பக்கங்கள்

Wednesday, April 02, 2014

ரஜினி வாய்ஸ் கொடுத்தால்..மதுவிலக்கு வருமாம்....
ரஜினியின் முன்னால் பக்தரும் இன்னால் ரசிகருமான ஒருவர் கூறியது.

இந்தத் தேர்தலில் பணமும் பணத்துடன் மதுவும்.மதுவுடன் பிரியாணியும் பிரியாணியுடன் பொய் பிரச்சாரங்களும் பெருகியுள்ளது.

சென்ற தேர்தலுக்கு முந்தின தேர்தலில்  தலைவர் ஒரு வாய்ஸ் கொடுத்தார். தலைவர் கொடுத்த வாய்ஸ்க்கு ஒரு சக்தி இருந்தது. அந்த சக்தியை நாடே பிரதிபலித்தது.

இந்தத் தேர்தலில் தலைவர் மதுவிலக்கு பற்றி வாய்ஸ் கொடுத்தால். அந்த வாய்ஸ்க்கும் சக்தி வந்து நாடே பிரதிபலிக்கும்.

ஏனென்றால், தலைவர் உடல்  நலம் குன்றி எமனிடம் சென்று மீண்டு வந்திருக்கிறார். மீண்டு வந்ததிலிருந்து  .மதுப் பழக்கத்தை அறவே விட்டுவிட்டார். மது அரக்கனின் கொடுமைகள் என்னவென்று தலைவர்க்கு தெரியும்

இதனால். மனிதக் கடவுளான தலைவர் ஒரு வாய்ஸ் கொடுத்தால்.அவர் வாய்ஸை இந்தியா மட்டுமல்ல ஒலகமே கவனிக்கும் அதனால் மதுவிலக்கும் அமலுக்கு வரும் என்றார்  வாதத்தின் வெளிச்சமான வழக்குரைஞர்.

ஆக..ரஜினி வாய்ஸ் மதுவிலக்குக்கா...........கோச்சடையான் படத்துக்கா என்பது இனிமேல்தான்.............????No comments :

Post a Comment

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com