வியாழன் 29 2014

நாட்டுப்பற்று இல்லாத அதிகாரிகள்,,,.!!!



குளோரேட் மூலம் பட்டாசுகள் தயாரிக்கவோ,விற்பனை செய்யவோ கூடாது என்று இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.

அந்தச் சட்டத்தை மீறி குளோரேட் மூலம் தயாரிக்கப்பட்ட சீன பட்டாசுகள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டவைகள் . பறிமுதல் செய்யப்பட்டன.

அப்படி பறிமுதல் செய்யப்பட்ட சீன பட்டாசுகளை முறையாக அழிக்க வேண்டும் என்றும். பறிமுதல் செய்யப்பட்ட சீன பட்டாசு வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டியும் தமிழ்நாடு உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளையில் வழக்கு ஒன்று  தாக்கல் செய்யப்பட்டது.

மேற்படி வழக்கு விசாரனைக்கு வந்த போதுதான் நீதி அரசர்கள் அதிகாரிகளைப் பார்த்து இப்படிக் கேட்டார்கள்.

சீன பட்டாசு இந்தியாவிற்குள் எப்படி வந்தது.? சீன பட்டாசை பறிமுதல் செய்தபின் நடவடிக்கை எடுக்கவில்லையே ஏன்? சம்பந்தபட்டவரை கைது செய்யாதது ஏன்? இந்த விவகாரத்தில் அதிகாரிகளுக்கு நாட்டுப்பற்று வேண்டாமா???  என்று சரமாரியாக கேட்டார்கள்.


கடமைக்கு வேலை செய்யும் அதிகாரிகளால்தான் நீதி மன்றத்திலே வழக்குகள் பெருகுவதும். அந்த வழக்குகளில் வழக்குரைஞர்கள் வாய்தா வாங்கியே வழக்கறிஞர்களாக ஆவதும். அத்தகைய வழக்குகளை தள்ளி வைத்து வாய்தா கொடுத்தே  வாய்தா  மன்றங்களாக ,வாய்தா
ராஜக்களாக பேர் வாங்குவதும்..

 அபூர்வமாக ஒரு சில  நீதி ராஜாக்கள்  உத்தரவிட்ட பின்பும் அந்த உத்தரவை அமுல் படுத்தி நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து தண்டிக்காத பல வாய்தா ராஜக்கள் இருக்கும்போது..................

அதிகாரிகளுக்கு நாட்டுப்பற்றா வரும்.............????????????


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...