்குள் செல்கிறார்.

சென்றவர்.நெடுநேரமாகியும் வராததால். நின்று கொண்டே இருந்த நான். சோர்வை  தவிர்ப்பதற்க்காக அந்த வீதிவழியே சிறிது தூரம் நடந்தேன்.

நடைபயின்று வந்த தெருவானது.திடீரென்று  பாதை மாறிவிட்டது.தெரிந்தது. எந்தப்பக்கம் செல்வதென்று தெரியவில்லை. வேறு ஒரு தெருவில் வந்தபோது.தெருவின் இருபக்கங்களிலும் ஏராளமான கடைகள்.

அந்தத் தெருவழியே வந்தபோது. ஒரு கண்ணாடி கடைக்குள் வந்துவிட்டேன.  அந்தக் கடைக்குள் என்னைச் சுற்றிலும் கண்ணாடிகள், கண்ணாடியில் என் உருவம் தெரியவில்லை. கடையை விட்டு வெளியே வரவும் பாதை தெரியவில்லை.

கண்ணாடிக் கடைக்குள் அடைபட்ட நான் வெளியே வரமுடியாமல்.கண்களை மூடி,வயிற்றை கைகளால் அமுக்கியபடி அமர்ந்திருந்தேன.

கண் முழித்தபோது விடிந்திருந்தது. வயிற்று வலி மட்டும் விடாமல் இருந்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...