உலகின் ஜனநாயக நாடுகளாக பீத்திக் கொள்ளும் அமெரிக்காவும் இந்தியாவும்
தூதர் தேவஆனி யின் மறுபக்கம் எதுவாக இருந்தாலும்,
பணிப்பெண் சங்கீதா சிஐஏ எஜென்டாகவே இருந்தாலும்
உலகின் முதல் ஜனநாயக நாடான அமெரிக்கா, பணம்,பதவி,அந்தஸ்து,இனம் ஆகியவற்றுக்கு மசியாமல்,குற்றம் சாட்டப்பட்டவர் எம்மாம் பெரிய்ய்ய ஆளாக இருந்தாலும் தன் நாட்டு சட்டதிட்டபடிதான் நடவடிக்கை எடுக்கிறதா....???
உலகில் பெரிய்ய்ய்யா.....ஜனநாயக நாடான இந்தியா, பிரதமரே.........ஆனாலும், உச்சி குடுமி மன்ற நீதிபதியே ஆனாலும் கஞ்சிக்கு வழியில்லாமல் வாடி வதங்கி வீதியோரம் படுத்திருக்கும் பிச்சைக்காரனே ஆனாலும் “ சட்டத்தின் முன் அனைவரும் சமம.” என்ற தன் நாட்டு சட்டதிட்டபடிதான் நடவடிக்கை எடுக்கிறதா..........???
உலகில் முதல் ஜனநாயக நாடும்,பெரிய்ய்ய..ஜனநாயக நாடும, எந்தவித சுயலாப நோக்கமின்றி,பிளாக்மெயில் திட்டம் எதுவுமில்லாமல் உண்மையாக நேர்மையாக நடவடிக்கை எடுக்கும் முதல்நாடு அமெரிக்காவா???இந்தியாவா..?
முதலாளிகளின் ஜனநாயகத்தை உச்சானி கொம்பில் தூக்கி வைத்து உச்சா கொட்டி பஜனை பாடும் அறிஞர்களும்,வல்லுநர்களும்,தாசானு தாசர்களும் முதலாளிகளின் ஜனநாயகத்தை ஏற்றி போற்றி காக்கும் அத்துணை தூண்களும் பதில் சொல்லனும் அமெரிக்காவா? இந்தியாவான்னு??
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் கருத்துரை