பகத்சிங்கை தூக்கில் போட நாள் குறித்த நல்லவரைப் பற்றி......
மக்களை சுட்டுப்பொசுக்கு அது தான் உனது கடமை எனவே கடமையை செய் என்று வெள்ளைக்கார துரையை போல சிப்பாய்களுக்கு கட்டளையிட்ட இந்த அகிம்சா மூர்த்தி தான் பகத் சிங்கைத் தூக்கிலிட இர்வின் பிரபுவுக்கு நாள் குறித்துக் கொடுத்தார். அதாவது பகத் சிங்கைத் தூக்கிலிடுவதாக இருந்தால் லாகூர் மாநாட்டிற்கு முன்பே தூக்கிலிட்டு விடுமாறு  இர்வினுக்கு கடிதம் எழுதியவர் தான் இந்த பாபுஜி. இந்த சம்பவத்தை காந்தியின் முதல் வாழ்க்கை வரலாறு நூலை எழுதிய பட்டாபி சீதாராமையா (காங்கிரஸ்) (காந்தியால் நேதாஜியை எதிர்த்து காங்கிரஸ் தலைமைக்கு களமிறக்கப்பட்டவர்) தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். இந்த செய்தியை அறிந்த பஞ்சாப் மக்கள் காந்தியை எதிர்த்து பல ஆர்ப்பாட்டங்களை  நடத்தினர். காந்திக்கெதிராக நடந்த இந்த ஒவ்வொரு ஆர்ப்பாட்டங்களிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து இர்வின் கீழ்கண்டவாறு கூறினார்
” மக்கள் காந்தியை உடனடியாக ஒழித்துக்கட்ட,பலாத்காரமாக நசுக்க ஆயத்தமாயிருந்தனர்” . (ஆதாரம்: Earl Of Birhenhead P. 305).
நன்றி!! செங்கொடி,புமா.இமு.