படம்வினவு |
இந்திய ஓட்டு சீட்டு கட்சிகளின் தேர்தல்பாதையான திருடர் பாதையில் வாக்களிக்க விருப்பமில்லை என்ற 49ஒ படிவத்திற்கு மாற்றாக பேப்பர் இல்லாமல்,கையெழுத்து இல்லாமல் ஓட்டு கட்சிகளின் படோபடமான பிரச்சாரம் இல்லாமல் எந்த ஒரு வாக்குறுதி இல்லாமல் வேட்பாளர் களத்தில குதித்திருக்கும் வேட்பாளர் “நோட்டா” என்ற எவருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்ற பொத்தான்தான்.
ஓட்டு பொறுக்கும் அரசியல் கட்சிகளும், ஜனநாயகத் தேர்தல் என்று ஊதி பெருக்கும் ஊடகங்களும்.பத்திரிக்கை தூண்களும் அராஜக தேர்தலை புறக்கணிக்க கோரும் அரசியல் துணிவில்லாத நல்லவர்களுக்கும் சட்டப்பூர்வமான சந்து பொந்துதான் இந்த “நோட்டா” பொத்தான்.
வழக்கம் போலவே, வாக்காளர்கள் நோட்டாவுக்கு வாக்களித்து ஓட்டு சீட்டு ஊழல் கட்சிகளுக்கு நெருக்கடி கொடுத்தால்.சாதி.மத,இன அரசியலுக்கும் கட்சிகளுக்கும் ஒரு முடிவு கட்டிவிடலாம் என்றும், ஊழல் கட்சிகளை ஜனநாயகப் பாதைக்கு திருப்பி விடலாம் என்றும் கதை விடுகிறார்கள்.
சரி அந்த கதைப்படியே வைத்துக் கொண்டாலும் ஓட்டு போடு.....ஓட்டு போடு.......என்று நிமிசத்துக்கு ஒரு தடவை விளம்பரப் படுத்தும் தேர்தல் ஆணையம் ஒப்புக்குக்கூட “நோட்டா”வைப்பத்தி விளம்பரம் செய்வதில்லை....ஏன்?..... இது ஜனநாயகத் தேர்தலை நடத்தும் தேர்தல் ஆணையத்தின் எந்த வகையான லட்சனம்........
ஜனநாயகத் தேர்தல் என்றும் வாக்களிப்பது நமது உரிமை என்றும் பீத்தவது மாதிரி ஊழல் கட்சிகளை திருத்த ஜனநாயகத்தை நிலை நிறுத்த என்பது மாதிரியாகவோ.....அல்லது தேர்தல் ஆணையத்துக்கு தோதான வார்த்தை ஜாலங்களிலோ ”நோட்டா “வை யும் விளம்பர படுத்த வேண்டுமல்லாவா அவர்கள் கூறும இந்திய ஜனநாயகத்தில்................
நல்லா இருக்குதுங்கய்யா உங்க ஞாயம்
உங்கள் கேள்வி சிந்திக்க வைக்கிறது !தேர்தல் கமிசன் செய்யுமா ?
பதிலளிநீக்குத ம 1
சரியானதை கேள்வி கேட்பதுனே மறை ஜீ
பதிலளிநீக்கு