பக்கங்கள்

Thursday, March 20, 2014

சாதிவெறியர்களின் வக்கீரமான கொடூரங்கள்................

ta.wikipedia.org -
பெண் நிழலில் வாழ்ந்து போ…
OlehArulezhilan


தமிழ்காரன்.
மகிழ்நன் பா.ம-ன் படம்.
மகிழ்நன் பா.ம சேர்த்துள்ளார் — Jagan Michael மற்றும் 7 பேர் பேர்களுடன்
காவி மதவாத கும்பல்கள் நம் எதிரிகள்.

கொஞ்சமாவது சுயமரியாதை என்பது இருந்தால்...

இந்த கும்பலுக்கு வாக்களியாதீர்கள்...

தமிழக மண்ணில் வேர் பாய்ச்ச விடாதீர்கள்.
=========================================

எத்தனைபேருக்கு தெரியும் இந்த கொடுமை ?? அன்று குமரி மண்ணின் மைந்தர்களை( இன்று இந்து என கூறி கொள்ளும் மதம்) அடிமை படுத்தியது!! உறவுகளே சிந்தியுங்கள்!!

ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளில் ஜன்மி சம்பிரதாயமும், 10 மற்றும் 11 ம் நூற்றான்டுகளில் ஆரியப் பார்ப்பனர்களும் (நம்பூதிரிகள்) ஆதிக்கம் சேர நாட்டில் ஓங்கத் தொடங்கிய வேளையில் சாதிக் கட்டுப்பாடுகள் உருவெடுத்தன. 12 ம் நூற்றாண்டில் இந்தக் கட்டுப்பாடுகள் ஜென்மி சம்பிரதாயத்தின் உத்வேகத்தால் அதிகரித்து, மேல் சாதி இந்து என்றும், கீழ் சாதி இந்து என்றும் பாகுபாடுகள் உருவாகி காணாமை, நடவாமை, தொடாமை போன்ற சமுதாய முறைகள் உருவாகிற்று.

இந்த தீமைகளில் ஒரு பிரிவு தான்(சாணார் ,புலையர் ,.....) தாழ்த்தப்பட்ட மக்கள் இடுப்புக்கு மேலும், முட்டுக்கு கீழும் ஆடை அணியக்கூடாது என்றக் கட்டுப்பாடு. உயர்ந்த சாதி இந்துக்களின் முன்பு தாழ்த்தப்பட்ட பெண்கள் மறைக்கப்படாத மார்பகங்களுடன்தான் மரியாதை செலுத்த வேண்டும்.

சான்றாக நம்பூதிரிகளின் முன்பு சூத்திர நாயர் பெண்கள் மார்பகங்களை மறைக்க கூடாது, அதே போன்று சாதி வரிசையின் அடிப்படையில் கீழ் சாதி இந்து பெண்கள் அனைவரும் மார்பகங்களை மறைக்காமல் நடமாட வேண்டும் என்பது மரபாகிவிட்டது. இந்த உடைக் கட்டுப்பாட்டை மீறினால் மரணத் தண்டனை விதிக்கப்பட்டது.

தாலி அறுத்தான் சந்தையில் மேலாடை அணிந்து சென்ற பெண்களின்,தாலி அறு தெறிந்தும் ,மேலாடைகள் கிளிதெறிந்தும், மார்பகங்கள் வெட்டி விசப்பட்ட கொடுமைகளும் எத்தனை பேருக்கு தெரியும் ?

நானும் என் அப்பச்சி (தாத்தா)துண்டுகள் கட்டி திரிந்ததை பார்த்தவன் !! நானும் சாதி கொடுமையால் சில உயர் சாதி இல்லத்தில் சிரட்டையில் தண்ணிர் குடித்தவன் !! இந்த நிலையை மறந்து, படித்தோம், சம்பாதிக்கிறோம் என்பதால் வரலாறை மறக்கலாமா ? மீண்டும் இந்த கொடுமை தலை தூக்கிட மதவாத கும்பல்களிடம் எச்சரிக்கையாக இருப்போம் !!

நன்றி : Marshal Nesamony

பெண்  மக்களை மேல் சட்டை கூட அணிய விடாமல்  வக்கிரம் பிடித்த ஆணாதிக்க வெறிக்கும் சாதிவெறிக்கு. உதாரணம்தான் மேலே காணும் படம்.

 சாதிவெறி வாசிகள் ரெம்பவும் கொடூர குணமும் வக்கிர எண்ணமும் கொண்டவர்களாகத்தான் வெ்வவேறு வடிவங்களில்  இன்னமு்ம் இருக்கிறார்கள.

6 comments :

 1. நல்லதொரு எச்சரிக்கை !
  த ம 1

  ReplyDelete
 2. இந்த காதுல கேட்டுட்டு அடுத்த காதுல வெளியே விட்டுடுறாங்களே! ஜீ

  ReplyDelete
 3. சாதி வெறி ஆணாதிக்க திமிர் பிடித்த அத்தனை நாய்களும் ஒழிக. இன்றும் இந்து மதம் வடிவமைத்து கொடுத்த கழிசடை சாதி அடுக்குகளின் பெயரில் அட்டூழியங்கள் தொடர்ந்து நடந்தேறி வருகின்றன. அரசு இயந்திரங்கள் இவைகளை கண்டுகொள்ள மறுக்கின்றன. எனவே தொடர்ந்த விழிப்புணர்வும் எச்சரிக்கையுடன் இருத்தல் அவசியம்.

  பதிவு நிழற்படம் பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 4. இவை மிக வக்கிரமான கொடுமைகள், மாற்றுக் கருத்துக்கிடமில்லை;

  நான் இலங்கையைச் சேர்ந்தவன், அறியாமையால் தான் கேட்கிறேன். இந் நடைமுறை பல நூற்றாண்டுகளுக்கு முன் இருந்துள்ளது. இது இப்போதும் இந்தியாவில் எங்காவது நடைமுறையில் உண்டா?
  ஆபிரிக்க, அமேசன், இந்தோனேசிய , அவுஸ்ரேலியப் பழங்குடி மக்களிடமே மறைந்த இப்பழக்கம்
  இன்னும் இந்தியாவிலுண்டா?
  தெளிவுபடுத்தவும்.
  நம் நாடுகளில் இன்றைய அரசியல்வாதிகளிலும், கட்சிகளிலும் எல்லோருமே அண்ணன் தம்பியாகத்தானே உள்ளனர்.
  எரியும் கொள்ளியில், எப்படி எடுப்பதெனத்தானே இவர்களில் தேர்வு செய்யவேண்டியுள்ளது.

  ReplyDelete
 5. திரு.மாசிலா அவர்களுக்கு அரசு எந்திரமே சாதி வெறியாகத்தான் இருக்கிறது.

  ReplyDelete
 6. திரு.யோகன் அவர்களுக்கு வெவ்வேறு வடிவங்களில் பல வண்ணங்களில் சாதிவெறிக் கொடுமைகள் நடந்த வண்ணம் இருக்கின்றன். சிலதுகள் வெளி வருகின்றன. பலதுகள் வெளியே தெரிய விடுவதில்லை.

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com