பக்கங்கள்

Thursday, January 23, 2014

62 நாற்காலிக்கு 8ஆயிரம் பேர் போட்டி......இது .ரெம்ப கம்மிங்க......மதுரை காமராஜர் பல்கலை கழக இளநிலை உதவியாளர் பணிக்கான 62 இடங்களுக்கு 14 ஆயிரம் விண்ணப்பித்து, அதில் 6 ஆயிரத்தை வடிகட்டி 8ஆயிரம் பேருக்கு தேர்வு நடத்தி, அந்த 8ஆயிரம் பேரில் 62 பேரை  தேர்வு செய்து  அவர்களுக்குத்தான் நாற்காலி கொடுப்பாங்களாம்.

இவுக தேர்வு முறையினால வேலை இல்லா திண்டாட்டம் வேகமாக குறைஞ்சு தமிழ்நாடு மொதல் மாநிலமா விளங்கிடும்.

ஏற்கனவே,முற்போக்கு சிந்தனையும் நேர்மை திறனும் கொண்ட மு.வ., தெ.பொ.மீ., போன்ற அறிஞர்கள் அமர்ந்திருந்த பதவிகளில் முறை கேடான வழியில் துனை வேந்தரான கல்யாணி அம்மா மீது

ஊழல் புகார் முறைகேடுகளில் விசாரனை நடத்து என்றும் அவரை பதவி நீக்கம் செய் என்றும், கல்யாணி அவர்களால் பழிவாங்கப்பட்டவர்களை நிபந்தனையின்றி பணியில் அமர்த்து என்று மனித உரிமை பாதுகாப்பு  மையம்  போன்ற பல அமைப்புகள் கள்த்தில இறங்கி போராடிக்கொண்டு இருக்கிறது.

இந்த ல்ச்சணத்துல 62 சீட்டுக்கு 8 ஆயிரம் பேர் போட்டி, பல்கலைகழகம்  ஒலக வரிசையில்  15 வது இருப்பதாக கல்யாணி அம்மா சொல்லிகிட்டு இருக்கு  இனி என்ன, 15யை தாண்டி, சீக்கரமாகவே   முதல்  ரேங்குக்கு வந்திரும் சந்தேகம் கொள்ளல் வேண்டாம்..............

No comments :

Post a Comment

”வினவு” கற்றுக் கொடுத்த அனுபவத்தின் மூலம் ... திட்டுபவர்கள் குறித்து குறைபடத்தேவையில்லை என்பதால்... கருத்துரை மதிப்பாய்வு நீக்கப்படுகிறது.. இனி.. புழுதிவாரி தூற்றுவோர்கள் தூற்றிக் கொள்க.........!!