பக்கங்கள்

Tuesday, November 05, 2013

ஒன் பாட்டி போரும்....அதன்பிற கூத்துகளும்..........நடந்தகதை!!!

ஆங்கிலேயனை எதிர்த்து போரிட்டு மாய்ந்த விடுதலை வீரர்களையெல்லாம் சாதித் தலைவராகவும், சாதிவெறி பிடித்து கட்டபஞ்சாயத்து செய்த ஊள்ளுர் தலைவரெல்லாம் தேசிய தலைவராகவும் மாற்றி விட்ட  இந்தக் காலத்தில் சாதிவெறியின் குல தெய்வத்தின் பூஜைக்காக சிவகங்கை.இராமநாதபரம் மாவட்டங்களில் ஒன் பாட்டி போர் தடை போடப்பட்டுருந்த நேரம்

அந்த ஒன் பாட்டி போர் போடப்பட்டுருந்த நாட்களில் சிவகுமார் என்பவரும்   காசுபாண்டி என்ற பெயரும் கொண்ட வருமான பள்ளிப் பருவத்து நண்பர்களான இருவரும் ஒரு பஸ் நிறுத்தத்தில் சந்தித்து  தங்கள் தங்கள் வாழ்நிலையைப்பற்றியும் வேலை நிலைமைகளைப் பற்றியும் தங்களுடன் படித்த மற்ற நண்பர்களைப்பற்றியும்.தீபாவளிக்காக  வழங்கப்பட்ட போனசு தொகைகளைப்பற்றியம் அலாவலவிக் கொண்டு இருந்தனர்.

நண்பர்களின் பேச்சு,ரெம்ப சந்தோசமாகவும்.நகைச்சுவையாகவும் பழைய நிணைவுகளை அசை போடுவதாகவும் இருந்தது. நண்பர்கள் இருவரும் சிரித்து பேசிக்கொண்டு இருப்பதை பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்த  மற்ற சிலரும் மலரும் நினைவாக கேட்டு ரசித்துக் கொண்டு இருந்தனர்

அப்போது, காக்கி சட்டை அணிந்த ஒரு உருவம். பைக்கின் ஆக்ஸிலேட்டரை திருகியதால் ஏற்பட்ட சத்தத்தோடு அவர்களுக்கு அருகில் வந்தது. நண்பர்கள் பைக் சத்தத்தைக்கேட்டு தங்கள் பேச்சை நிறுத்தி அந்த காக்கி சட்டை உருவத்தை பார்த்தனர்.

வந்து நின்ற காக்கி சட்டை உருவம், இவர்களைப் பார்த்து ஒருமையில்  உருமியது.. பக்கத்தில் நின்றவர்களை கடிக்காத குறையாக குலைத்தது.

திடுக்கிட்ட நண்பர்கள் இருவரும்  வந்து நின்ற அந்த உருவத்துக்கு   வணக்கம் செய்தனர்.

அவர்களின் வணக்கத்தை ஏற்றுக் கொள்ளாத அந்த உருவம். பைக்கின் சத்தத்தை குறைத்து உறுமியபடி அவர்களின் பெயர்,ஊர்.தொழில் சாதி முதலானவற்றை விசாரித்தது.

நண்பர்கள் இருவரும் தத்தம் சாதிகளைத்தவிர மற்ற விபரங்களை சொன்னார்கள். அதில் திருப்தி அடையாத  தீராத அந்த உருவம், பக்கத்தில நின்ற அப்பாவிகளை  விரட்டியது.

விரட்டுபட்டவர்கள் தாங்கள் இந்தஊரைச் சேர்ந்தவர்கள் என்றும் தீபாவளி க்காக பொருட்கள்  வாங்கிக் கொண்டு ஊர் செல்வதற்க்காக பஸ் நிறுத்தத்தில் நிற்பதாக பணிந்து சமர்பித்தார்கள்.

அந்தப் பணிவால் ஆத்திரம் குறைந்த அந்த உருவம்,தான்  சப் ஆய்வாளர் என்று சொல்லாமல் வெளிப்படுத்தி, அந்த இரண்டு நண்பர்களிடம் தோரனையாக பேசியது.

 ஒன்பாட்டிபோர் போடப்பட்டு இருக்கிறது. இரண்டு பேர்,மூன்று பேர் ,இப்படி கூட்டமாக நிற்கக்கூடாது என்பது உங்களுக்கு தெரியாதா என்று கேட்டுவிட்டு நண்பர்களை எச்சரித்தது.

 ஆட்டோ எதுவும் வரவில்லை, வரவேண்டிய பஸ்சும் வரவில்லை. பஸ்சுக்காகத்தான் நிற்கிறோம் என்றார்கள் நண்பர்கள் இருவரும்

சமாதானமடையாத அந்த உருவம் நண்பரகள்   இருவரையும்  சேர்ந்து நிற்பதை தடுத்து தனித்தனியாக நிற்க உத்தவிட்டது. மற்றவர்களையும்
அப்படியே தனித்தனியாக கழட்டிவிட்டது.

கடைசியாக அந்த உருவம் தன் கையிலிருந்த வயர்லெஸ் ஒலி பேசியுடன் இரைச்சலாக கத்தியபடியே அவ்விடத்தை விட்டு நகன்றது.

அந்த காக்கி சட்டை உருவம் அவர்கள் கண்களிலிருந்து வரைக்கும் அந்த பஸ் நிறுத்தம் அமைதியாக இருந்தது.

சாதிவெறி குல தெய்வ பூஜை கொண்டாட்த்துக்காக ஒன்பாட்டிபோர்(144) தடையுத்தரவு போடப்பட்டு இருப்பதால்,  சாதிவெறி கொண்டாட்த்தில் அசாம்பாவிதம் நடக்காமல்இருப்பதற்கும். துப்பாக்கிசூடு நடைபெறுவதை தவிர்ப்பதற்க்காகவும், அரசு சார்பிலும் சாதிவெறி கொண்டாட்டம் நடைபெறு வதால்  அந்த கொண்டாட்த்தில் அமைச்சர் பெரு மக்களும், அவர்களைச் சார்ந்து எதிர்க்கட்சி தலைகளும், அதற்குப்பின் சாதிவெறி.மதவெறி அமைப்பகளும் விழாவில் கலந்து கொள்வதால்................

அவர்களை பாதுகாப்பதற்கும் விழாவை  அமைதியாக நடப்பதற்குமாக, தென் மண்டல ஐ.ஜி உள்பட,ஆறு ஐ.ஜிக்களும், எட்டு எஸ்பிக்களும், அய்ந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலிஸ்காரர்களும் பாது காப்பில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

இவர்களோடு, ஆளில்லாத உளவு விமானங்களும்,பாரா மோட்டார் கேமரா மூலமும் கண்காணிப்பு ஏற்ப்படுத்தி  தூள் கிளப்பிக் கொண்டிருந்தனர்.

இத்தோடு சாதிவெறியின் மாவட்ட முழுவதும் ஒன்பாட்டி தடையுத்தரவு அமுல் படுத்திவிட்டு, சாதிவெறி பக்தர்கள்  வாடகை வாகனங்களில் வருவதற்கு தடையத்தரவு இருப்பதால் சாதிவெறி குலதெய்வத்தின் சமாதியான இடத்துக்கு சிறப்பு பஸ் வசதியும் இயக்கப்பட்டன.

இவ்வளவு கெடுபிடிகளுடன் சாதிவெறி குல தெய்வ கொண்டாட்டம் நடைபெறுவதால் அந்தந்த மாவட்ட எல்லைகளில்  சோதனை சாவடி திறக்கப்பட்டு, அங்கும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு பட்டய கிளப்பிக் கொண்டு கண்காணிக்கப்பட்டன.

இப்படி தூள்பரப்பி பட்டய கிளப்பி ஒன்பாட்டிபோரை அமுல் படுத்தி கண்காணித்து கொண்டு இருக்கும்பொழுது............

அம்மன்பட்டியை சேர்ந்த  ஐநூறு சாதிவெறி பக்தர்கள், ஒன்பாட்டிபோரை மீறி  நீண்ட தடிக்கம்புகள் சகிதமாக போலீஸ் தடையை மீறியும் சில போலீசை தாக்கி விட்டும்  கமுதி வழியாக தங்கள் நடைபயணப்போரை தொடங்கி விட்டார்கள்.

இதனால் அரண்டு பயந்து போன எஸ்பிக்கள்,ஏஸ்பிக்கள், உயர் போலீசு அதிகாரிகள், நடைபயண பக்தர்களை தடுத்து நிறுத்தி, ஒன்பாட்டி போரை விளக்கி இரண்டு பேருக்கு மேல்,அதுவும் தடிக்கம்புகளுடன் செல்லக்கூடாது என்றும் அதனால் பஸ்ஸில் செல்ல அறிவுறுத்தினர்.

ஒன்பாட்டிபோருக்காக எங்களை பஸ்ஸில் போகச் சொல்வதா ..? என்று கோபம் கொண்ட  குல தெய்வத்தின் பக்தர்கள். பஸ்ஸில் போகச் சொல்வதை கண்டித்து மறியல் செய்தனர். மறியலில் பெருமாள் தெவன்பட்டி போன்ற அருகருகே உள்ள ஊரின் குலதெய்வ பக்தர்களும் சேர்ந்து கொள்ள சாதிவெறி பக்தர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது.

உடனே.ஒன்பாட்டிபோரை அமுல்படுத்தும் அதிகாரிகள் யார் யாருக்கோ போன் பேசினர், பிறகு அவர்களின் உத்தரவுபடி, அசம்பாவிதத்தை தடுக்கும் முகமாக ஒன்பாட்டிபோரை மறந்து,பக்தர்களை நடைபயணமாக செல்ல அனுமதித்தனர்.

சாதிவெறி குலதெய்வத்தின் சமாதி  இருக்கும் இடத்தி்ல் அய்ந்துஆயிரம் போலீசும்,தென் மாவட்டங்களில் இருப்பதைந்தாயிரம் போலீசையும் பாது காப்பு பணியில் ஈடுபடுத்தி உள்ளதால்.........

அரண்டு.மிரண்டு போன  நடப்பு மற்றும் வருங்கால சாதிவெறித் தலைகள் எல்லாம் எதற்கு வம்பு பின்னாடி பாத்துக்கிறலாம் என்ற ரீதியில் அந்தந்த மாவட்ட,.மாநகராட்சி,பேரூராட்சி,ஊராட்சி நகரங்களில் நிறுவப்பட்டுள்ள சாதிவெறி குல தெய்வத்தின் சிலைகளையே சமாதியின் வழிபாட்டுத்தலமாக மாற்றி,போலீசு பாதுகாப்போடு பால்குடம்,வேல்குடம்,காவடி,முளைப்பாரி   மேளதாளங்கள் போன்ற சகல அம்சங்களுடன் சென்று கொண்டாடினார்கள்.

மேற்பட்ட சம்பவங்களுடன், அமைச்சர் பெரு மக்களின் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதும்,  முப்படை தளபதியை வரவேற்க சென்றவர்கள் மீது கல்லெறியபட்டதும் புரடசி புயலும் தன்னை பின் தொடர்ந்து வந்த புரட்சிப்படையை தடுத்து தன் படையை திருப்பி அனுப்பியது, மோடியின் அல்லக்கைகள்,தேசிய விழவாக கொண்டாட போவதாக சவுடால் விட்டது போன்ற எல்லா களக்காட்சிகளையும் அனைத்துவித  தினசரி பத்திரிகைகளிலும்,  எல்லா  தொலைக்காட்சிகளிலும் நேரடி யாகவும்    ஒளி-ஒலி பரப்பு செய்யப்பட்டன.

மேற்படி ஒன்பாட்டி போர் களக்காடசிகளை.  படித்தும் பார்த்தும் இருந்த இரு நண்பர்களான ,காசுப்பாண்டியும் சிவக்குமாரும் ,பஸ் நிறுத்தத்தில் ஒரு காக்கி சட்டை உருவும் செய்த அலப்பரையை நிணைத்து கைப்பேசியில்   பேசிக் கொண்டனர்.

“ஒன் பாட்டி போரின் ” போர்களக்காட்சியெல்லாம் பாத்து வெறுத்துப் போனதாக சொல்லி, அலப்பரை செய்த உருவத்தைப்பற்றி தகவல் கேட்டார் காசப்பாண்டி..

அதற்கு சிவகுமார்சொன்னார். அது எவனா...இருந்துட்டு போகட்டும் “ போலீசே சாதிவெறி போலீசாகத்தான் இருக்குதுன்னு வினவு தளத்துல படித்த கட்டுரை எடுத்துக்காட்ட, பரமக்குடி சம்பவத்தையும் ஒன்பாட்டி போர் சம்பவத்தையும் ஒப்பிட்டு பார்க்கச் சொன்னார் சிவக்குமார்.

கடைசியாக, காசுபாண்டி சொன்னார். நவம்பர்புரட்சிதினவிழா, கூட்டத்துக்கு வருமாறு ஒரு தோழரு சொன்னாரு, நீயும்வா,நாம ரெண்டு பேரும் போவோம். அங்கபோயி புரட்சிகர உணர்வை பெற்று வருவோம்  தவறவிடவெண்டாம்  வா..என்றார்

கண்டிப்பா வர்ரேன். நீ எங்க வீட்டுக்கு வந்துடு சேர்ந்தே போவோம்.... என்று பதில் சொன்னார் சிவக்குமார்.

No comments :

Post a Comment

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com