திங்கள் 21 2013

போலிகளை காட்டி கம்யூனிசத்தை கிண்டலடிக்கும் ஊடகங்கள்....




இந்தியாவில்  வெளிவரும் தினசரி,வார,மாதமிருமுறை,மாதமொருமுறை பத்திரிக்கைளும்,ஒளி-ஒலி பரப்பும் தொலைகாட்சிகளும்.ஆகிய எல்லோரும் ...

இந்தியாவில் கம்யூனிஸ்ட்கட்சி என்றால் வலது.இடது கட்சிகளைத்தான் குறிப்பிடுகிறார்கள். இந்த வலது இடதுகள்தான் கார்ல் மார்க்சின் சித்தாந்த்தை கரைத்து குடித்தவர்கள் போல் சிலாகித்து எழுதுகிறார்கள். காங்கிரஸ்காரர் களுக்கு,காந்தி.நேருவை காட்டியும், பாரதீய ஜனதாகட்சிக்காரர்கள், ராமனையும்,கிருஷ்னனையும் காட்டி ஓட்டு பிச்சை எடுப்பதற்கு பயன்படுத்துவது போல்தான் வலது.இடது கம்யூனிசஆசான்களின் பெயரை பயன்படுத்தி ஓட்டு பிச்சை எடுத்து பதவி பெற்று வருகிறார்கள்.

இவர்கள்  வெற்றி பெற்ற மாநிலத்தை கம்யூனிஸ்ட் கட்சி ஆளுவதாக கதைப்பார்கள். உண்மையில் வலது இடதுகள் தங்கள் ஆளும் மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கொள்கைகளில் ஒன்றைக்கூட நிறைவேற்றி இருந்ததில்லை.

இப்படிபட்ட ஓட்டுபொறுக்கிகளான வலது.இடதை. கம்யூனிஸ்ட் கட்சி என்று மேற்படியாளர்கள் எழுதுவதும்,பேசுவதும், இன்று நேற்று அல்ல. பிரிட்டிஷ்க் காரன் ஆண்ட காலத்திலிருந்து அவனிடமிருந்து பெற்றதாக சொல்லப்படும் சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து இன்று வரை  ,  பொய்யிலே புரண்டு, பொய்யையே எழுதி வருகிறார்கள்.

புரட்சியின் மூலமே, சமூக மாற்றத்தை உருவாக்க முடியும் என்று அனுபவ பூர்வாமாக எழுதியும் பேசியும்,மக்கள் திரள்பாதையின்மூலம் பிரச்சாரம் செய்து வரும் நக்சலபாரிகள் தலைமையில் இயங்கும் மக்கள்திரள் அமைப்புகள் எல்லாம் தீவிரவாத அமைப்புகள் என்று முத்திரை குத்த தயங்காதவர்கள், அவர்களின் செய்திகளை இரட்டிப்பு செய்ய தவறாதவர்கள்.

இவர்களின் மஞ்சள் காமாலைக் கண்ணுக்கு ஒரு எடுத்துக்காட்டுதான. “பணத்தில் புரண்ட தோழர்” என்ற செய்தி.

எவன் தோழன்,யார் தோழர்.,டாஸ்மாக்கிலே சாரயம் குடிப்பவனெல்லாம் தோழரா..?,   ரன்னுக்கும் கந்துக்கும் வட்டிக்கு விடபவனெல்லாம் தோழரா..?கம்யூனிசஆசான்கள் சொன்ன தத்துவங்களை மறுத்து திரித்து ஓடடு பிச்சை எடுப்பவனெல்லாம் தோழரா...?? அவன் நடத்தும் கட்சிக்கு பெயர் கம்யூனிஸ்டா............???? ஊரை அடித்து பணம் சேர்த்து மெத்தையில் படுத்து புரண்டவனெல்லாம் தோழனா.....? ஆண் என்று குறிப்பிடுவதற்கும்.பெண் என்று கறிப்பிடுவதற்கும் ,ரெண்டும் கெட்டவர்களை குறிப்பிடுவதற்கும் ஒரு அடையாளம் இருக்கிறது. இந்த வலது இடதுகளுக்கு என்ன அடையாளம் இருக்கிறது.

உழைக்கும் மக்களின் பண்பாட்டு விதிமுறைகளை கடைபிடித்து  தவரும்பட்சத்தில் விமர்சனம், சுயவிமர்சனம் செய்து தவறுகளை திருத்தி ,உழைக்கும் மக்களான பாட்டாளிகளுக்காக தன்வாழ்வை தியாகம் செய்து  பொதுவுடமை சமுதாயம் அமைவதற்க்காக இடைவிடாமல் போராடி பணி செய்து வருபவரே,தோழர்.

இந்தியாவில் இருக்கின்ற வலது இடதுகள்.கம்யூனிஸ்ட் என்று சொல்வதற்கே அருகதையற்றவர்கள். போலிகள் என்று அவர்களின் சொல்லையும் செயலையும் வைத்தே, பலமுறை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தி வந்திருக்கின்றன. நக்சல்பார்களின் தலைமையிலான மக்கள் திரள் அமைப்புகள். போலிகளும், அம்பலப்பட்டு,நாறிப்போனாலும்,தங்கள் கட்சியின் பெயரை மாற்றிக் கொளவதாக இல்லை.

 இந்திய பாராளுமன்ற பன்றித்தொழுவத்தில் தாங்களும் ஒரு பன்னியாக படுத்து புரள்வதற்க்காகத்தான்  மார்கஸ்,லெனினைக் காட்டி.ஒட்டுப்பிச்சை பாத்திரத்தை ஏந்தி மாநிலத்திற்கு கொள்கை.தெருவுக்கு ஒரு கோட்பாடுன்னு பொய்யான வாக்குறுதிகளை கூறி மற்ற கட்சிகளைப்போல் பாமர மக்களை எமாற்றி வருகிறார்கள்.

இது எல்லா களவானி முதலாளி பத்திரிகை காரன்களுக்கும் தெரியாமல் இல்லை..இப்படி ஏமாற்றி வெற்றி பெற்று பதவிசுகம் அடைந்த பல பன்னிகளில்  ஒன்றைத்தான்.

கொள்ளையடித்த,“பணத்தில் புரண்ட தோழர்”என்று விளித்து , செங்கொடி ஏந்திய தோழர் செய்ததாக எழுதி கடை பரப்பியிருக்கிறார்கள். அவர்களே !சொல்கின்ற இந்திய ஜனநாயகத்தின் நாண்காவது தூணுக்கு அருகதையற்றவர்கள்.

தூங்கிறவனை எழுப்பி விடலாம். தூங்குகின்ற மாதிரி நடிப்பவனை எழுப்பிவிட முடியுமா????????? “முடியும் என்பதுதான் உழைக்கும் மக்களின் பண்பாட்டில் செங்கொடி ஏந்திய செம்படையின் வரலாறு...




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...