பக்கங்கள்

Wednesday, October 23, 2013

போதையில் தப்பிக்க மறந்த தம்பதி......!!
தமிழ்நாட்டில் காவேரி பாக்கம் என்ற ஊர், அந்த ஊருக்கு அடுத்த ஊர் அய்யம்பேட்டைசேரியை ச் சேர்ந்தவர் விஜயன். இவருடைய மனைவி வள்ளியம்மாள்.

இவர்கள் இருவரும் ஒருநாள் டாஸ்மாக்கின் மீது ஆசைப்பட்டனர். அந்த ஆசையை பூர்த்தி செய்வதற்க்காக,தங்கள் இருவருடன் மேலும் இருவரை சேர்த்துக்கொண்டு கடப்பாரையுடன் இரவில்  டாஸ்மாக் கடைக்கு சென்றனர்

டாஸ்மாக் கடைக்கு அருகில் சென்றவர்கள். ஏற்கனவே,கடையில் பெரிய பூட்டு போட்டு பூட்டியிருப்பதை அறிந்திருந்ததால, கொண்டுவந்த கடப்பாறையைக் கொண்டு டாஸ்மாக் கடையில துளையிட்டனர்.

துளை வழியாக அங்கியிருந்த 24 மது பாட்டில்களையும் எடுத்தனர். 24 மது பாட்டில்கள் கிடைத்த சந்தோசத்தில். மது பாட்டில்களை கணவனும் மனைவியுமாக போட்டி போட்டு காலி செய்தனர்.

இதனால் போதை மயக்கத்தில் சந்தோசமாக அங்கயே படுத்துவிட்டனர். இவர்களுடன்  வந்த மற்ற இருவர்கள் தமபதிகளுக்கு இடையூறு கொடுக்காமல் அங்கிருந்து  நழுவி  விட்டனர்.

காலையில் சூரியன் உதித்தது.  தம்பதிகள் இருவரும் போதை தெளியாமல் படுத்திருந்தனர். அவ்வழியே சென்ற அவ்வூர்க்காரர்கள் தம்பதிகள் மேல் இரக்கம் கொண்டு பிடித்து  வைத்துக் கொண்டு போதையை தெளிய வைத்தனர்.

செய்தி அறிந்து அலுவலக நேரத்தில் டாஸ்மாக்கின் சூப்பர்வைசர் வந்தார். பூட்டை திறந்தார், பாட்டில்களின் ஸ்டாக்கை சரிபார்த்தார். அதில் 15 ஆயிரம் மதிப்புள்ள 171 பாட்டில்கள் குறைவதாகவும். கல்லாவில் இருந்த 1.500 ரூபாயும் காணாமல் போனதாகவும் புகார் செய்தார்.

புகாரை பெற்ற போலீசு,பழைய குற்றவாளிகளையும்,ஏப்ப.சாப்பைகளையும் தேடி அலையாமல் நோகாமல் நொடுகாமல் “போதையில் தப்பிக்க மறந்த தம்பதிகளை கைது செய்தது.

போதை தெளிந்ததும் அந்த தம்பதிகளால் தப்பிக்க முடியவில்லை.......

7 comments :

 1. நோகாம நொங்கு எடுக்க நினைத்த தம்பதியர் ,இப்படி போலீசை நோகாம நொங்கு எடுக்க வச்சிட்டாங்களே !
  த,ம 1

  ReplyDelete
 2. நோகாமல் நொங்கு எடுக்க வந்த தம்பதியரை ,போலீசார் நோகாமல் நொங்கு எடுத்து விட்டார்கள் !
  த .ம.1

  ReplyDelete
 3. பங்கு கொடுத்தால், நொங்கு எடுப்பதிலிருந்து தப்பிக்லாம்னு ஒரு விதி இருக்கு சார்.

  ReplyDelete
 4. இவங்கதான் உண்மையான குடிம்பத்தலைவர் , குடிம்பத்தலைவி . வாழ்க சனநாயகம் .

  இருந்தாலும் போலிசாரின் தேடல் ஆர்வத்தைப்பாராட்டிய ஆகவேண்டும் .

  தம+

  ReplyDelete
 5. ரெம்பவும் பாராட்டாதீங்க...... அந்த மப்பிலேயே தேடுறத மறந்துடுவாங்க.. திரு. மகேஷ் அவர்களே!!

  ReplyDelete
 6. அச்சச்சோ ! எவ்வளவு பெரிய தேசியக்கடமை ஆற்றியிருக்கிறார்கள் . அவர்களை ஒருவார்த்தையாவது புகழவேண்டாமா அண்ணா ?

  (அண்ணா . இடையூறுக்கு மன்னிக்கவும் . என் பெயர் மெக்னேஷ் .)

  ReplyDelete
 7. நல்லது.. திரு.மெக்னேஷ் ...அப்படியே ஆகட்டும்..

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com