செவ்வாய் 24 2013

தனுஷ்கோடிக்கு மேளம் கொட்டும் பத்திரிக்கை வியாபாரிகள்..........




பிரதமர் வேட்பாளரை, தேர்தல் வருவதற்கு ரெண்டு வருசத்துக்கு முன்னாடியே அறிவித்து கல்லா கட்ட முயலும் ஒரு கட்சியான பாரதீய கட்சியின்

தமிழக தலைவரான பொன்னான ராதாவின் கிருஷ்ணன் . விதைத்தா முளைக்காமலா போகும் என்ற ரீதியில்.

அடுத்த பிரதமர் மோடிதான் என்றும், கூடவே மோடி பிரதமரானால் இராமேஸ்ஸ்வரம் புனித தீவாக அறிவிக்கப்படும்.என்ற வாயோடு

மத்தியில் பா...ஜ ஆட்சிக்கு வந்தால்..தனுஷ்கோடிக்கு ரயில் விடப்படும்.மற்றும் நான்குவழிச்சாலை போக்குவரத்து வசதிகள் ஏற்ப்படுத்தப் படும் என்று அள்ளி வீசியவுடனே..................

தமில்நாட்டு செய்தி பத்திரிக்கை நிறுவன வியாபாரிகளெல்லாம் கனஜேராக சேர்ந்து “ 49 ஆண்டுகளாகியும் புதுப்பொழிவு பெறாத தனுஷ்கோடி” என்றும்

“நினைவலைகள்” என்றும்

“இரவில் சூழ்ந்த கொடுங்கதை” என்றும்  தங்களோட பத்திரிக்கையில கொ்ட்டோ கொட்டுன்னு  மேளம் கொட்டிட்டாங்க.........

ஏற்கனவே, சென்னை டூ செங்கோட்டை எக்ஸ்பிரஸ் தாயராக இருக்குது

 இதுல வேற செங்கோட்டை டூ தனுஷ்கோடின்னு எக்ஸ்பிரஸ் விடப் போறாங்க..............

மோட்சத்துக்கு போறவங்க எல்லாம் தயாரா இருங்கன்னு சொல்லாதது ஒன்னுதான்.

 

1 கருத்து:

  1. B J P யாவது பரவாயில்ல. மத்த கட்சிக்ளில் பிறக்கும் போதே வருங்கால முதல்வரே என்றுதான் தொடங்குகிறார்கள்.

    பலபேர் ராமர் அதுவழியாத்தான் இலங்கை போனார் என்று நம்புகிறார்கள். இது மக்களின் நம்பிக்கை சார்ந்த விசயம். சிலர் மூட நம்பிக்கை என்று சொல்வார்கள்.

    ஆனால் உலகம் மணிக்கு ஒரு முறை மாறிக்கொண்டிருக்கிறது என்று உணர்பவர்கள் உயர்கிறார்கள். அன்று பாரதி சொன்னார் அண்ணா சொன்னார் என்று பேசுபவர்களும் பகுத்தறிந்தா பேசுகிறார்கள்

    கோபாலன்

    மக்கள் பகுத்தறிவுடன் சிரிக்க எனது பதிவு கீழே :

    kgopaalan.blogspot.in

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....