பக்கங்கள்

Monday, March 31, 2014

ஒரிஜினல் அக்மார்க குடிமக்கள் சார்பாக வன்மையாக...கண்டிக்கிறோம்....???

படம்.ஜெய நித்திய கல்யானி

இதனால் சகல பெரிய கட்சிகளுக்கும் சிறிய கட்சிகளுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்

சமீபத்தில் மதுரை ரிங் ரோட்டில் நடந்த  தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்ட வாக்காளர்களுக்கு பேசிய படி பணம் கொடுக்கப் படவில்லை, அதோடு ஒருத்தர்க்கு ஒரு குவார்ட்ம் கொடுக்கப்படவில்லை பிரியாணியும் வழங்கப்படவில்லை .

பிரியாணியை சாப்பிட்டு அறியாதவர்களிடம்  வேண்டுமென்றால் குஸ்காவுடன் ரெண்டு முட்டையை சேர்த்து  பிரியாணி என்று நம்ப வைக்கலாம்.

அனால் எங்களைப் போன்று சென்ற தேர்தலில் பிரியாணி சாப்பிட்டு அனுபவப் பட்டவர்களிடமே குஸ்காவை பிரியாணி என்று ஏமாற்றினார்கள்.

சென்ற தேர்தலில் வழங்குவதாக சொன்ன தொகையில் பாதியாவது வழங்கப்பட்டது. இந்தத்தடவை அதுவும் வழங்கப்படவில்லை.

சென்ற தெர்தலில் ஒருத்தருக்கு ஒரு குவார்ட் வழங்கப்பட்டது. இந்தத்தேர்தலில் ஒரு குவார்ட்டை பல  பெக்காக பலருக்கு வழங்கப்பட்டது.
கொடுத்த சரக்கும் தரமானதாக இல்லை.

தேர்தல் கமிசனிடம் கணக்கு காட்டுவதற்க்காக என்று சொல்லி  இப்படி ஏமாற்றலாமா...??நாட்டை வெற்றி பாதையில் கொண்டு செல்லும் அரசியல் கட்சிகளுக்கு இது நல்லதல்ல.......!!.....

குஸ்காவை பிரியாணி என்று ஏமாற்றியதையும் ஒருத்தருக்கு ஒரு குவாட்டர் வழங்காதததையும்  வெயிலில் அவதிப்பட்டதை  கண்டும் பணம் கொடுக்காமல்  ஏமாற்றியதையும் “கூலிக்கு கூட்டம் சேருவோர் சங்கம் சார்பாகவும், ஒரிஜினல் அக்மார்க் குடிமக்கள் சார்பாகவும் வண்மையாக கண்டிக்கிறோம். 

2 comments :

  1. கண்டிப்பாக கண்டித்தே ஆகவேண்டும் ,ஒரு நியாயம் வேண்டாமா ?ஜெயிக்கிறதுக்கு முன்னாடியே இப்படி ஏமாற்றலாமா ?
    த ம 1

    ReplyDelete
  2. ஒத்திகை பார்க்குறாங்க தலைவா,,,,,

    ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com